என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கடந்த ஜூன் 12 ஆம் தேதி நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் வெளியானது.
    • சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியிருந்தது.

    நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் கடந்த ஜூன் 12 ஆம் தேதி 'இந்தியன் 2' படத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

    மாணவர்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியிருந்தது.

    இந்நிலையில், தற்போது 'டீன்ஸ்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தகவலை பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அண்மையில் கேரளாவின் தேக்கடிக்கு அஜித்குமார் பைக் ரைட் சென்றுள்ளார்.
    • தேக்கடியில் உள்ள தனியார் ஓட்டலில் அஜித் தங்கியிருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர். அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக் ட்ரிப் கிளம்பி விடுவார் அஜித்.

    அண்மையில் கேரளாவின் தேக்கடிக்கு அஜித்குமார் பைக் ரைட் சென்றுள்ளார். அப்போது தேக்கடியில் உள்ள தனியார் ஓட்டலில் அஜித் தங்கியிருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

    தல அஜித்தின் எளிமையை பாருங்கள் என்று அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் வடிவேலு மாரீசன் படத்தில் நடித்துள்ளார்.
    • மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு மாரீசன் படத்தில் நடித்துள்ளார். மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்து மாரீசன் படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சிரித்துக்கொண்டு மக்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக நடனம் ஆடுவதுப்போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது.
    • நடிகர் ஜீவா உள்பட அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்துக் கொண்டிருந்தார்.

    அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது.

    இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில், நடிகர் ஜீவா உள்பட அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்தது.

    இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கியது தொடர்பாக நடிகர் ஜீவா சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விபத்திற்கு காரணமான இரு சக்கர வாகன ஓட்டி மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்துள்ளார்.

    • தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படம்
    • திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இவ்விழாவில் பட குழுவினருடன் ' மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து படத்தின் இசையை விஜய் சேதுபதி வெளியிட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

    ஏகனுடைய பெரியப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். படங்களில் நான் லோக்கலாக 'கவுன்ட்டர்' அடித்து கொண்டிருப்பேன். ஆனால் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட என்னை 'கவுன்ட்டர்' அடிக்க விடாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தி விட்டார் இயக்குநர் சீனு ராமசாமி. படமாக பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பேசுகையில், ''சகோதரன் ஏகனுக்கு முதலில் வாழ்த்துகள். இதுபோன்ற மேடையில் 11 ஆண்டுகளுக்கு முன் நிற்கும்போது உங்கள் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. நான் மிகவும் நடுக்கத்துடன் தான் இருந்தேன். ஆனால் உங்கள் முகத்தில் நல்லதொரு நம்பிக்கை தெரிகிறது. பாடல்களிலும் காட்சிகளிலும் உங்களுடைய நடிப்பு நன்றாக இருக்கிறது. இந்த விழா எப்படி இருக்கிறது என்றால்... நான் இருந்த இடத்தில் என்னுடைய 'பாஸ்ட்' டும், 'பிரசென்ட்'டும் இருப்பது போல் இருக்கிறது. ஆனால் உங்களுடைய 'ஃபியூச்சர்' என்னை விட சிறப்பாக இருக்க வேண்டும் என ஏகனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், ''சினிமா உண்மையிலேயே ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் இடைவேளை என்ற ஒரு விஷயத்தை நீக்கிவிட வேண்டும். இது மிக முக்கியமான கருத்து. உடனடியாக திரையரங்குகளில் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் என் மீது கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை சாப்பிடுவார்கள்.

    சினிமா என்பது முழு உடல். அதனை அரை மணி நேரம் பார்த்துவிட்டு அப்படியே நிறுத்திவிட்டு, இதற்கு முன் எப்படி இருக்கும் எனக் கேட்பது தவறு. முழு உடல், முழு தரிசனம். அப்படி ஒரு முழு தரிசனம் இந்த 'கோழிப்பண்ணை செல்லதுரை'யில் கிடைக்கும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்து கலக்கிருப்பார்.
    • ஜவான் திரைப்படம் ஜப்பானில் வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் ஜவான். இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்து கலக்கிருப்பார்.

    இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் செய்தது. இதுவரை திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. ஊழல் மிக்க இந்த சமூதாயத்தை தட்டிக் கேட்கும் தந்தை மற்றும் மகனின் கதையாகும். திரைப்படம் வெளியாகி 1 வருடம் ஆன நிலையில். அதை நினைவூட்டும் வகையில் ஷாருக்கான் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    இந்நிலையில் ஜவான் திரைப்படம் ஜப்பானில் வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளனர். ஜப்பானில் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதற்கு ஃபிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

    நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    படத்திற்கு "Bloody Beggar" என தலைப்பிடப்பட்டுள்ளது.திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார்.

    படத்தின் முதல் பாடலான நான் யார்? என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலின் மூலம் படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த உள்ளார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏராளமான நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபடி இருக்கின்றனர்.
    • இயக்குனர் வி.கே.பிரகாஷூம் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிட்டி வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

    அதனைத்தொடர்ந்து ஏராளமான நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபடி இருக்கின்றனர். நடிகைகளின் இந்த குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் கடும் புயலை கிளப்பியிருக்கிறது.

    நடிகைகள் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. தங்களின் மீது பதியப்பட்டுள்ள பாலியல் வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் கேட்டு முகேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இயக்குனர் வி.கே.பிரகாஷூம் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பெண் திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டிருந்தது.

    அந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் கேட்டு தான் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வி.கே.பிரகாஷூக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

    இதேபோன்று நடிகர்கள் ஜெயசூர்யா, பாபுராஜ் ஆகியோரும் தங்களின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.

    • படத்தை ராஜூ முருகனின் உதவி இயக்குநர் தினா ராகவன் இயக்க உள்ளார்.
    • தென்சென்னையில் வாழும் சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை நகைச்சுவையாக கூறும் படமாக உருவாகிறது.

    நடிகர் கவுதம் கார்த்திக் ' கிரிமினல் ' மற்றும் ' மிஸ்டர் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    'ஜிப்ஸி', 'ஜப்பான்' படங்களை இயக்கிய ராஜூ முருகன் வசனம் எழுதும் படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். அவரின் பிறந்தநாளையொட்டி GK 19 பட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.



    இப்படத்தை ராஜூ முருகனின் உதவி இயக்குநர் தினா ராகவன் இயக்க உள்ளார். தென்சென்னையில் வாழும் சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை நகைச்சுவையாக கூறும் படமாக உருவாகிறது.

    இந்த படத்தை எம். ஜி. ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இணைந்து தயாரிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • ராஜ்தருணுடன் 11 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தேன் என லாவண்யா கூறினார்.
    • இப்போது நடிகை மால்வி மல்கோத்ராவுடன் தொடர்பு ஏற்பட்டு அவரோடு சுற்றுகிறார் எனவும் கூறினார்.

    தெலுங்கு நடிகரான ராஜ் தருண் 2013-ம் ஆண்டு வெளியான உய்யால ஜம்பாலா படம் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார்.இவர் மீது லாவண்யா என்ற பெண் போலீசில் புகார் அளித்தார். புகார் மனுவில், "ராஜ்தருணுடன் 11 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தேன். இதனால் கர்ப்பமான என்னை கருக்கலைப்பு செய்ய நிர்ப்பந்தித்தார். இப்போது நடிகை மால்வி மல்கோத்ராவுடன் தொடர்பு ஏற்பட்டு அவரோடு சுற்றுகிறார். என்னை துன்புறுத்துகிறார்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ராஜ்தருண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது நகைகளை திருடி விட்டதாக மால்வி மல்கோத்ரா மீது லாவண்யா போலீசில் இன்னொரு புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், "எனக்கு சொந்தமான தங்க வளையல்கள், தாலி சரடு, பிரேஸ்லெட், செயின் போன்ற நகைகளை ராஜ் தருணுடன் இணைந்து மால்வி மல்கோத்ரா திருடிச் சென்று விட்டார். இவற்றின் மதிப்பு ரூ.11 லட்சம். எங்கள் வீட்டுக்கு மூன்று முறை அவர் வந்துள்ளார். நகைகள் வைத்திருந்த பீரோ சாவி அவரிடம்தான் இருக்கிறது'' என்று கூறியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதனை சொல்வேன்.
    • தயவு செய்து அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடம் இருந்து வரும் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.

    பிரபல கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா தமிழில் ரம்யா என்ற பெயரில் சிம்பு ஜோடியாக குத்து என்ற படத்தில் அறிமுகமானார். தனுசின் பொல்லாதவன், ஜீவாவுடன் சிங்கம்புலி, அர்ஜுனுடன் கிரி, சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் பதவி வகித்தார்.

    இந்த நிலையில் ரம்யாவுக்கு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபருடன் திருமணம் முடிவாகி இருப்பதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

    இதனால் காட்டமான ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். எத்தனை முறை இதை செய்தனர் என்று தெரியவில்லை.

    எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதனை சொல்வேன். தயவு செய்து அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடம் இருந்து வரும் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்'' என்று கூறியுள்ளார்.

    • கடனை திருப்பி செலுத்தாததால் 2020-ம் ஆண்டு நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கை பைனான்சியர் கோபி தொடர்ந்தார்.
    • கோபி தரப்பிலும் சிங்காரவேலன் தரப்பிலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

    நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்த 'மன்னர் வகையறா' என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூ.5 கோடி கடன் கொடுத்திருந்தார். பட வெளியீட்டின்போது நடிகர் விமலால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் படங்களில் நடித்தும், வேறு படங்களை தயாரித்து அதிலிருந்து வரும் லாபத்திலிருந்தும் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக 2018-ம் ஆண்டு உத்தரவாதம் நடிகர் விமல் அளித்திருந்தார். ஆனால் சொன்னபடி கடனை திருப்பி செலுத்தாததால் 2020-ம் ஆண்டு நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கை பைனான்சியர் கோபி தொடர்ந்தார்.

    வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் தப்பிப்பதற்காக குறுக்கு வழியில் இறங்கிய நடிகர் விமல் கடன் கொடுத்த கோபி, கடனுக்கு பரிந்துரை செய்த கோபியின் நண்பரும் 'லிங்கா' பட விநியோகஸ்தருமான சிங்காரவேலன் மற்றும் சிங்காரவேலனின் மேலாளர் விக்னேஷ் ஆகியோர் கூட்டு சதி செய்து தன்னை ஏமாற்றி தன் வங்கிக் கணக்கிலிருந்து தனக்கே தெரியாமல் ரூபாய் இரண்டு கோடியை எடுத்து விட்டதாக கூறி 2021-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அதிகார வர்க்கத்தினரின் மூலம் அழுத்தத்தையும் கொடுத்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி சிங்காரவேலன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். கோபி மற்றும் விக்னேஷ் உயர்நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற்று கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பினர். அதன் பிறகு 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் தங்கள் மீது ஆதாரமற்ற பொய்யான வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதியரசர் சதீஷ்குமார் காவல்துறையினர் இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், 2023-ம் ஆண்டு வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மேற்கண்ட வழக்கை விசாரித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் இரண்டு மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன் பின்னரும் வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றம் இல்லாததால் 2024-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான காவல்துறை தரப்பு இரண்டு வாரங்களுக்குள் தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக உத்தரவாதம் அளித்தது.

    அதன் பின்னர் இந்த வழக்கில் வேகம் காட்டிய காவல்துறை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டது. கோபி தரப்பிலும் சிங்காரவேலன் தரப்பிலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

    ஆவணங்களின் அடிப்படையில் கோபி, சிங்காரவேலன் மற்றும் விக்னேஷ் மீது நடிகர் விமல் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்திற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனவும், ஆதாரங்கள் எதையும் நடிகர் விமல் சமர்பிக்காத காரணத்தினாலும், மேற்படி வழக்கை மேல் விசாரணை ஏதுமின்றி முடித்து கொள்வதாக கூறி நீதிமன்றத்தில் விருகம்பாக்கம் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

    இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஆய்வாளர் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

    இதன் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தப்பிப்பதற்காக பைனான்சியர் கோபி மற்றும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஆகியோர் மீது நடிகர் விமல் கொடுத்திருப்பது பொய் புகார் என்பது நிரூபணமாகியுள்ளது.

    ×