தமிழ்நாடு

பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 82,479 ஆசிரியர்கள் விண்ணப்பம்- கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிப்பு

Published On 2024-05-27 04:53 GMT   |   Update On 2024-05-27 04:53 GMT
11CNI02702024: ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் உள்ள வர்கள் தங்களது ‘எமிஸ்’ ஐ.டி. உள் நுழைவின் மூலம் விண்ணப்பங்களை பதி வேற்றம் செய்ய நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப் பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தொடக்க கல்வி இயக்கக நிர்வா

சென்னை:

ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது 'எமிஸ்' ஐ.டி. உள் நுழைவின் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் 18,920 பேர், இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கும் 9,295 பேர், பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும் 5,814 பேர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கும் 1,640 பேர், நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கும் விண்ணப்பித்து இருந்தனர்.

பள்ளிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 25,711 பேர் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும் 17,296 பேர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 1,186 பேர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மாறுதலுக்கும், 1,452 பேர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கும் 176 பேர் உடற்கல்வி இயக்குனர் (நிலை1) மாறுதலுக்கும் 986 பேர் இடைநிலை மற்றும் இதர ஆசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 46,810 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வி நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களிடம் இருந்து ஆக மொத்தம் 82,479 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்கள் தொடர்புடைய அலுவலர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்ட பிறகு பதவி வாரியாக முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News