கடலூரில் பொருட்காட்சி ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது.கனிஷ் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார்.
கடலூரில் பொருட்காட்சி ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன்
Published on: 

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது. இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கோடைவிடுமுறையை முன்னிட்டு பொருட்காட்சிக்கு வந்தனர். அப்போது கார்த்திக் மகன் கனிஷ் (வயது 7) என்பவர் பொருட்காட்சியில் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் கனிஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஸ்வின் ராஜ் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் படத்தை ஏற்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com