கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி முடிவானது

கங்குவா திரைப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தனர்இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.
கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி முடிவானது
Published on

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.

இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். கங்குவா படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்து இருந்தது. படத்தின் டிரைலர் மற்றும் ஃபயர் சாங் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கங்குவா திரைப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தனர். ஆனால் அதே தேதியில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியாவதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. மாற்றுத் தேதி இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.

திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இந்த வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com