என் மலர்
சினிமா செய்திகள்
- நந்தன் திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.
உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்
இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. டிரைலர் காட்சிகளில் மிகவும் மாறுப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சசிகுமார். ஒரு கிராமத்தில் நடக்கின்ற எமோஷனலான அரசியல் கதைக்களத்தை ஒட்டி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பாலாஜி சக்திவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் டிரைலர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேவரா வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- தேவரா படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியானது.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் 3 - வது பாடலான தாவூதி பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், தேவரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்தை பார்த்தை சென்சார் அதிகாரிகள் நான்கு காட்சிகளை நீக்குமாறு தெரிவித்துள்ளனராம். அதிகப்படியான வன்முறை காட்சிகள் இடம்பிடித்திருப்பதால் அவற்றை நீக்குமாறு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
- அவரது முந்தைய படம் 'உடன்பிறப்பே' மிகவும் மிகவும் எமோஷனலான படம்.
இரா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும் புதிய படம் நந்தன். இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் எச் வினோத், "நண்பர் இரா. சரவணன் இப்படத்தை பார்க்க சொல்லி, கடந்த சில மாதங்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன்"

"அவரது முந்தைய படம் 'உடன்பிறப்பே' மிகவும் மிகவும் எமோஷனலான படம், அதனால் அவர் படமே வேண்டாம் என, தவிர்த்து வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது."
"நான் கிராமத்திலேயே வளர்ந்து இருந்தாலும், இந்த படம் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன். அந்த வகையில், இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது."
"சசிகுமார் பொருட்காட்சியில் வைக்கும் அளவு, சிறந்த மனிதர் என்பதாலோ, சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலோ, இதை சொல்லவில்லை, உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம்," என்று தெரிவித்தார்.
- இந்தியா அணி வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி 19-ந் தேதி தொடங்குகிறது.
- டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்னை வந்துள்ளது.
இந்தியா- வங்கதேசம் அணிகள் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் மோத உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி சென்னைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் விமான பயனத்தின்போது விராட் கோலியை சந்தித்து அவருடன் நடிகை ராதிகா சரத்குமார் செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக ராதிகா சரத்குமாரின் எக்ஸ் தள பதிவில், "இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னையில்தான் விளையாடவுள்ளேன் என்றார். அவர் வெற்றி பெற வாழ்த்தினேன். செல்ஃபிக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் ப்ளடி பெக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் ப்ளடி பெக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான நான் யார்? என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் நடித்த நடிகர்கள் இப்பாடலில் உள்ளனர். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோவை நெலசன் திலிப்குமார் இயக்கியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.
- இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் நடைப்பெற்ற நேர்காணலில் இயக்குனர் பிரேம் குமார் அவரது வாழ்க்கையில் நடைப்பெற்ற சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துக்கொண்டார். அதில் அவர் " மெய்யழகன் படத்தின் கதையை எழுதி முடித்த நேரத்தில் 96 படத்தில் நான் சம்பாதித்த பணம் அனைத்தும் தீர்ந்துப் போனது. அப்பொழுது லயோலா கல்லூரியில் ஒரு செமினார் வகுப்பு நடத்த என்னை அழைத்தார்கள். நானும் சென்றேன் வகுப்புகளை நடத்தினேன். அதை முடித்து விட்டு காரில் வெளிவரும் பொழுது காரில் டீசல் தீரும் நிலையில் இருப்பதை நான் கவனித்தேன். இந்த லயோலா கல்லூரியை விட்டு வெளியே சென்றபின் கார் நின்றால் பரவாயில்லை என்ற நினைப்பில் இருந்தேன். அப்பொழுது லயோலா கல்லூரி மாணவன் ஒருவன் வந்து நான் எடுத்த செமினாருக்காக கல்லூரி சார்பாக மெமண்டோ பரிசைக் கொடுத்தான். நான் அதை சிறிய பரிசாக எண்ணி அதை கார் சீட்டில் வைத்தேன்.
அப்பொழுது தான் அந்த கவரில் நான் வந்ததற்கான கன்வீனியன்ஸ் ஃபீஸ் அதில் இருந்தது. அந்த பணத்தை வைத்துதான் நான் என் காருக்கு டீசல் போட்டு வீட்டிற்கு சென்றேன். அதற்கு அடுத்தநாள் கார்த்தி சார் எனக்கு கால் செய்து உங்களிடம் எதோ கதை இருக்காமே , என்னை சந்திப்பதற்கு யோசித்துக் கொண்டு இருப்பதுப்போல் கேள்விப்பட்டேன். " என்று மெய்யழகன் படம் கமிட் ஆவதற்கு முன் இருந்த சூழலை மிகவும் எமோஷ்னலாக கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.
- கே.வி. என் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது தளபதி விஜய்க்காக ஒரு டிரிபியூட் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.
தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை சமீபத்தில் எச்.வினோத் ஒரு விருது வழங்கும் விழாவில் கூறினார்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படத்தின் படத்தொகுப்பாளராக பிரதீப் இ ராகவ் பணியாற்றவுள்ளார் என தகவல்கள் வெளியாகின.
கே.வி. என் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது தளபதி விஜய்க்காக ஒரு டிரிபியூட் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அவர் நடிக்கும் கடைசி திரைப்படமாக பேசப்படுகிறது. மக்களும் ரசிகர்களும் அதற்கான வெளிபாடுகளையும் , வருத்தத்தையும் தெரிவித்து வருவதுப் போல் மிகவும் எமோஷனலான வீடியோவாக அமைந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
- இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளை இன்று ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் முடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போட்டோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார்.
- நடிகர் அஜித் புது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
நடிப்பதை தவிர்த்து நடிகர் அஜித் கார் ரேஸில் மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். பைக்கில் பல ஊர்கள் சென்று தன்னுடைய நேரத்தை செலவிட அதிகம் விரும்பவர்.
இந்நிலையில் நடிகர் அஜித் புது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். போர்ச் GT3 RS ரக காரை அஜித் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 4 கோடி ரூபாய் ஆகும். இதற்கு முன் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி காரை வாங்கினார். இந்த காரின் புகைப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.
- இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என அவர் அறிவித்து இருந்தார்.
விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என அவர் அறிவித்து இருந்தார். அதற்கடுத்து முழுவதும் அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.
தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை சமீபத்தில் எச்.வினோத் ஒரு விருது வழங்கும் விழாவில் கூறினார்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படத்தின் படத்தொகுப்பாளராக பிரதீப் இ ராகவ் பணியாற்றவுள்ளார் என தகவல்கள் வெளியாகின.
கே.வி. என் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது அவர்கள் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் என விஜய் படத்தில் உல்ல கிளிம்ப்ஸ் காட்சிகளை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெனம் படத்தின் மூன்றாவது மற்றும் கடைசி பாகம் 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'
- இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யிலும் படம் வெளியாகிறது
மார்வெல் யுனிவெர்சின் வெற்றிக்கு விதை போட்டது ஸ்பைடர் மேன் படங்கள் என்று கூற முடியும். அந்த வகையில் ஸ்பைடர் மேன் மூன்றாவது பாகத்தில் அனைவரையும் மிரட்டிய வில்லனான வெனம் கதாபாத்திரத்துக்கு என தனியே கடந்த 2018 ஆம் ஆண்டு மெதட் ஆக்டர் டாம் ஹார்டி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து 2021 இல் இரண்டாம் பாகமும் வெளியானது. டாம் ஹார்டியின் உடலுக்குள் புகுந்த வெனம் மூலம் antihero வாக பரிணமிப்பதே இந்த படங்களின் ஒன் லைன். இந்நிலையில் வெனம் படத்தின் மூன்றாவது மற்றும் கடைசி பாகமான 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் கெல்லி மார்செல் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். Sony பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா இந்தப் படத்தை, அக்டோபர் 25, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யிலும் படம் வெளியாகிறது. இந்நிலையில் வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' படத்தின் இறுதி டிரைலர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்களிலும் நடக்கும் பல்வேறு விஷயங்களால் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். இது வெனோம் மற்றும் எடி என்ற ஆண்டி ஹீரோ ஃப்ரான்சைசிஸின் மறக்க முடியாத இறுதிப் பயணமாக 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
- கோல்டன் ஸ்பேரோ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் மற்றும் துஷரா விஜயன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் 3 திரைப்படமாகும். படத்தின் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது தனுஷ் இயக்கவிருக்கும் 4- வது படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷ், அருண் விஜய் மற்றும் அசோக் செல்வன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தனுஷ் கதாநாயகனாகவும், அருண் விஜய் வில்லனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் மிகப்பெரிய பொருட் செல்வில் தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாயில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்த மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






