செய்திகள் (Tamil News)
போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காட்சி

74-வது தரைப்படை தினம் - போர் நினைவு சின்னத்தில் மரியாதை

Published On 2020-10-27 23:17 GMT   |   Update On 2020-10-27 23:17 GMT
தரைப்படை அமைக்கப்பட்ட அக்டோபர் 27-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய தரைப்படை தினமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை:

இந்தியா விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு இந்திய தரைப்படை உருவாக்கப்பட்டது. இந்திய தரைப்படை உலகின் 2-வது மிகப்பெரிய தரைப்படையாகும். தரைப்படை அமைக்கப்பட்ட அக்டோபர் 27-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய தரைப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 74-வது தரைப்படை தினத்தையொட்டி வீரமரணமடைந்த வீரர்களுக்கு தென்பிராந்திய தலைமை தளபதி லெப்டினென் ஜெனரல் பி.என்.ராவ், சென்னை போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரில் நடந்த தரைப்படை தினத்தில் உயர் அதிகாரிகள், போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News