'கடைசி உலகப் போர்' டிரைலர் வெளியானது - ஹிப்ஹாப் ஆதியை புகழ்ந்து பேசிய சுந்தர் சி

கடைசி உலகப் போர் திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
kadaisi ulaga por - sundhar c
Published on

ஹிப்ஹாப் தமிழா ஆதி கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது.

அடுத்ததாக `கடைசி உலகப் போர்' படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.

இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் ஆக்சன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி, "என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது.

என்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை வளர்ந்து  வந்திருப்பது மகிழ்ச்சி. ஆதியை மட்டும் தான் நான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com