தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் மூலம் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Published On 2017-02-16 16:15 GMT   |   Update On 2017-02-16 16:15 GMT
உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புதிய வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற செயலிகளில் வழங்கப்பட்ட பல்வேறு வசதிகளை ஃபேஸ்புக்கிலும் மார்க் பலமுறை வழங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது ஃபேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ள வசதி லின்க்டுஇன் செயலிக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக்கில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதே போல் நிறுவனங்களும் தங்களது சார்பில் பணி இருப்பது குறித்து விளம்பரங்களை பதிவு செய்ய முடியும். முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் பணிகளுக்கான விபரங்களை பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

இனி ஃபேஸ்புக் வாசிகள் நேரடியாக பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தியாவில் இன்னும் இந்த வசதி வழங்கப்படவில்லை என்றாலும் விரைவில் இந்த வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் ஃபேஸ்புக்கில் பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.  

* முதலில் உங்களுக்கு வேண்டிய பணியினை தேர்வு செய்து கொள்ளுங்கள், அதன் பின் "Apply Noe" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். 

* இந்த பட்டனினை கிளிக் செய்ததும் புதிய விண்ணப்ப பக்கம் ஒன்று திறக்கும். இதில் நீங்கள் ஏற்கனவே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். 

* இதன் பின் விண்ணப்பத்தை எடிட் செய்து சமர்பிக்க வேண்டும். 

* இவ்வாறு செய்ததும் நீங்கள் விண்ணப்பித்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் உங்களை ஃபேஸ்புக் மெசேஞர் செயலி மூலம் தொடர்பு கொள்வர்.

Similar News