சினிமா (Cinema)

இனிமேல் குணசித்திர வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்: லொள்ளு சபா சாமிநாதன்

Published On 2017-02-28 10:54 GMT   |   Update On 2017-02-28 10:54 GMT
இனிமேல் குணச்சித்திர வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக லொள்ளுசபா சாமிநாதன் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடிக்கும் லொள்ளு சபா சாமிநாதன், விஜய் ஆண்டனியின் ‘சலீம்’, தற்போது வெளிவந்துள்ள ‘எமன்’ படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தார். இதுபற்றி கூறிய அவர்....

“நான் காமெடி வேடங்களில் நடித்த படங்களுக்கு பாராட்டு கிடைத்தது. ஆனால் ‘சலீம்’ படத்தில் என்னை குணசித்திர வேடத்தில் பார்த்தவர்களில் பலர் இனிமேல் இதுபோன்ற படங்களில் நடித்து அடுத்த கட்டத்துக்கு போகவேண்டும் என்று கூறினார்கள்.


இந்த நிலையில், ‘எமன்’ படத்தின் நான்தான் விஜய் ஆண்டனியின் நண்பராக நடிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி பாத்திமா மேடம் கூறி இருக்கிறார். என்னிடமும், என் கணவருக்கு நீங்க தான் சரியான செட்டு என்றார். இந்த படத்தின் இயக்குனர் ஜீவாசங்கர் படம் முழுவதும் நான் இருப்பதாக சொன்னார். அதன்படி நிறைய காட்சிகள் கொடுத்தார்.

இப்போது ‘எமன்’ படத்தில் நான் நடித்துள்ள குணசித்திர வேடத்தை பார்த்துவிட்டு ஏராளமானோர் பாராட்டுகிறார்கள். இந்த பாத்திரம் மனதில் நிற்கிறது என்கிறார்கள். இந்த பாராட்டு மனநிறைவை தருகிறது. இனி காமெடியைவிட குணசித்திர வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்” என்றார்.

Similar News