என் மலர்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சத்ரியன்' படத்தின் விமர்சனம்.
திருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா, அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சியை ஆட்டிப்படைக்கிறார். என்னதான் ஊரையே ஆட்டிப்படைத்தாலும், வீட்டில் மகள் மஞ்சிமா மோகன், மகன் சவுந்தர்ராஜனுக்கு அன்பான தந்தையாக வந்து செல்கிறார். அப்பா ஊரையே ஆட்டிப்படைக்கும் ரவுடி, ஆனால் மகன் சவுந்தர்ராஜனோ ஒரு அப்பாவி.
ஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். பின்னர் திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் கீழ் அவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு வருகிறார்.

சரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறாக ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மஞ்சிமாவின் அம்மா விஜய் முருகனிடம் கூறுகிறாள்.
இதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விஜய் முருகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான விக்ரம் பிரபு வருகிறார். மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்கு வரும் விக்ரம் பிரபு அவர்களை தெறிக்க விடுகிறார். அவரது தைரியத்தை பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. விக்ரம் பிரபு, மஞ்சிமா பின்னாலேயே அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார்.

விடாது அவரை தனது வலையில் சிக்க வைக்கும் மஞ்சிமா, ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழக்கை வாழலாம் என அவருக்கு அறிவுரை கூற, மஞ்சிமாவின் அறிவுரையை கேட்டு விக்ரம் பிரபுவும் மஞ்சிமாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வந்து, அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார்.

இதுஒருபுறம் இருக்க அருள்தாஸின் ஆள் ஒருவரை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள் தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு மீண்டாரா? மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
விக்ரம் பிரபு அவருக்கே உண்டான சாயலில் நடித்திருந்தாலும், ஆக்ரோஷம், அமைதி என மாறி மாறி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல மிரள வைக்கிறார். ரவுடியாக ஒரு பக்கத்தில் மிரட்டினாலும், காதல் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மஞ்சிமா மோகன் திருச்சி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். திரையில், குடும்பபாங்கான அழகான தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், பார்வையும் கவர்ந்து இழுக்கும்படியாக இருக்கிறது.
சரத் லோகிதஸ்வா அவருக்கே உண்டான சாயலில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அருள்தாஸ், ரவுடியாக படம் முழுவதும் வந்து மிரட்டியிருக்கிறார். ரவுடிக்குண்டான குணநலங்களுடன் ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் போக்குக்கே காரணகர்த்தாவான போஸ்டர் நந்தகுமார் ஒரு அரசியல்வாதியாக மிரள வைக்கிறார். அரசியல்வாதிக்குண்டான கெத்துடன் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக வந்து செல்கிறார். அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிகக்க வைக்கிறது. ஆர்.கே.விஜய் முருகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சவுந்தர்ராஜன் ஒரு பயங்கொள்ளியாக கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கிறார். காட்சிக்கு பக்கபலமாக கவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு படத்தில் பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. ரியோ ஒருசில இடங்களில் வந்து செல்கிறார். யோகிபாபுவையும் படத்தில் பயன்படுத்தவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். தாதாவாக ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை என்பதும் இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. "பாறை மேல தூறல் போல" பாடல் ஈர்க்கும்படி இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.
மொத்தத்தில் `சத்ரியன்' யாருக்கும் அஞ்சாதவன்.

தமிழ்நாட்டில் இருந்து கனடாவிற்கு சென்ற தமிழ் இசை பாடகரான செந்தில் குமரன் கனடாவையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
தமிழ்நாட்டில் இருந்து கனடாவிற்கு சென்றவர் செந்தில் குமரன். நியூயார்க் யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பை முடித்து கனடாவில் மார்கெட்டிங் தொழில் செய்து வருகிறார்.
இதுமட்டுமல்ல, தமிழ் மொழி மீதும், தமிழ் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட செந்தில்குமரன், 2003-ம் ஆண்டு முதல் கனடாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
2016-ம் ஆண்டு மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார். அதில் இசையமைப்பாளர் இமான் இசையில் சூப்பர் ஹிட்டான ‘கூடைமேல...’ பாடலை, மறு உருவாக்கம் செய்து வெளியிட்டார். இந்த பாடலை இசையமைப்பாளர் டி இமான் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

கடந்த 2 வருடங்களில் ‘சந்தோஷம்’, ‘முதல் காதல்’, ‘வேல் வேல்’ என 3 தனி பாடல்களை இசையமைப்பாளர் பிரவின் மணியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.
அழகான பழைய அரங்கத்தை கிராமிய பாரம்பரிய தோற்றத்துடன் மாற்றி, அங்கு கனடா மற்றும் தமிழ் இசை ஆர்வலர்கள் பங்கேற்ற ‘மஞ்சள் வெயில்’ உள்ளிட்ட 3 பாடல்களை பதிவு செய்துள்ளார். இந்த பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமா ஆசை இல்லாமல் நாயகி ஆனதாக ‘குரங்கு பொம்மை’ படத்தின் நாயகி டெல்னா டேவிஸ் கூறியிருக்கிறார்.
பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குரங்கு பொம்மை’. இதில் நாயகியாக நடித்துள்ள டெல்னா டேவிஸ் படம் பற்றி கூறும் போது...
“எல்லோருக்கும் என்னோட நமஸ்காரம். நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் சொல்கிறேன் என்றால் நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்திருக்கிறேன். நான் ஒரு மலையாளி என்பது உங்களுக்கு தெரிவதற்காகத் தான்.

எனக்கு சினிமா ஆசை சுத்தமா மனதில் கிடையாது. ஆனால், எப்படியோ இன்று உங்கள் முன் நடிகையாக நிற்கிறேன். சினிமா நடிகையாக எவ்வளவு நான் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம், கிரிமினல் லாயர் ஆகலாம். அல்லது உங்களைப் போல ஒரு பத்திரிகையாளர் ஆகலாம். ஏனென்றால் அதில்தான் எனக்கு விருப்பம். ஆனால் நாள் எப்படி ஆனாலும் நான் ‘குரங்கு பொம்மை’ கதாநாயகி என்று தான் என்னை முதலில் அறிமுகம் செய்து கொள்வேன். அந்த அளவுக்கு இந்த படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு இடத்தை ‘குரங்கு பொம்மை’ வாங்கித்தரும்” என்றார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் `காலா' படத்தில் அவருக்கு இணையான நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் `காலா' படம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, மீண்டும் ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி பாட்டீல் நடிக்கிறார்.
இவர்களுடன், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், நானா படேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, நானா படேகர் `காலா' ரஜினிக்கு எதிராக முக்கிய வில்லனாக, அமைச்சர் கதாபாத்திரத்தில் மிரட்ட இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினி என்றாலே மாஸ் என்றிருக்கும் போது, அவருக்கு இணையான வெயிட்டான வில்லன் நடிகர் கிடைத்தால் எப்படியிருக்கும்?. எனினும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்புக்காக காத்திருக்கத் தான் வேண்டும்.

சூர்யா மற்றும் கார்த்தி முதன்முறையாக புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
`பருத்தி வீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களம் அமைந்ததால், தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக தற்போது வலம் வருகிறார்.
அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `காற்று வெளியிடை' ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.
இதுஒருபுறம் இருக்க அண்ணன் சூர்யாவும் - தம்பி கார்த்தியும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக புதிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். அந்த படத்தை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயிண்மண்ட் மூலம் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சூர்யா - கார்த்தி இருவரும் இணைந்து நடித்தார்களானால், அது இருவரது ரசிகர்களுக்கும் டபுள் ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அது எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
‘பசங்க’,‘வம்சம்’, ‘மெரீனா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட நிறைய படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். கடைசியாக சிம்புவை வைத்து கடந்த ஆண்டு ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கியிருந்தார். இயக்குனராக மட்டுமில்லாமல் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘செம’. இப்படத்தை வள்ளிகாந்த் என்பவர் இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா பினு, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பாண்டிராஜ் கலந்துகொண்டு பேசும்போது,

வள்ளிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் முகத்துக்கு நேரே சொல்லுபவன், அதுதான் அவனை என் உதவியாளராக நான் சேர்த்துக் கொள்ள முக்கிய காரணம். என்னிடம் நிறைய திட்டு வாங்கிய உதவி இயக்குனரும் அவன் தான். அவனுக்கு என்ன செய்வது என யோசித்து தான் இந்த படத்தை தயாரித்தேன். ஒரு படம் எடுப்பதே ரொம்ப கஷ்டமான விஷயம். ஒரே நேரத்தில் ஜி.வி. 12 படம் நடிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஜிவியுடன் கூடிய விரைவில் ஒரு படத்தில் இணைவேன் என்றார்.
பாண்டிராஜ் அடுத்ததாக சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முடிந்தபிறகு ஜி.வி.பிரகாஷுடன் இணையும் படம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - சானா மக்புல் நடிப்பில் உருவாகி இருக்கும் `ரங்கூன்'படத்தின் விமர்சனம்.
பர்மாவின் ரங்கூனில் வசித்து வரும் நாயகன் கவுதம் கார்த்திக், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இந்தியாவுக்கு வருகிறார். சென்னை வரும் அவருக்கு, நண்பர் ஒருவர் மூலம் அடகு கடை நடத்திவரும் சித்திக்கின் அறிமுகம் கிடைக்க, அவருடைய கடையில் எடுபிடி வேலைக்கு சேர்கிறார்கள் மூவரும். நாளடைவில் கவுதமின் வேலை சித்திக்கு பிடித்துப் போகிறது. அதேநேரத்தில், ஒரு பிரச்சினையில் சித்திக்கின் மகளை கவுதம் காப்பாற்றுகிறார். அதேபோல், சித்திக்கின் உயிருக்கும் ஆபத்து வரும்போது அவரையும் கவுதம் காப்பாற்றுகிறார். இதனால், கவுதம் மீது சித்திக் வைத்திருந்த பாசம் மேலும் அதிகமாகிறது.
அந்த வேளையில் நாயகி சானா மாக்பல்லை பார்க்கும் கவுதமுக்கு அவள்மீது காதல் துளிர்விடுகிறது. ஆரம்பத்தில் கவுதமை கண்டுகொள்ளாத சானா, பின்னர் அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, காதலிக்கத் தொடங்குகிறார். இந்நிலையில், தனக்கு பணக்கஷ்டம் இருப்பதால் தங்க கடத்தல் வேலையை செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவுதமிடம் சித்திக் ஆலோசனை கூறுகிறார். கவுதமும் சித்திக்கின் ஆலோசனையை ஏற்று தங்க கடத்தல் வேலையை தொடங்குகிறார்.

ஆரம்பத்தில் சிறிது சிறிதாக தங்க கடத்தல் வேலைகளை செய்துவருகிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுடைய கடத்தல் தொழிலுக்கு போலீஸால் இடைஞ்சல் வரவே, பெரிய கடத்தல் ஒன்றை செய்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட முடிவு செய்கிறார்கள். அதன்படி, நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு பர்மா புறப்படுகிறார்கள். பர்மாவில் அந்த தங்கத்தை கைமாற்றிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் வேளையில் இவர்களது பணம் காணாமல் போகிறது.
பணம் காணாமல் போனதால் அனைவரும் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்த பணம் எங்கே போனது? கடைசியில் அவர்களுக்கு அந்த பணம் கிடைத்ததா? பணத்தை திருடியவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கவுதம் கார்த்திக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார். அதேபோல், லோக்கல் பாஷை, அழுக்கு படிந்த முகம் என குப்பத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கவுதமின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
நாயகி சானா மக்பலுக்கு அறிமுக படமாக இருந்தாலும், தனக்கேற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் கூடுதல் அழகாக தெரிகிறார். அடகு கடை அதிபராக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக், அனுபவ நடிப்பை எதார்த்தமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தங்க கடத்தல் பின்னணியில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இளைஞர்களின் வாழ்வியலை படமாக கொடுத்திருக்கிறார். படத்திற்காக இவர் தேர்வு செய்த லொக்கேஷன்கள் எல்லாம் ரொம்பவும் அழகாக இருக்கிறது. படத்தில் அனைவரையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். அதை ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போதே தெரிகிறது.
அனிஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் ரங்கூனை ரொம்பவும் அழகாக காட்டியிருக்கிறார். இரவிலும், பகலிலும் ரங்கூனின் அழகை நமது கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. விக்ரமின் இசையில் பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது. அன்பறிவு சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
மொத்தத்தில் ‘ரங்கூன்’ ரசிக்கலாம்.

லெமூரியா கண்டத்தில் தோன்றிய தமிழர்களின் கணக்கில் அடங்காத வரலாற்று சாதனைகளை கொண்ட ‘லெமூரியா’ படத்தின் முன்னோட்டம்.
லெமூரியா கண்டத்தில் தோன்றிய தமிழர்களின் கணக்கில் அடங்காத வரலாற்று சாதனைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக இருக்கும் படம் ‘லெமூரியா’ . இந்த படத்தை ரவீந்திரா தனது எஸ்.ஆர்.சாய் புரொடக்ஷன்ஸ் சார்பில் எழுதி, இயக்கி, தயாரிக்க இருக்கிறார். இதுபற்றி கூறிய ரவீந்திரா....
“ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி தமிழில் சாஸ்திரங்களை எழுதியதும், முதல் தமிழ் சங்கத்தில் அரங்கேற்றியதும் லெமூரியா தமிழர்கள் தான். தமிழ் நாகரீகம், லிங்கவழி பாடு, அறிவியல் சாஸ்திரங்கள் போன்றவை இன்று உலகம் முழுதும் பரந்து விரிந்ததும் இந்த லெமூரியா கண்டத்தில் இருந்து தான். அவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ‘லெமூரியா’ திரைப்படத்தை இன்றைய காலகட்ட இளைஞர்களையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் எழுதி, இயக்கி தயாரிக்க இருக்கிறேன்”.

உலக அரங்கில், இந்திய ஆக்கசக்தி சாஸ்திரங்களை திருடிப் போய் அழிவு சக்திக்கு பயன்படுத்தி வரும் சில நாடுகளிடமிருந்து அந்த சாஸ்திரங்களை திரும்ப பெற்று வந்து இந்தியாவை ஆக்க சக்திக்கு மீண்டும் அழைத்து செல்வதே “லெமூரியா” படக் கருவாகும். தற்போது, இந்த படத்திற்கான நட்சத்திர, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் ‘லெமூரியா’ படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `இமைக்கா நொடிகள்' படத்தின் இந்தி டப்பிங் உரிமையை த்ரிஷா மீடியா நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக `இமைக்கா நொடிகள்' உருவாகி வருகிறது. முன்னணி கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார்.
அதர்வாவின் அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாராவின் கணவராக சாதுவான கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமையை மும்பையை சேர்ந்த த்ரிஷா மீடியா லிமிடெட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழில் அதிக படங்களில் நடிப்பதாகக் கூறி ஜி.வி.பிரகாஷை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காமெடி நடிகர் சூரி மாட்டிவிட்டிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் காட்டில் தற்போது மழை என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘செம’. இப்படத்தை வள்ளிகாந்த் என்பவர் இயக்கியுள்ளார். பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இதில், இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் ஆர்யா, ஜி.வி.பிரகாஷ், சதீஷ், சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் சூரி பேசும்போது, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் என் வீட்டுக்கு வருமான வரி சோதனைக்கு வருவதாக சொன்னார். ஏன் என கேட்டதற்கு, நிறைய படம் நடிக்கிறீங்க என சொன்னார். என்னை விட ஜி.வி.பிரகாஷ் தான் அதிக படத்தில் நடிக்கிறார், அவரை விட்டுட்டீங்களே என்றேன் என்று கலகலப்பாக பேசினார். நிறைய படங்கள் நடித்தாலும் ஜி.வி.பிரகாஷ் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்று முடித்தார்.

படத்தின் வெளியீட்டு தேதியை சங்கத்தில் பதிவு செய்யுமாறு தயாரிப்பாளர்களுக்கு விஷால் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சிறு பட்ஜெட் படங்களை காப்பாற்றும் நோக்கிலும், ஒரே நாளில் அதிக படங்கள் வெளியாகி தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதை தவிர்க்கவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, அனைத்து தயாரிப்பாளர்களும் படத்தின் வெளியீட்டு தேதியை சங்கத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தயாரிப்பாளர் முதலாளிகளுக்கு வணக்கம்.... தற்போது நமது திரைத்துறையில் நிலவி வரும் திரைப்பட வெளியீடு சம்பந்தப்பட்ட குழப்பங்கள் மற்றும் அதனை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, தங்களது தயாரிப்பில் உருவாகிவரும் வெளியீட்டிற்கு தயாராக இருககும் திரைப்படங்கள் ஜனவரி 2018 வரையிலான திரைப்படங்களின் வெளியீட்டு தேதியினை உடனடியாக நமது சங்க அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்காக உதயநிதி அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை சுமந்துகொண்டு நடித்துள்ளார்.
உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. இப்படத்தை தளபதி பிரபு என்பவர் இயக்கி வருகிறார். முதன்முறையாக இப்படத்தில் உதயநிதியுடன் சூரி கைகோர்த்திருக்கிறார். மேலும், பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்க மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர், ரமா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் உதயநிதி முழுக்க முழுக்க ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்கிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை உதயநிதி தலையில் சுமந்துகொண்டு, காலில் செருப்பு அணியாமல் கிராமத்தை சுற்றி வந்து நடித்துக் கொடுத்துள்ளார்.

நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா, சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பிரம்மாண்ட திருவிழா செட் அமைத்து, இரண்டாயிரம் துணை நடிகர்களுடன் ஐந்து நாட்கள் மதுரை, தேனியில் இந்த காட்சியை படமாக்கியுள்ளார்கள்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.