search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy injured"

    • சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • வெங்கடேசன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.

    திருவொற்றியூர் வடக்கு மாட வீதி, செட்டி தெருவில் வசித்து வருபவர். நிர்மலா. இந்த வீட்டின் பாழடைந்த பால்கனி திடீரென இடிந்து அருகில் உள்ள வெங்கடேசன் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.

    அப்போது அருகில் விளையாடிக் காொண்டு இருந்த நிர்மலாவின் 3 வயது பேரன் நவீன் கிஷோரின் தலையில் கட்டிடத்தின் கல் பட்டது. இதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கடேசன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.

    • கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது.
    • கனிஷ் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது. இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கோடைவிடுமுறையை முன்னிட்டு பொருட்காட்சிக்கு வந்தனர். அப்போது கார்த்திக் மகன் கனிஷ் (வயது 7) என்பவர் பொருட்காட்சியில் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் கனிஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஸ்வின் ராஜ் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் படத்தை ஏற்படுகிறது.

    • சூர்யா இருவரும் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது.
    • அவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் தாட்கோ நகரில் 75 அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. அந்த வீடுகள் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது.

    இங்குள்ள 75 வீடுகளில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சிதிலமடைந்து குடியிருக்க தகுதியற்றவையாக மாறியுள்ளது. எனவே இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளையும் சீரமைத்து தரும்படி அங்கு வசிப்பவர்கள் கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் தாட்கோ நகரை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன்ராஜ் (33), அவரது மனைவி சுபத்ரா (26), மகள் சாதனா (10), மகன்கள் நித்தீஷ்குமார் (8), சூர்யா (6) ஆகியோர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

    இன்று அதிகாலையில் சுபத்ரா தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் நித்தீஷ்குமார், சூர்யா இருவரும் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது.

    இதில் வீட்டின் மேல் கூரை சிறுவன் சூர்யா மீது விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    • ராமு தலைக்குந்தா பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்
    • அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென அஜர்வால் மீது மோதியது.

    ஊட்டி

    ஊட்டியில் உள்ள அழகர்மலையை சேர்ந்தவர் ராமு. தலைக்குந்தா பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அஜர்வால்(வயது 9). எச்.பி.எப். பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் அஜர்வால் சம்பவத்தன்று பள்ளி முடிந்து ஏ.சி.எஸ். பகுதியில் உள்ள டியூசன் சென்டருக்கு மினி பஸ் மூலம் சென்றான். பின்னர் அங்குள்ள சாலையை கடக்க முயற்சி செய்தான். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென அஜர்வால் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த அவனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புதுமந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் எம்பாலாடாவை சேர்ந்த பஸ் டிரைவர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை மேற்கு மாம்பலம் அடுக்கு மாடி குடியிருப்பில் 2-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
    சென்னை:

    மேற்கு மாம்பலம், எம்.எச்.ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் குமார். இவரது மனைவி பரிமளா. இவர்களது 1½ வயது மகன் பரத். இவர்கள் குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று மகன் பரத்துக்கு பால்கனியில் நின்றபடி தாய் பரிமளா ‘பிஸ்கட்’ கொடுத்தார். பின்னர் அறையில் இருந்த பாலை எடுப்பதற்காக பரிமளா மட்டும் வீட்டுக்குள் சென்றார்.

    அப்போது பால்கனியில் நின்ற சிறுவன் பரத், தடுப்பு கம்பிகளுக்கு இடைவெளி வழியாக 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிறுவன் பரத்தின் நெற்றியில் மட்டும் காயம் ஏற்பட்டு இருந்தது. அதில் அவனுக்கு தையல் போடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினான். இதனால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
    ×