செய்திகள் (Tamil News)
தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா

பீகார் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடா? - இறுதி முடிவு மக்களிடமே உள்ளது : தேர்தல் கமிஷன் கருத்து

Published On 2020-11-13 01:10 GMT   |   Update On 2020-11-13 01:10 GMT
பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் எழுப்பி உள்ள புகார் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் பீகார் சட்டசபை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமாருடன் வந்து நேற்று மரியாதை செலுத்தினார்.

அவரிடம் பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் எழுப்பி உள்ள புகார் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பதில் அளிக்கையில், “அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கு நாங்கள் பதில் அளிப்பதில்லை. அவர்கள் என்ன சொன்னார்கள், ஏன் சொன்னார்கள் என்பது அவர்களின் முடிவு. இறுதி முடிவு, மக்களிடமே உள்ளது” என கூறினார்.
Tags:    

Similar News