என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசார கூட்டம்"

    • பிரசார கூட்டம் காலை 11 மணி முதல்1 மணி வரை நடைபெற இருக்கிறது.
    • விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் யாராக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் திருச்சி, நாகப்பட்டினம், கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த 3 இடங்களிலும் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதன் பிறகு அனுமதி அளிக்கப்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜய்யின் பிரசாரத்துக்காக தேர்வு செய்து ஒப்புதல் கேட்கும் இடங்களை பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி மாவட்ட காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

    இது தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் கூறும் போது, விஜய்யின் அனைத்து கூட்டங்களுக்கும் கடுமையான போராட்டத்துக்கு பிறகே அனுமதி கிடைத்து வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இப்படி தமிழகத்தில் கூட்டம் நடத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

    தமிழகத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று 70 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் ஈரோட்டில் விஜய்யின் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஆனால் அங்கு 3 இடங்களை தேர்வு செய்து அடையாளம் காட்டியுள்ள நிலையிலும் விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது மாவட்டமான ஈரோட்டில் செல்வாக்கை நிரூபிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இதை தொடர்ந்து விஜய்யின் பிரசாரத்துக்கான இடங்களை அவரே நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்து வருகிறார்.

    இதன்படி ஈரோடு மாவட்டம் பவளத்தாம் பாளையம் பகுதியில் தனியார் இடத்தை தேர்வு செய்து அங்கு விஜய்யின் பொதுக்கூட்டத்தை வருகிற 16-ந்தேதி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இடமும், தேதியும் மாற்றப்பட்டது. 16-ந்தேதிக்கு பதில் வருகிற 18-ந்தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவித்த செங்கோட்டையன் பெருந்துறை அருகே உள்ள சரளை என்ற இடத்தில் 19 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து போலீசாரிடம் அடையாளம் காட்டினார்.

    அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மீண்டும் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது.

    அங்கு பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் தரப்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் த.வெ.க. வினர் அதிர்ச்சி அடைந்தனர். எப்படியாவது அந்த இடத்தில் பிரசார கூட்டம் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த த.வெ.க.வினர் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் புதிய சிக்கலாக பிரசாரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் பரப்பின் ஒரு பகுதியாக இருப்பது தெரிய வந்தது. இதனால் கோவில் இடத்தில் அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

    இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலம் அரசின் ஆவணங்களின்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. சம்பந்தப்பட்ட நிலத்தை நீண்ட காலமாக அந்த பகுதியில் உள்ள ஒரு குறிப்பி ட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியான 19 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க. வினர் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி மனு அளித்திருக்கின்றனர். இதனால் பொதுக்கூட்டம் நடத்து வதற்கான அனுமதியை இந்து சமய அற நிலையத்துறையிடம் த.வெ.க.வினர் அனுமதி வாங்காத நிலையில் அங்கு பிரசார கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட போலீஸ் துறைக்கும் விஜயபுரி அம்மன் கோவில் செயல் அலுவலர் கடிதம் அளித்துள்ளார் என்றனர்.

    இதனால் திட்டமிட்டபடி வரும் 18-ந்தேதி மேற்கண்ட இடத்தில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்து நீடித்து வருகிறது. அப்படி அனுமதி கிடைக்கவில்லை என்றால் கோர்ட்டை நாடுவதா? அல்லது வேறு இடத்தை தேர்வு செய்வதா? என்ற குழப்பத்தில் த.வெ.க.வினர் உள்ளனர்.

    இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலில் தேர்வு செய்யப்பட்ட சரளையில் விஜய் பிரசார கூட்டம் நடத்துவதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் போலீசாரின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

    இதைத் தொடர்ந்து இன்று கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரசாரக்கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சர், த.வெ.க, அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலான த.வெ.க. வினர் இன்று பார்வையிட்டனர்.

    அதைத்தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் , ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரசார கூட்டம் நடைபெற உள்ள இடத்திற்கு வரும் 18-ந் தேதி வருகை தர உள்ளார்.

    பிரசார கூட்டம் காலை 11 மணி முதல்1 மணி வரை நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகிறோம்.

    அரசு அலுவலர்கள் கேட்டது போல பல்வேறு பணிகளை நிறைவேற்றி தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்னென்ன ஆலோசனைகளை சொல்கிறார்களோ, அதனை ஏற்று செய்வதற்கு தயாராக இருக்கிறோம்

    புதுச்சேரி பிரசாரத்திற்கு பிறகு தமிழகத்தில் முதன் முறையாக ஈரோடு வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சி வரலாறு படைக்கும் வகையில் இருக்கும்.

    தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் நாயகன், மக்களால் எதிர்காலத்தில் அரியணையில் அமர்த்த போகிற தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் யாராக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம்.

    நாங்கள் அன்போடு அரவணைத்துக் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். நேற்று நடந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் கூட்டணிக்கு வருபவர்களை வரவேற்கிறோம்.

    யாரைக் கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தலைவர் விஜய் முடிவு செய்வார்.

    இந்து அறநிலைத்துறை பொறுத்தவரை கடிதங்கள் கொடுப்பது அந்த துறையைச் சார்ந்த ஆலயத்திற்கு கொடுக்க வேண்டும். ஆனால், அங்கு கொடுக்காமல் காவல்துறைக்கு கொடுத்திருக்கிறார்கள்.

    த.வெ.க. அ.தி.மு.க.வாக மாறும் என்று நான் சொல்லவில்லை. த.வெ.க.வில் பல பேர் இணைய வாய்ப்பு உள்ளது என்றேன்.

    விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை.

    என்னை வரவேற்கிற வாழ்த்தும் என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்வதால் தவறில்லை. த.வெ.க.வில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எம்ஜி.ஆர்- ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் த.வெ.க.வில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் த.வெ.க,வுக்கு வரவேற்பு இருக்கிறது என்றார்.

    • விஜய் பேசியபோது மின்தடை ஏற்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என குற்றச்சாட்டு.
    • மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற தவெகவினரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

    கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    இந்நிலையில், கரூரில் விஜய் பேசியபோது மின்தடை ஏற்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என குற்றச்சாட்டுக்கு மின்சாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய தலைமை பொரியாளர் ராஜலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில்," கரூரில் விஜய் பிரசாரத்தின் போது மின்தடை ஏற்பவில்லை.

    கரூரில் விஜய் உரையாற்றும்போது தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

    நிகழ்ச்சி ஏற்பட்டாளரின் ஜெனரேட்டர் பயபன்படுத்தி எரியவிட்ட விளக்குகள்தான் அணைந்தன. மின்தடை செய்யவில்லை.

    மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற தவெகவினரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை, நிராகரிக்கப்பட்டது.

    சிலர் மரத்தில் ஏறியபோது மின்தடை செய்து போலீஸ் உதவியுடன் அவர்கள் இறங்கிய பின்பு மீண்டும் மின் விநியேகாம் செய்யப்பட்டது.

    விஜய் வந்து பிரசாரம் செய்தபோது மின்தடை செய்யப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரசார கூட்டம்கடலையூர் சாலையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 22வது வார்டு செயலாளர் அந்தோணி பிரகாஷ் வரவேற்று பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரசார கூட்டம் 22-வது வார்டு கடலையூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான, கருணாநிதி தலைமை தாங்கினார். 21வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் உலக ராணி, 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி, 23வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுதா குமாரி, 23வது வார்டு செயலாளர் குமாரசாமி, 24வது வார்டு செயலாளர் அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரச்சாரக் கூட்டத்தில் 22வது வார்டு செயலாளர் அந்தோணி பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார். மாநில கழக கொள்கை பரப்புச் செயலாளர் கரூர். முரளி, தலைமை கழக பேச்சாளர் ஆனந்த், ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இரா. மணி, நகர அவைத் தலைவர் முனியசாமி, நகர பொருளாளர் ராமமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் காளியப்பன், அன்பழகன், நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவேல், விஜயன், நகர கழக வார்டு செயலாளர்கள் பூல் பாண்டியன், செந்தில்நாதன், தாமோதரன் 22வது வார்டு துணைச் செயலாளர் ராமர், வார்டு பிரதி நிதிகள் கிருபாகரன், சுமதி, வார்டு அவைத் தலைவர் மிக்கேல், வார்டு பொருளாளர் நாகராஜ், நகர இலக்கிய அணி நிர்வாகிகள் வசந்த், ராஜன், ராஜகோபால், உள்ளிட்ட ஏராளமானோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • மணிகண்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ெதருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது
    • தெருமுனை பிரசார கூட்டம் வட்டாரத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலை–மையில் நடைபெற்றது.

    திருச்சி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.யின் பதவியை பறித்து தகுதி நீக்கம் செய் ததை கண்டித்தும், பா.ஜ.க. அரசின் ஜனநாயக படுகொ–லையை கண்டித்தும் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார, நகர அளவில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், மணி–கண்டம் வட்டார காங்கி–ரஸ் கமிட்டி சார்பில் சோமரசம்பேட்டையில் தெருமுனை பிரசார கூட்டம் வட்டாரத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலை–மையில் நடைபெற்றது. வடக்கு வட்டாரத் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.

    இந்த பிரசார கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலை–வரும், திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவ–ருமான வழக்கறிஞர் பி.கோவிந்தராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மாநில கலை பிரிவு துணைத் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் அர்ஜுன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி அருண்ரசாத், மாவட்ட துணைத் தலைவர் எழிலரசன், மாவட்ட செயலாளர்கள் அருண் பிரசாத், மலை ராஜா, வட்டார நிர்வாகிகள் சேட்டு, தனசேகரன், சிங்காரவேல், அங்கமுத்து உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர்.


    • தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    கந்திலி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் வெங்களாபுரம் பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.கே. மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது கூட்டத்தில் புகுந்து வாலிபர் ஒருவர் நல்லதம்பி எம்.எல்.ஏ. வை பார்த்து வெங்களாபுரம் பகுதியில் இருந்து பொன்னேரி செல்லும் சாலை ஏன் சீரமைக்கப்பட வில்லை என தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து நல்ல தம்பி எம்.எல்.ஏ. திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை பாலமேடு அருகே பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பஸ் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் கோசபெருமாள், மாவட்ட துணை தலைவர் கோவிந்த மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, பூமா, சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, அலங்காநல்லூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, முத்துகுமரன், மாரிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    • தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.
    • தி.மு.க. அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் பெரியமுத்தூர் ஊராட்சி துவாரகாபுரியில் நேற்று மாலை நடந்தது.

    இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவன் வரவேற்றார். நிர்வாகிகள் நாராயணன், ஜெயராமன், பழனி, கோபாலகிருஷ்ணன், நாராயணசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    அவர்கள் பேசும் போது, தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டம், மகளிருக்கு நகர பஸ்களில் இலவச பயண திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்த அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதில் மாநில விவசாய துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கோவிந்தசாமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார்.
    • மாவட்ட பிரதிநிதி சுகுமார் வரவேற்புரை யாற்றினார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க மற்றும் கிருஷ்ணகிரி நகர தி.மு.க சார்பில் தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரிதா நவாப், நகர்மன்ற துணைத் தலைவரும், மாவட்ட துணை செயலா ளருமான சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர அவைத்தலைர் தர்மன், நகர துணைண செயலாளர்கள் பொன். குணசேகரன், அரங்கண்ணல், நகர பொருளாளர் கனல் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி ஜான்டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பிரதிநிதி சுகுமார் வரவேற்புரை யாற்றினார்.

    இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தலைமைகழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் பங்கேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.

    இதில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் கோவிந்தன் மற்றும் முன்னாள், இன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கினார்.
    • ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    மதுரை

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் நேற்று தொடங்கினார். இதற்காக நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திர அமித்ஷா கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக அண்ணாமலையின் நடைபயணத்தை ஆதரிக்கும் விதமாக இந்திய ஜனநாயகத்தின் தலைவர் டாக்டர்.ரவி பச்சமுத்து அவர்களும் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், கட்சியின் முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், மாநில மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ், மாநில மகளிரணி துணைச் செயலாளர் இளவரசி, மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் முத்துராஜா.

    மதுரை மாநகர் மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான் பெனாண்டிக், மதுரை மாநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் அமிர்த கிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி, மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் சாந்தி, மதுரை மாநகர் மாவட்ட வேந்தர் பேரவை செய லாளர் கதிரவன் மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
    • கூட்டம் நடத்தும் பொறுப்பு பா.ஜ.க. மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

    பா.ஜ.க. மகளிர் அணி நடத்தும் பிரச்சாரக் கூட்டம் மே21-ந் தேதி , உத்தரபிரதேசத்தின் சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.

    இந்த பழமையான கல்வி நிறுவனம், பிரதமர் மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ளது. இக்கூட்டத்தில், கிழக்கு உத்தரபிரதேசத்தில் மீதம் இரண்டு கட்ட பாராளுமன்றத் தொகுதிகளின் பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். இக்கூட்டம் நடத்தும் பொறுப்பு பா.ஜ.க. மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பா.ஜ.க. மகளிர் அணியின் பொறுப்பு செயலாளர் அர்ச்சனா மிஸ்ரா கூறும்போது, "பிரதமர் வேட்புமனு தாக்கலுக்காக இந்த முறை நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பெண்கள் கூடி நின்று ஆர்ப்பரித்தனர்.

    இதைக் கண்டு பிரதமர் மோடிக்கு உதித்த யோசனையின் பேரில் இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அனைத்து ஏற்பாடு களும், நடவடிக்கைகளும் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே செய்ய உள்ளனர்" என்றார்.

    பா.ஜ.க.வின் இந்த வித்தியாசமான பிரச்சாரக் கூட்டத்திற்காக அதன் பெண் நிர்வாகிகள் பலரும் நேரடியாக அழைப்பிதழ் விநியோகித்து வருகின்றனர்.

    இக்கூட்டத்தில் வாரணாசி மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பாராளு மன்றத் தொகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களை பங்கேற்க செய்ய முயற்சிக்கப்படுகிறது.

    இதன்மூலம், பா.ஜ.க. மகளிர் அணியினரும், பெண் நிர்வாகிகளும் தமக்கு கிடைத்த முதல் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கட்சித் தலைமையிடம் பாராட்டை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • மத்திய அரசு ஏழை மக்கள் பயன்படுத்தும் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தெருமுனை பிரசார கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது.

    தனக்கன்குளம் மந்தை திடலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகி பொன்.மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

    தொகுதி பொறுப்பாளர் பழனிகுமார், மாநிலத்தலைவர் மகேஸ்வரன், மாவட்ட தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் வினோத்ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் மத்திய அரசு ஏழை மக்கள் பயன்படுத்தும் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது. மேலும் இளை ஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் வகையிலும், நாட்டின் பாது காப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அக்னிபாத் திட்டம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

    கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், நாகேஸ்வரன், பசுமலை மகா, சீனிவாசன், கார்த்திக், வேல்முருகன், ஆனந்த், வித்யாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×