சதீஷ் நடித்த ஆக்ஷன் திரில்லர் படமான `சட்டம் என் கையில்' படத்தின் டீசர் வெளியானது

கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் சதீஷுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சதீஷ் நடித்த ஆக்ஷன் திரில்லர் படமான `சட்டம் என் கையில்' படத்தின் டீசர் வெளியானது
Published on

நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். அதைத்தொடர்ந்து வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் சதீஷுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து சட்டம் என் கையில் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார். சதீஷுடன் இணைந்து வித்யா பிரதீப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. டீசர் காட்சிகள் மிகவும் திரில்லிங்காக அமைந்துள்ளது. யாரோ ஒருவர் கொலை செய்கிறார். அது யார் செய்தது என்பதை தேடும் பணிகளில் காவல் அதிகாரிகள் இருக்க மறுபக்கம் சதீஷ் இச்சம்பவத்தில் எப்படி உள்ளே வந்தார் என டீசர் காட்சிகள் அமைந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com