என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தளபதி 69 படத்தை எச். வினோத் இயக்கவுள்ளார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

    தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    தளபதி 69 படத்திற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு போஸ்டரில் தீப்பந்தம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு எனும் பொருள் படும் 'The Torch Bearer Of Democracy' என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். என்று சொல்லப்படுகிறது.

    இப்படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான 'தளபதி' விஜய் அவர்களுடன் இணையும் தளபதி- 69 தமிழில் தங்களது முதலாவது தயாரிப்பாக அமைவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.

    இந்த படம் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான புகழ்பெற்ற 'தளபதி'விஜய்-க்கும்,புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம், புகழ்பெற்ற இயக்குனர் எச். வினோத் மற்றும் தரவரிசையில் இடம் பிடிக்கும் பாடல்களைத் தந்த 'அனிருத் ரவிச்சந்தர்' ஆகியோர் இடையிலான குறிப்பிடத்தக்க புதுமையான கூட்டணியாக அமைகிறது.

    தனது அற்புதமான நடிப்புக்கும், பெரும் ரசிகர் பட்டாளத்துக்கும் பெயர் பெற்ற 'தளபதி'விஜய், 'தளபதி-69'-இல் இதற்கு முன்பு பார்த்திராத தோற்றத்தில் தோன்ற உள்ளார். தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விநியோகப்பதற்கும் பெயர் பெற்ற வெங்கட் கே நாராயணா அவர்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில், 'தளபதி-69'-ஐ தயாரிப்பதன் மூலம் தலைசிறந்த படைப்பை வழங்க உறுதிபூண்டுள்ளனர். இத்திரைப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதுலோகித் என்.கே இணைந்து தயாரிக்கிறார்கள்.

    குறிப்பிடத்தக்க தனது முந்தைய படைப்புகளின் மூலம் பாராட்டப்பட்ட திறமையான இயக்குனரான எச். வினோத் அவர்கள் இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு உயிரளிக்கிறார். 'தளபதி'விஜய் மற்றும் எச்.வினோத் முதன்முறையாக  கூட்டணி சேர்வதன் மூலம் ஒரு புதுமையான மற்றும் அற்புதமான சினிமா அனுபவத்தை அளிக்கும் திரைப்படமாக அமையும் என்பது உறுதியாகிறது.

    இதற்கு முன்பு 'தளபதி'விஜய் நடித்த திரைப்படங்களான கத்தி, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ போன்ற  படங்களுக்கு இசையமைத்து, வெற்றிப் பாடல்களைத் தந்த 'அனிருத் ரவிச்சந்தர்' இத்திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் 'தளபதி' விஜய் அவர்களுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்.

    இத்திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை எதிர் நோக்குகிறோம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த அக்டோபரில் துவங்கி, அடுத்த ஆண்டு அக்டோபர்-2025-இல் வெளியாக உள்ளது.

    மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்கள் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கே வி என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் 'தளபதி' விஜய் அவரது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகளையும் இப்படப்பிடிப்பின் போது உருவாகும் புதிய நினைவுகளையும் பகிர்ந்து கொள்ள பிரத்யேக வியூகத்தை வகுத்துள்ளது.

    இந்த பிரம்மாண்டமான பயணத்தில் தங்களது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம். இதை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் அன்பு மற்றும் மகிழ்ச்சியை பகிருங்கள். நிறைய அறிவிப்புகள் வரவுள்ளன காத்திருங்கள்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை மஞ்சு வாரியார் செப்டம்பர் 10 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார்.
    • அனுராக் காஷ்யப்புடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை நடிகை மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார்.

    நடிகை மஞ்சு வாரியர் மற்றும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் தங்களது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.

    இருவரும் தங்களது பிறந்தநாளான செப்டம்பர் 20 ஆம் தேதி ஒன்றாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை நடிகை மஞ்சு வாரியர்தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் தற்போது தமிழிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த மகாராஜா திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

    மஞ்சு வாரியர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படத்தின் அடுத்த பாடலான `படிச்சிக்கிறோம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்பாடலை பத்ம பிரியா மற்றும் பிரார்தனா ஸ்ரீராம் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலிற்கு விவேகா வரிகளை எழுதியுள்ளார்.

    திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துள்ளார் என்பதை தயாரிப்பு நிறுவனம் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் Mission accomplished with precision! என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹாலிவுட் நடிகரான Chad Mcqueen உடல்நலக் குறைப்பாடால் காலமானார்.
    • தி கராத்தே கிட் என்ற படத்தில் டச் கதாப்பாத்திரத்தின் மூலம் புகழடைந்தார்.

    ஹாலிவுட் நடிகரான Chad McQueen {63} உடல்நலக் குறைப்பாடால் கடந்த 11 ஆம் தேதி காலமானார். Chad Mcqueen பிரபல கார் ரேஸரான ஸ்டீவ்- இன் மகனாவார்.

    இவர் 1984-ல் வெளியான தி கராத்தே கிட் என்ற படத்தில் டச் கதாப்பாத்திரத்தின் மூலம் புகழடைந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    கராத்தே கிட் படத்தை தொடர்ந்து மார்ஷியல் லா, ஜிம்மி ஹாலிவுட் மற்றும் ரெட் லைன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். நடிப்பு மட்டும் அல்லாமல் கார் ரேஸிங்கில் மிகவும் ஆர்வம் உள்ளவர். பல ரேஸிங் போட்டியில் கலந்து பரிசுகளை வென்றுள்ளார்.

    இவருக்கு சொந்தமாக கார் கஸ்டமைஸ் செய்யும் நிறுவனம் இருக்கிறது அதை தற்பொழுது இவரது மகன் பார்த்துக் கொண்டுள்ளார்.

    • நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.
    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்படம் வெற்றிகரமாக அதன் இரண்டாம் வாரத்தில் பெரும்பாலான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்த வார இறுதியில் 200 கோடி ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • `மனசிலாயோ' பாடலின் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ' பாடலின் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடலை பாடியுள்ளார்.

     மஞ்சுமா வாரியர் படத்தில்  நடித்த கதாப்பாத்திரத்தை பற்றி சமீபத்தில் நடந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் " நான் இத்திரைப்படத்தில் தாரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். தாரா ஒரு வ்லாக்கர் ஆவார். ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்துள்ளேன். ரஜினி சாருடன் இணைந்து நடித்ததில் பெரும் மகிழ்ச்சி. படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியமான பங்கு இருக்கிறது. மனசிலாயோ பாடலில் ஆடியது மிகவும் புது அனுபவமாக இருந்தது. அத்தனை நடன கலைஞருடன் இணைந்து ஒரே ஸ்டெப் ஆடுவது மகிழ்ச்சியாக இருந்தது." என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் சங்கத்தில் இருக்கும் இயக்குனர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக பலர் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
    • இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

    இயக்குநர்கள் ,உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் திருமதி.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் வருடாவருடம் ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்து முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கு நேற்று 13.09.2024 ரூ.5 லட்சம்  சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் வழங்க செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

    நிர்வாகிகள் இயக்குனர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதுபோன்று தமிழ் இயக்குனர் சங்கத்தில் இருக்கும் இயக்குனர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக பலர் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • இதில் அபிஷேக் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இத்தொடரை பாலகுமரன் முருகேசன் எழுத்தில் நாகா இயக்கியுள்ளார்.

    2020 ஆம் ஆண்டு தி வைரல் ஃபீவர் தயாரிப்பில் ஜிதேந்திர குமார் , ரகுபிர் யாதவ், நீனா குப்தா மற்றும் பலர் நடித்து அமேசான் பிரைமில் வெளியானது இந்தி வெப்தொடரான பஞ்சாயத். இந்த வெப் தொடருக்கு பல ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்பொழுது வரை 4 சீசன் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இத்தொடரை தற்பொழுது தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இதில் அபிஷேக் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சேத்தன் மற்றும் தேவதர்ஷினி நடித்துள்ளனர்.

    தமிழில் தலைவெட்டியான் பாளையம் என தலைப்பிட்டுள்ளனர். இத்தொடர் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இத்தொடர் 8 எபிசோட்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது.

    நகர்புற இளைஞன் அரசாங்க வேலைக்காக ஒரு கிராமத்தில் பணியமர்த்த படுகிறான். அங்கு அவன் படும் கஷ்டம் மற்றும் சமூக சிக்கல்களை குறித்து இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொடரை பாலகுமரன் முருகேசன் எழுத்தில் நாகா இயக்கியுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கங்குவா திரைப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தனர்
    • இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.

    இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். கங்குவா படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்து இருந்தது. படத்தின் டிரைலர் மற்றும் ஃபயர் சாங் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    கங்குவா திரைப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தனர். ஆனால் அதே தேதியில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியாவதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. மாற்றுத் தேதி இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.

    திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இந்த வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் சதீஷுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
    • திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். அதைத்தொடர்ந்து வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

    கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் சதீஷுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து சட்டம் என் கையில் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

    இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார். சதீஷுடன் இணைந்து வித்யா பிரதீப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. டீசர் காட்சிகள் மிகவும் திரில்லிங்காக அமைந்துள்ளது. யாரோ ஒருவர் கொலை செய்கிறார். அது யார் செய்தது என்பதை தேடும் பணிகளில் காவல் அதிகாரிகள் இருக்க மறுபக்கம் சதீஷ் இச்சம்பவத்தில் எப்படி உள்ளே வந்தார் என டீசர் காட்சிகள் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏராளமான நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
    • ஏற்கனவே 2019-ல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரை உலகம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திரை உலகில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திய பாலியல் புகாரால் மலையாள நடிகர், நடிகைகளின் அமைப்பான 'அம்மா' அமைப்பு நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஏராளமான நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை வெளிப்படுத்தினர்.

    மலையாள திரை உலகத்தை போன்று தமிழ் திரை உலகத்திலும் பாலியல் சம்பவங்கள் நடந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சில நடிகைகள் வெளிப்படுத்தி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழ் திரை உலகில் நடக்கும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. குழுவின் தலைவராக நடிகை ரோகிணி நியமனம் செய்யப்பட்டார்.

    ஏற்கனவே 2019-ல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் பாலியல் சம்பவங்களில் யாரேனும் பாதிக்கப்பட்டால் இந்த குழுவில் தாராளமாக புகார் செய்யலாம். புகார் தெரிவிப்பதற்கான தனி மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

    புகார்கள் விசாரிக்கப் பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 5 ஆண்டுகள் சினிமா தொழிலில் இருந்து தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    மேலும் புகார் பற்றி வெளியில் பேசாமல் குழுவில் புகார் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி விசாரணை குழுவின் தலைவரான ரோகிணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பலர் குழுவில் புகார் அளித்து வருகிறார்கள். இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

    புகார் கொடுத்தவர்களின் விவரங்களை வெளியே சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. பாலியலால் பாதிக்கப்பட்டோர் தாராளமாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×