என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    Flight Cancel | தொழில்நுட்ப கோளாறு: ரத்தானது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்..! பயணிகள் கடும் அவதி
    X

    Flight Cancel | தொழில்நுட்ப கோளாறு: ரத்தானது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்..! பயணிகள் கடும் அவதி

    • சென்னைக்கு புறப்பட தயாராக இருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.
    • விமானத்தில் சென்னைக்கு 250 பேர் பயணம் செய்ய இருந்தனர்.

    பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும், அதிகாலை 5.30 மணிக்கு, லண்டனில் இருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் காலை 7.35 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும்.

    இதைப்போல் இந்த விமானம் நேற்று லண்டன் விமான நிலையத்தில் இருந்து, சென்னைக்கு புறப்பட தயாராக இருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதனால் லண்டனில் இருந்து, சென்னைக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் சென்னைக்கு 250 பேர் பயணம் செய்ய இருந்தனர்.

    லண்டனில் இருந்து வர வேண்டிய விமானம் ரத்தால் சென்னையில் இருந்து இன்று காலை 7.35 மணிக்கு, லண்டன் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த விமானம் நாளை அதிகாலை, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய 218 பயணிகள், மற்றும் லண்டனில் இருந்து வர வேண்டிய 250 பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×