தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்

தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.தி.மு.க. அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் பெரியமுத்தூர் ஊராட்சி துவாரகாபுரியில் நேற்று மாலை நடந்தது.

இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவன் வரவேற்றார். நிர்வாகிகள் நாராயணன், ஜெயராமன், பழனி, கோபாலகிருஷ்ணன், நாராயணசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

அவர்கள் பேசும் போது, தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டம், மகளிருக்கு நகர பஸ்களில் இலவச பயண திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்த அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இதில் மாநில விவசாய துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கோவிந்தசாமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com