search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    The Torch Bearer Of Democracy - தளபதி 69 படத்தை இயக்குகிறார் எச்.வினோத்
    X

    'The Torch Bearer Of Democracy' - தளபதி 69 படத்தை இயக்குகிறார் எச்.வினோத்

    • தளபதி 69 படத்தை எச். வினோத் இயக்கவுள்ளார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

    தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    தளபதி 69 படத்திற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு போஸ்டரில் தீப்பந்தம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு எனும் பொருள் படும் 'The Torch Bearer Of Democracy' என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். என்று சொல்லப்படுகிறது.

    இப்படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான 'தளபதி' விஜய் அவர்களுடன் இணையும் தளபதி- 69 தமிழில் தங்களது முதலாவது தயாரிப்பாக அமைவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.

    இந்த படம் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான புகழ்பெற்ற 'தளபதி'விஜய்-க்கும்,புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம், புகழ்பெற்ற இயக்குனர் எச். வினோத் மற்றும் தரவரிசையில் இடம் பிடிக்கும் பாடல்களைத் தந்த 'அனிருத் ரவிச்சந்தர்' ஆகியோர் இடையிலான குறிப்பிடத்தக்க புதுமையான கூட்டணியாக அமைகிறது.

    தனது அற்புதமான நடிப்புக்கும், பெரும் ரசிகர் பட்டாளத்துக்கும் பெயர் பெற்ற 'தளபதி'விஜய், 'தளபதி-69'-இல் இதற்கு முன்பு பார்த்திராத தோற்றத்தில் தோன்ற உள்ளார். தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விநியோகப்பதற்கும் பெயர் பெற்ற வெங்கட் கே நாராயணா அவர்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில், 'தளபதி-69'-ஐ தயாரிப்பதன் மூலம் தலைசிறந்த படைப்பை வழங்க உறுதிபூண்டுள்ளனர். இத்திரைப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதுலோகித் என்.கே இணைந்து தயாரிக்கிறார்கள்.

    குறிப்பிடத்தக்க தனது முந்தைய படைப்புகளின் மூலம் பாராட்டப்பட்ட திறமையான இயக்குனரான எச். வினோத் அவர்கள் இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு உயிரளிக்கிறார். 'தளபதி'விஜய் மற்றும் எச்.வினோத் முதன்முறையாக கூட்டணி சேர்வதன் மூலம் ஒரு புதுமையான மற்றும் அற்புதமான சினிமா அனுபவத்தை அளிக்கும் திரைப்படமாக அமையும் என்பது உறுதியாகிறது.

    இதற்கு முன்பு 'தளபதி'விஜய் நடித்த திரைப்படங்களான கத்தி, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ போன்ற படங்களுக்கு இசையமைத்து, வெற்றிப் பாடல்களைத் தந்த 'அனிருத் ரவிச்சந்தர்' இத்திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் 'தளபதி' விஜய் அவர்களுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்.

    இத்திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை எதிர் நோக்குகிறோம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த அக்டோபரில் துவங்கி, அடுத்த ஆண்டு அக்டோபர்-2025-இல் வெளியாக உள்ளது.

    மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்கள் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கே வி என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் 'தளபதி' விஜய் அவரது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகளையும் இப்படப்பிடிப்பின் போது உருவாகும் புதிய நினைவுகளையும் பகிர்ந்து கொள்ள பிரத்யேக வியூகத்தை வகுத்துள்ளது.

    இந்த பிரம்மாண்டமான பயணத்தில் தங்களது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம். இதை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் அன்பு மற்றும் மகிழ்ச்சியை பகிருங்கள். நிறைய அறிவிப்புகள் வரவுள்ளன காத்திருங்கள்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×