ஆன்மிக களஞ்சியம்

கேது பகவான்

Published On 2023-12-16 12:44 GMT   |   Update On 2023-12-16 12:44 GMT
  • அமிர்தத்தின் பயனால், தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் வளர்ந்தது என்பர்.
  • கேதுவின் மனைவி சித்ரலேகா என்பவள் ஆவாள். இவனுக்கு எட்டு பிள்ளைகள் உண்டு.

முறை தவறி அமிர்தத்தை உண்ணும் பொழுது, திருமால் சட்டுவத்தால் ராகுவின் தலையில அடிக்க, தலைவேறு உடல் வேறாக ராகு துண்டிக்கப்பட்டான்.

அமிர்தத்தின் பயனால், தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் வளர்ந்தது என்பர்.

கேதுவின் மனைவி சித்ரலேகா என்பவள் ஆவாள். இவனுக்கு எட்டு பிள்ளைகள் உண்டு.

இவன் சிவபெருமானை வணங்கி சாயாக்கிரக பதத்தைப் பெற்றான்.

கேது வழிபட்ட சிவாலயங்கள்:

திருமுருகன்பூண்டி,

கீழப்பெரும்பள்ளம்,

திருப்பாம்புரம்,

திருக்காளத்தி முதலியன

இந்த ஒன்பது கிரகங்களும், தங்களின் தீவினை நீங்கி நல்வினைப் பெறுவதற்கு சிவபெருமானையே வழிபட்டுள்ளன.

வினையின் போகங்களை உயிர்கட்கு ஊட்டுபவன் சிவபெருமானே ஆவார்.

அவரை வணங்கினால்தான் வினையின் தாக்குதலில் இருந்து விடுபட முடியும்.

Tags:    

Similar News

கருட வசனம்