search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் கடி"

    • நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது.
    • தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பெரியார் நகர் விவேகானந்தர் தெருவில் தேவி என்ற பெண் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி கொண்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து குழந்தையின் முகத்தில் கடித்து குதறி உள்ளது.

    நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அதே பகுதியில் நான்கு பேரை அந்த நாய் கடித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் ரெட்டமலை சீனிவாசன் தெரு, ஒத்தவாடை தெரு உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளதாகவும் அந்த தெரு நாய்கள் கடித்து விடும் என்ற அச்சத்துடனே அந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாகவும் மாநகராட்சிக்கு புகார் அளித்தால் ஊழியர்கள் வந்து நாயை பிடித்து சென்று திரும்பவும் அந்த பகுதியிலேயே விட்டு விடுவதாகவும் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திட்டக்குடியில் தெருவில் விளையாடிய குழந்தைகளை நாய் கடித்து குதறியது.
    • குழந்தையை காப்பாற்ற வந்த குழந்தையின் தாய் கீதாவையும் கடித்துக குதறியது.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (30) இவர் மனைவி கீதா (27) மகன் சர்வேஷ் (4) பக்கத்து வீட்டு சிறுமி தீபா (15) ஆகியோர் வீட்டுக்கு முன்பு விளையாடி கொண்டு இருந்தனர். குழந்தைகளை தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய் திடீரென குழந்தை சர்வேஷ் முகம், கை பகுதியில் கடித்து கொதறியது. இவரை காப்பாற்ற வந்த குழந்தையின் தாய் கீதாவையும் கடித்துக குதறியது. சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்க வந்த பக்கத்து வீட்டு சிறுமி தீபாவையும் வெறிநாய் தொடர்ந்து கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர்.

    இதுபோல் தொடர்ந்து வெறி நாய்கள் கடிப்பதால் பெரியார் நகர் பகுதி மக்கள் தெருக்களில் அச்சத்துடன் நடமாட வேண்டி சூழ்நிலையில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும் .அப்படிப் பிடித்தால் மட்டுமே குழந்தைகள் பொதுமக்கள் என அணைவரும் நடமாட முடியும் என கூறினர் . பெரியார் நகரில் தெருநாய் குழந்தைகளை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×