உள்ளூர் செய்திகள் (District)
தேவதானப்பட்டி அருகே அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள்.

தேவதானபட்டியில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

Published On 2022-03-20 06:12 GMT   |   Update On 2022-03-20 06:12 GMT
தேவதானபட்டியில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் மஞ்சளாறு அணை பாசனத்தை பயன்படுத்தி ஏராளமான ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்துள்ளனர். உழவு, நடவு, களை எடுப்பு, உரமிடுதல் என கடைசியாக அறுவடை வரை விலை உயர்வு, சம்பள உயர்வு காரணமாக கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக செலவு செய்துள்ளனர். 

விளைச்சல் அடைந்து தற்போது நெல் அறுவடைக்கு தயாராகியுள்ளது. இந்த சூழ்நிலையில் அறுவடை செய்த நெல்லை தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கே வாங்க முன் வருகின்றனர். அந்த விலை போதுமானதாக இல்லை என விவசாயிகள் புகவலை தெரிவிக்கின்றனர்.

அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையம் தேவதானப்பட்டி பகுதியில் அமைந்தால் விவசாயிகள் நேரடியாக பயன் பெற முடியும், நெல்லுக்கு அரசு அறிவித்த விலையும் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

எனவே தேவதானப்பட்டி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வித்துள்ளனர்.
Tags:    

Similar News