search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spice Jet"

    • பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து.
    • பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் டெல்லி ஐதராபாத், சீரடி, கோவா, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்களுக்கு விமானம் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இன்று காலை சீரடி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏற்கனவே முன்புதிவு செய்து இருந்தவர்கள் பயணம் செய்ய வந்தனர். அவர்களை பாதுகாப்பு வீரர்கள் அனுமதிக்கவில்லை. 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு அந்த நிறுவனத்தின் 12 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

    பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகம், நிர்வாக சீர்திருத்தம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    ×