என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரஜினி ரசிகராக விஜய் சத்யாவின் தில்ராஜா - ரிலீஸ் எப்போ தெரியுமா?
    X

    ரஜினி ரசிகராக விஜய் சத்யாவின் "தில்ராஜா" - ரிலீஸ் எப்போ தெரியுமா?

    • இந்த படத்திற்காக விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.
    • இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

    கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு "தில் ராஜா" என்று பெயரிடப்பட்டுள்ளது. சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

    இந்த படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், கலைகுமார் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை மனோ V.நாராயணா மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் அர்ஷ் மேற்கொண்டுள்ளார்.

    படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவுற்று வெயியீடிற்கு தயாராக உள்ளது. திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். நாயகன் விஜய் சத்யா படத்தில் தீவிர ரஜினி ரசிகராக நடித்துள்ளார். அவரோடு இணைந்து நாய் ஒன்றும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்துள்ளது.

    பிவிஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை இம்மாதம் திரையரங்குகளில் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×