மிரட்டும் மார்வெல்..'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' படத்தின் இறுதி டிரைலர் வெளியீடு

வெனம் படத்தின் மூன்றாவது மற்றும் கடைசி பாகம் 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யிலும் படம் வெளியாகிறது
மிரட்டும் மார்வெல்..'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'  படத்தின் இறுதி டிரைலர் வெளியீடு
Published on

மார்வெல் யுனிவெர்சின் வெற்றிக்கு விதை போட்டது ஸ்பைடர் மேன் படங்கள் என்று கூற முடியும். அந்த வகையில் ஸ்பைடர் மேன் மூன்றாவது பாகத்தில் அனைவரையும் மிரட்டிய வில்லனான வெனம் கதாபாத்திரத்துக்கு என தனியே கடந்த 2018 ஆம் ஆண்டு மெதட் ஆக்டர் டாம் ஹார்டி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து 2021 இல் இரண்டாம் பாகமும் வெளியானது. டாம் ஹார்டியின் உடலுக்குள் புகுந்த வெனம் மூலம் antihero வாக பரிணமிப்பதே இந்த படங்களின் ஒன் லைன். இந்நிலையில் வெனம் படத்தின் மூன்றாவது மற்றும் கடைசி  பாகமான 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'முழுவீச்சில் தயாராகி வருகிறது.

இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் கெல்லி மார்செல் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். Sony பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா இந்தப் படத்தை, அக்டோபர் 25, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யிலும் படம் வெளியாகிறது. இந்நிலையில் வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' படத்தின் இறுதி டிரைலர் தற்போது  வெளியாகி கவனம் பெற்று வருகிறது. எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்களிலும் நடக்கும் பல்வேறு விஷயங்களால் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். இது வெனோம் மற்றும் எடி என்ற ஆண்டி ஹீரோ ஃப்ரான்சைசிஸின் மறக்க முடியாத இறுதிப் பயணமாக 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com