'காஞ்சனா 4' படத்துக்கு ரெடியாகும் ராகவா லாரன்ஸ்.. ஹீரோயின் இவங்களா?

காஞ்சனா 4 கதையை எழுதி முடித்துவிட்டதாக சமீபத்தில் ராகவா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.ரூ.100 கோடி பட்ஜட்டில் கோல்டுமைன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
'காஞ்சனா 4' படத்துக்கு ரெடியாகும் ராகவா லாரன்ஸ்.. ஹீரோயின் இவங்களா?
Published on

ஹாரர் ஜானர் படங்களுக்குப் பெயர்போன ராகவா லாரன்ஸ் தனது பிரபல காஞ்சனா திரைப்பட சீரிஸில் 5 வது படத்தை இயக்க உள்ளார். அதாவது, கடந்த 2007 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மற்ற பேய் படங்களிலிருந்து மாறுபட்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில் அதைத்தொடர்ந்து முற்றிலும் காமெடி ஹாரர் ஜானரில் அவர் இயக்கிய காஞ்சனா திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகியது.

அதுவரை ஹாரர் படங்களுக்கு இருந்த டெம்ப்லேட் கதைகளை மாற்றி தனது பாணியில் காஞ்சனா படத்தை இயக்கி அதில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து 2015 இல் காஞ்சனா 2, 2019 இல் காஞ்சனா 3 என இயக்கி வெளியிட்டார். குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த படங்கள் அமைந்த நிலையில் தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளார். காஞ்சனா ஜானரை பின்பற்றி எடுக்கப்பட்ட சுந்தர் சி யின் அரண்மனை திரைப்படங்களில் சமீபத்தில் அரண்மனை 4 வரை வெளியாகியிருந்தது. இடையே பி.வாசு இயக்கத்தில் ஹாரர் ஜானரில் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா, சந்திரமுகி 2 ஆகியவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மீண்டும் இயக்குனராக மாறி எடுக்க உள்ள காஞ்சனா 4 படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காஞ்சனா 4 கதையை எழுதி முடித்துவிட்டதாக சமீபத்தில் ராகவா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படமானது ரூ.100 கோடி பட்ஜட்டில் கோல்டுமைன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தனது படத்திற்கான ஹீரோயின் தேர்வில் அதிக கவனம் செலுத்தும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 படத்தில் விஜய்யின் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்ய உள்ளாராம். அவரை படத்தின் ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முனதாக இந்த படத்தில் மிர்னால் தாக்கூர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தகக்து.

 உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com