search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம் ரத்து"

    • விமான பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியவை குறித்த வழிகாட்டு.
    • மாற்று விமானத்திற்காக காத்திருக்கும் போது பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கடும் குளிர் காரணமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குறிப்பிட்ட விமானங்கள் காலதாமதமாக சென்றன. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புத்தாண்டு பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல இருந்தனர். அதனைத்தொடர்ந்து விமானம் ரத்து செய்யப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நியாயம் வழங்குமாறு விமான நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறும் போது, "இயற்கை சீற்றம் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணிகள் செலுத்திய பணத்தை உடனடியாக திரும்ப செலுத்துவதை பின்பற்ற வேண்டும்" என கூறினார். 

    விமானம் ரத்து செய்யப்பட்டிருந்தாலோ அல்லது கால தாமதம் ஆனாலும், விமான பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த டிசம்பர் மாதம் அரசு வெளியிட்டிருந்தது.

    அதில், இயற்கை இடர்பாடுகள் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால், மாற்று விமானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது முழு பணத்தை திரும்ப செலுத்துவதோடு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

    மேலும் மாற்று விமானத்திற்காக காத்திருக்கும் போது பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்" என வலியுறுத்தினார்.

    • விமானத்தில் பயணம்செய்ய மிகவும் குறைவான பயணிகளே முன்பதிவு செய்து இருந்தனர்.
    • செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது

    ஆலந்தூர்:

    இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் இருந்து இன்று அதிகாலை 2:10 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரவேண்டும். இதேபோல் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:10 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட்டு செல்லும்.

    இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்ய போதுமான பயணிகள் இல்லாததால் இந்த 2 விமானங்களின் சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டன.

    இந்த விமானத்தில் பயணம்செய்ய மிகவும் குறைவான பயணிகளே முன்பதிவு செய்து இருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பயணிகள் வேறு விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டன.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, போதிய பயணிகள் இல்லாததால் 2 இலங்கை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது என்றனர்.

    • சென்னை-லண்டன் தினசரி விமானத்தில், பயணிகள் அதிகமாக பயணம் மேற்கொண்டு வந்தனர்.
    • பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், நேரடி விமான சேவையை தினமும் இயக்கி வருகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 3.15 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும்.

    சென்னை-லண்டன் இடையே நேரடி விமான சேவை என்பதாலும், மேலும் லண்டன் சென்று அங்கு இருந்து ஸ்காட்லாந்து, பிரேசல்ஸ், ரோம், பாரிஸ், நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் இருப்பதாலும், சென்னை-லண்டன் தினசரி விமானத்தில், பயணிகள் அதிகமாக பயணம் மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை. இதனால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமான பயணிகள் தற்போது துபாய், கத்தார், அபுதாபி, பிராங்க்பார்ட் வழியாக லண்டன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து இன்று காலை 10.05 மணிக்கு, டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.
    • பயணம் செய்யவந்த சுமார் 140 பயணிகள் அவதி அடைந்தனர்.

    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னைக்கு வழக்கமாக காலை 8:50 மணிக்கு பயணிகள் விமானம் வந்து சேரும். அந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து டெல்லிக்கு காலை 10.05 மணிக்கு புறப்பட்டு செல்லும். அந்த விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து சென்னைக்கு வரவில்லை.

    நிர்வாக நடைமுறை காரணங்களால், அந்த விமானம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து இன்று காலை 10.05 மணிக்கு, டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்யவந்த சுமார் 140 பயணிகள் அவதி அடைந்தனர். அவர்கள் மாற்று விமானங்களில் டெல்லி செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் விமான சேவைகளை 3 நாட்கள் ரத்து செய்து உள்ளது.
    • சென்னையில் இருந்து தினமும் மும்பை, அந்தமான் ஐதராபாத்துக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.

    சென்னை:

    கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீசை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால் இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்களுக்கு கோ பர்ஸ்டின் அனைத்து விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

    இந்த கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கோ ஏர் விமானங்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து இந்த விமான நிறுவன விமானங்கள் மும்பை, கேரளா, அந்தமான் ஆகிய மாநிலத்திற்கு விமானங்களை இயக்குகிறது.

    சென்னையில் இருந்து தினமும் மும்பை, அந்தமான் ஐதராபாத்துக்கு விமான சேவை வழங்கப்படுகிறது.

    கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் விமான சேவைகளை 3 நாட்கள் ரத்து செய்து உள்ளதால் சென்னையில் இருந்து மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் மற்ற விமானங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் 'கோ பர்ஸ்ட்' விமானங்கள் செல்லும் மற்ற மாநிலங்களில் இருந்து அதன் வழித்தடத்தில் உள்ள நகரங்களுக்கு விமான கட்டணத்தை மற்ற விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×