என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இயந்திரக் கோளாறால் தரையிறங்கிய விமானம்:  700-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி
    X

    இயந்திரக் கோளாறால் தரையிறங்கிய விமானம்: 700-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

    • இயந்திரக் கோளாறால் அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது.
    • 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பேருடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறால் அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது.

    இதனால் லண்டன் - சென்னை, சென்னை - லண்டன் என இருமார்க்கமாக செல்ல இருந்த 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான ரத்தால் இரு மார்க்கத்திலும் 700-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

    முன்னதாக, கடந்த 12-ந்தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 274 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×