பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம்

மதுரை பாலமேடு அருகே பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம்
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு பஸ் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் கோசபெருமாள், மாவட்ட துணை தலைவர் கோவிந்த மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, பூமா, சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, அலங்காநல்லூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, முத்துகுமரன், மாரிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com