என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பரத் நடிப்பில் வெளிவந்த ‘காதல்’ படத்தில் நடித்த ஒருவர் பிச்சை எடுத்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    பரத்-சந்தியா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘காதல்’. இப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் மேன்ஷனில் தங்கியிருக்கும் உதவிய இயக்குனரிடம் ‘விருச்சககாந்த்’ என்ற பெயருடன் நடிக்க சான்ஸ் கேட்டு வரும் இளைஞனின் காமெடி இந்த படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

    நீங்க ஏன் ஹீரோ நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க, அமெரிக்கா மாப்பிள்ளை, அண்ணன், தம்பி, நண்பன் அப்படி ஏன் நீங்க பண்ணக்கூடாது என்று உதவி இயக்குனர் கேட்கும் கேள்விக்கு அந்த இளைஞர், ‘நடிச்சா ஹீரோதான். நான் வெயிட் பண்ணுறேன். அப்புறம் கொஞ்சம் அரசியல், சி.எம்., அப்புறம் டெல்லி, அதுபோதும்’ என்று வசனம் பேசி அசத்தியிருப்பார். இந்த காமெடியை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக சிரிக்காமல் இருக்கவே முடியாது.



    அந்த இளைஞரின் பெயர் பல்லு பாபு. ‘காதல்’ படத்திற்கு பிறகு பல்லு பாபுவை எந்த படத்திலும் பார்க்கமுடியவில்லை. இந்நிலையில், அவர் ஒரு கோவில் வாசலில் பிச்சை எடுத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக செய்தி பரவி வருகிறது. ‘காதல்’ படத்திற்கு பிறகு அவர் எந்த சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடிப் போகவில்லை என்றும், அவருடைய அப்பாவும் அம்மாவும் இறந்தபிறகு வேறு வழியின்றி பிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    தமிழ் சினிமா நாளுக்கு நாள் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் `எக்ஸ் வீடியோஸ்' படம் உருவாகி இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் படத்திற்கு பெயர் வைக்க பல இயக்குநர்கள் திணறி வருகின்றனர். இன்னும் சிலர், பழைய படங்களின் பெயர்களையே தற்போதைய படங்களுக்கும் வைத்துவிடுகின்றனர். ஆனால் அதில் முற்றிலும் மாறுபட்டு ஒரு சர்ச்சைக்குரிய பெயரை வைத்திருப்பதை கேட்டதுண்டா. அவ்வாறு தலைப்பு வைக்கப்பட்ட படம் தான் `எக்ஸ் வீடியோஸ்'.

    இதுகுறித்து இயக்குநர் கூறியதாவது, ஆமாம் இது ஆபாசப் படம் தான் என்று தைரியமாகக் கூறுகிறார் `எக்ஸ் வீடியோஸ்' படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர். மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது.



    பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை. இந்த படத்தின் மூலம் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளி உலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை.

    இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான். அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் `எக்ஸ் வீடியோஸ்'.



    இப்படத்தை சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ஹரியின் உதவி இயக்குநர். நடிகர் பிரகாஷ் ராஜ், பொம்மரில்லு பாஸ்கர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

    இப்படத்தை கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எஸ்.பிரகாஷ் தயாரித்துள்ளார்.

    ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது.

    ஆபாசமாகத் தலைப்பு வைத்தது குறித்து சஜோ சுந்தர் தெரிவித்ததாவது, இது இளைஞர்களுக்கான படம், அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம்.



    படத்தின் தலைப்பைக் கண்டு தவறாக கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஏனெனில் இது இந்த உலகில் ரகசியம் என்று எதுவுமில்லை என எச்சரிக்கும் படமே. கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.

    சென்னை, பெங்களூர், மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்துக்கு வின்சென்ட் அமல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, மெட்ரோ புகழ் ஜோஹன் இசையமைத்துள்ளார். படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது.
    சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ள `சங்கமித்ரா' படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகவில்லை என்றும் நாங்கள் தான் அவரை நீக்கினோம் என்றும் தேனான்டாள் பிலிம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தானே அப்படத்திலிருந்து விலகியதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதில், கதையின் முழு விவரத்தை தனக்கு தெரிவிக்கவில்லை. கால்ஷீட் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறி இந்த படத்தில் விலகுவதாக சுருதிஹாசன் அறிவித்திருந்தார்.



    இந்நிலையில், இதுகுறித்து தேனாண்டாள் நிறுவனத் தலைவர் ஹேமா ருக்மணி கூறுகையில், சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் அவராகவே விலகவில்லை. சில காரணங்களால் எங்களால் இணைந்து பணியாற்ற முடியவில்லை. எனவே அவரை நீக்கிவிட்டோம் என்று கூறினார்.

    ஜெயம் ரவி, ஆர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இப்படத்தில் ராணியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘விவேகம்’ படக்குழுவினர் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக செர்பியா சென்றுள்ளனர்.
    அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார்.

    அனிருத் இசையில் ஹிப் ஹாப் பாடகர் யோகி-பி பாடிய ‘Suriviva’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத பட்சத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ‘விவேகம்’ படக்குழு செர்பியா சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, பல்கேரியா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பா நாடுகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது செர்பியாவில் அஜித், விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் இப்படத்தில் இண்டர்போல் ஆபீசராக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. 
    தமிழ் சினிமா நாளுக்கு நாள் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் `எக்ஸ் வீடியோஸ்' படம் உருவாகி இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் படத்திற்கு பெயர் வைக்க பல இயக்குநர்கள் திணறி வருகின்றனர். இன்னும் சிலர், பழைய படங்களின் பெயர்களையே தற்போதைய படங்களுக்கும் வைத்துவிடுகின்றனர். ஆனால் அதில் முற்றிலும் மாறுபட்டு ஒரு சர்ச்சைக்குரிய பெயரை வைத்திருப்பதை கேட்டதுண்டா. அவ்வாறு தலைப்பு வைக்கப்பட்ட படம் தான் `எக்ஸ் வீடியோஸ்'.

    இதுகுறித்து இயக்குநர் கூறியதாவது, ஆமாம் இது ஆபாசப் படம் தான் என்று தைரியமாகக் கூறுகிறார் `எக்ஸ் வீடியோஸ்' படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர். மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது.



    பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை. இந்த படத்தின் மூலம் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளி உலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை.

    இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான். அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் `எக்ஸ் வீடியோஸ்'.

    இப்படத்தை சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ஹரியின் உதவி இயக்குநர். நடிகர் பிரகாஷ் ராஜ், பொம்மரில்லு பாஸ்கர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.



    இப்படத்தை கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எஸ்.பிரகாஷ் தயாரித்துள்ளார்.

    ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது.

    ஆபாசமாகத் தலைப்பு வைத்தது குறித்து சஜோ சுந்தர் தெரிவித்ததாவது, இது இளைஞர்களுக்கான படம், அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம்.



    படத்தின் தலைப்பைக் கண்டு தவறாக கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஏனெனில் இது இந்த உலகில் ரகசியம் என்று எதுவுமில்லை என எச்சரிக்கும் படமே. கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.

    சென்னை, பெங்களூர், மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்துக்கு வின்சென்ட் அமல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, மெட்ரோ புகழ் ஜோஹன் இசையமைத்துள்ளார். படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது.
    படப்பிடிப்புகளில் நடிகைகள் கேரவன் கேட்டு அடம்பிடிக்க கூடாது என்று நடிகை ரகுல் பிரீத்சிங் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் ரகுல்பிரீத் சிங். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கஷ்டப்பட்டு இருக்கிறேன். பசியாக இருந்த அனுபவமும் உண்டு. எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்து இருக்கிறேன். அது இப்போது சினிமாவில் எனக்கு உதவுகிறது. பசி, தூக்கமின்மை என்று அனைத்து சவால்களையும் என்னால் எதிர்கொள்ள முடிகிறது. என்ன சிக்கல் வந்தாலும் ஆத்திரப்படாமல் அதில் சமரசம் செய்து கொள்கிறேன்.

    எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனுடன் வாழ என்னை சீக்கிரமே பழக்கப்படுத்திக்கொள்ள முடிகிறது. எந்த மொழி கலாசாரமாக இருந்தாலும் அதோடு ஒன்றி விடுகிறேன். சிறு வயதில் என் தந்தை நிறைய ஊர்களில் வேலை பார்த்தார். இதனால் பல மாநிலங்களில் வாழ்ந்து இருக்கிறேன். வெளிநாடுகளுக்கும் சென்று வந்து இருக்கிறேன். அதுதான் எந்த சூழ்நிலையிலும் வாழ என்னை தகுதியாக்கி இருக்கிறது.



    சினிமா படப்பிடிப்புகள் சில நேரங்களில் காட்டுக்குள்ளும், குக்கிராமங்களிலும் நடக்கும். அங்கு எந்த வசதியும் இருக்காது. தங்குவதற்கும் இடம் கிடைக்காது. அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். படக்குழுவினருடன் தகராறிலும் ஈடுபட மாட்டேன். அங்கு ஒரு சிறிய இடம் கிடைத்தால் கூட சுருண்டு படுத்துக் கொள்வேன்.

    அப்போது ருசியான உணவுகளை கேட்க மாட்டேன். எது கிடைத்தாலும் சாப்பிட்டு பசியாற்றிக்கொள்வேன். இதுபோன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது நடிகரோ, நடிகையோ வசதிகளை எதிர்பார்க்க முடியாது. கேரவன் கேட்டும் அடம்பிடிக்க கூடாது. கஷ்டங்களை தாங்கிக்கொண்டு படத்தில் நடித்துக்கொடுக்க வேண்டும்.

    நான், இதுபோல் இடம் மற்றும் நேரம் பார்க்காமல் நடிப்பதால்தான் எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகிறது. இதுதான் எனது வெற்றியின் ரகசியமாகவும் இருக்கிறது”.

    இவ்வாறு ரகுல்பிரீத்சிங் கூறினார்.
    தமிழில் விழா என்ற பெயரில் வெளியான படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மேனன் கபடி வீரரருக்கு காதலியாகி இருக்கிறார்.
    ஒரு கபடி வீரனின் காதல் கதை ‘அருவாசண்ட’ என்ற பெயரில் படமாகிறது. ஆதிராஜன் இயக்கும் இந்த படத்தில் கபடி வீரர் ராஜா கதாநாயகன் ஆகிறார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கபடி வீரர். புதுமையான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், வில்லனாக ஆடுகளம் நரேன் நடிக்கிறார்கள்.

    இவர்களுடன் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்க முத்து, நெல்லை சிவா, பிளாக்பாண்டி, சின்ராசு, ரஞ்சன், சின்னத்திரை புகழ் சரத், அழகப்பன் ஆகியோர் கூட்டணி அமைத்து காமெடியில் கலக்க இருக்கிறார்கள்.



    தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆணவக்கொலைகளின் பின்னணியில், ஒரு கபடி வீரனின் கரடு முரடான காதல் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், மாளவிகா மேனன் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவர் ‘பிரம்மன்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களில் சிறிய வேடத்திலும், ‘விழா’ படத்தில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 5 படங்களில் நாயகியாக நடித்துள்ள மாளவிகாமேனன், தற்போது தெலுங்கில் 2 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
    மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு யோகா அவசியம் என்று நடிகை பூமிகா கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    நடிகை பூமிகா அளித்த பேட்டி வருமாறு:-

    “யோகா என்பது, வேத காலத்தில் இருந்து நமக்கு கிடைத்த அற்புதமான சொத்து. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்துக்கும் அது ஆதாரமாக இருக்கிறது. ஆன்மா, மனம், உடல் அனைத்தையும் யோகா இணைக்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால்தான் அந்த அனுபவத்தை நாம் பெற முடியும். இதனால்தான் எனது கணவர் பரத் தாகூர் ரிஷிகேஷ், ஹரித்துவார், இமயமலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

    மனதில் வைராக்கியமும், தூய்மையும் கடவுள் மீது அதீத நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் யோகிகளாக மாறுகிறார்கள். யோகா பயிற்சியை ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ செய்தால் மட்டும் போதாது. எப்போதும் யோகா நிலையிலேயே இருக்க வேண்டும். நான் 25 வருடங்களாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.



    தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் ஆசனம் செய்கிறேன். யோகா பயிற்சி என்னை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கிறது. வலிமையாகவும் வைத்து இருக்கிறது. யோகா என்பது உடற்பயிற்சி மட்டும் இல்லை. நம்மை நாமே உணர்ந்து கொள்ள வைக்கும் ஒரு சக்தி. கடவுள் மீது நம்பிக்கை உண்டு. ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது என்பதை முழுமையாக நம்புகிறேன். அந்த சக்தியோடு நான் பேசுகிறேன்.

    எனக்கு நானே ஒரு உலகத்தை உருவாக்கி அதற்குள் சவுகரியமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இதனை தியானம் என்றும் சொல்லலாம். எனது அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவரிடம் இருந்துதான் எனக்கும் தெய்வ பக்தி வந்தது. சாமி படத்தின் முன்னால் நின்று ஆரத்தி எடுப்பது, விதவிதமான பிரசாதங்களை படைப்பது, சிலமணி நேரம் உட்கார்ந்து பூஜைகள் செய்து பிரார்த்திப்பது போன்றவற்றால் ஒருவருக்கு ஆன்மிக உணர்வுகள் வந்து விடாது.

    24 மணி நேரமும் கடவுள் சிந்தனை இருக்கவேண்டும் அவர் கூடவே இருக்கிறார் என்று நம்ப வேண்டும். நான் அப்படித்தான் இருக்கிறேன். நள்ளிரவு விழிப்பு வந்தால் கூட கடவுளை நினைப்பேன். நாம் என்ன செய்தாலும் மேலே ஒருவர் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதுதான் கடவுள்”.

    இவ்வாறு பூமிகா கூறினார்.
    நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள `தங்கல்' படத்திற்கு சீனாவில் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து, ரூ.2000 கோடியை தொடும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற இருக்கிறது.
    நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘தங்கல்’. இந்திய மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட ‘தங்கல்’ இந்தியாவில் மொத்தமாக ரூ.512 கோடியை வசூல் செய்தது. இந்தியாவில் கிடைத்த வரவேற்பை அடுத்து, கடந்த மாதம் டப் செய்யப்பட்டு சீனா மற்றும் தைவானில் ரிலீஸானது.

    சீன மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட இப்படம், சீனாவில் மட்டும் சுமார் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. மொத்தமாக உலகம் முழுவதும் ரூ.1993 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    மேலும் இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட அனைத்து இந்திய படங்களின் சாதனைகளையும் ‘தங்கல்’முறியடித்துள்ளது. சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத படங்களில் ‘தங்கல்’ முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

    `தங்கல்' படத்திற்கு சீனாவில் கிடைத்த வரவேற்பை அடுத்து, ஹாங் காங் நாட்டிலும் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி படம் ஹாங் காங்கில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது என்று நடிகை ஸ்ரீதேவி கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    ஸ்ரீதேவி இந்தியில் நடித்துள்ள புதிய படம் ‘மாம்’. ரவி உத்யவார் டைரக்டு செய்துள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. இதையொட்டி, ஸ்ரீதேவி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தாய், மகள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான கதை ‘மாம்’. இந்த படத்தின் கதையை கேட்டதுமே நடிக்க சம்மதித்துவிட்டேன். தமிழிலும் இந்த படம் வெளியாகிறது. தமிழ் பட உலகம் எனக்கு ஆதரவு அளித்ததையும், அன்பு காட்டியதையும் எப்போதும் மறக்கமாட்டேன்.

    எனது படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வேண்டும் என்பது எனது தீராத கனவாக இருந்தது. டைரக்டரும், நானும் ஏ.ஆர்.ரகுமான் ‘மாம்’ படத்தில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்பட்டோம். அது நடந்துவிட்டது. ரகுமான் இசையமைத்ததன் மூலம் இந்த படத்தின் மதிப்பு மேலும் உயர்ந்து இருக்கிறது. ‘மாம்’ படத்தை அனைத்து தாய்மார்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.



    நான் சினிமா உலகுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. வாழ்க்கையில் எதையும் நான் திட்டமிடவில்லை. எல்லாம் தானாகவே நடந்து இருக்கின்றன. இவ்வளவு காலம் ஆகியும் இன்னும் ஒவ்வொரு படத்திலும் என்னை புதுமுகமாக நினைத்துக்கொண்டுதான் நடிக்கிறேன். தமிழ்பட உலகை விட்டு நான் விலகி இருக்கவில்லை. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் தமிழ் படங்களில் நடிப்பேன்.

    நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கிறது. வெளியே செல்லும் பெண்கள் திரும்பி வருவது வரை பெற்றோர் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கும் நிலைதான் உள்ளது. பெண்கள் வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    எனது மகள் சினிமாவில் நடிப்பாரா? என்று கேட்கப்படுகிறது. அதற்கான சூழ்நிலை அமைந்தால் நடிப்பார்.

    இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, எல்லா நாட்டிலுமே குடும்ப உறவுகள் என்பது முக்கியமாக இருக்கிறது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க பெற்றோர் பெரிய தியாகங்களை செய்கின்றனர். ‘மாம்’ படமும் அந்த கருவில்தான் தயாராகி இருக்கிறது என்றார்.
    நான் அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன். இன்னும் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. முடிவு எடுத்தால் உங்களிடம் தெரிவிக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்த், கடந்த மாதம் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியது, அவர் அரசியலுக்கு வருவாரா?, மாட்டாரா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதன்பிறகு அவர், கடந்த மாதம் 27-ந் தேதி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ‘காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை புறப்பட்டு சென்றார். அங்கு 11 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன் பின்னர் கடந்த 8-ந் தேதி மீண்டும் அவர் சென்னை திரும்பினார்.

    இதையடுத்து 2-வது கட்டமாக ‘காலா’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-



    ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் மீண்டும் ரசிகர்களை செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் சந்திப்பேன். முதல் கட்டமாக ‘காலா’ படப்பிடிப்பு முடிந்து உள்ளது. மீண்டும் படப்பிடிப்பு நாளை (அதாவது இன்று) முதல் தொடங்குகிறது. 5 நாள் வரை படப்பிடிப்பு நடக்க உள்ளது.

    என்னை சந்தித்து பேசி விட்டு வருபவர்கள் நான், அரசியல் பற்றி பேசியதாக கூறுவதை நான் மறுக்கவில்லை. நான் அரசியலுக்கு வர நேர்ந்தால், அப்போது உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.

    நான் அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன். இதுவரை நான் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. முடிவு எடுத்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படும் ‘குயின்’ படத்தின் முன்னோட்டம்.
    வியாம்காம் 18 மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியில் தயாரித்த படம் ‘குயின்’.

    கங்கனா ரணாவத் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விகாஸ் பாஹல் டைரக்டு செய்தார். லண்டனை சேர்ந்த கோல்டன் கிரேம் நிறுவனம் இந்த படத்தை தென் இந்திய மொழிகளில் தயாரிக்கும் உரிமையை வியாம்காம் 18 மோ‌ஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. இணை தயாரிப்பாக ஸ்டார் மூவீஸ் நிறுவனத்தை சேர்ந்த நடிகர் தியாகராஜனிடமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.



    இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தை தமிழில் ‘வானில் தேடி நின்றேன்’ என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்துவிட்டன. நாயகியின் தந்தையாக நாசர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதுபற்றி கூறியுள்ள கோல்டன் கிரேப் நிறுவனம்...

    ‘நாங்கள் ஏற்கனவே பாலிவுட் நிறுவனத்திடமிருந்து ‘குயின்’ படத்தின் உரிமைகளை வாங்கி நட்சத்திர தேர்வில் ஈடுபட்டு வருகிறோம். பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டோடு (பி.எப்.ஐ) எல்லா மொழிகளும் பதிவு செய்யப்பட்டு விட்டன. வேறு யாரும் பதிவு செய்யவோ, ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தவோ முடியாது. எனவே மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் எதுவும் ரீமேக் செய்வதற்கு உரிமை கொண்டாட முடியாது. விரைவில் எங்கள் தரப்பிலிருந்து இந்த படம் பற்றிய அறிவிப்பு வரும்’ என்று தெரிவித்துள்ளது.
    ×