கவின் நடித்துள்ள `ப்ளடி பெக்கர்' படத்தின் ப்ரோமோ பாடல்

நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார்.
கவின் நடித்துள்ள `ப்ளடி பெக்கர்' படத்தின் ப்ரோமோ பாடல்
Published on

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதற்கு ஃபிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

படத்திற்கு "Bloody Beggar" என தலைப்பிடப்பட்டுள்ளது.திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார்.

படத்தின் முதல் பாடலான நான் யார்? என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலின் மூலம் படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த உள்ளார்கள்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com