search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக பாஜக"

    • எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி உரை.
    • வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    வாக்கு எண்ணக்கை ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்றும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் நெருங்கி வருவதால் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக பாஜகவினருடன் இன்று மாலை 5 மணிக்கு 'எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

    அப்போது வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. உங்கள் மத்தியில் பேச வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. என் வாழ்க்கையின் பெரும் பகுதியை நான் ஒரு சாதாரண தொண்டராகவே கழித்தேன்.

    உங்களின் கடினமான உழைப்பு, கட்சியை ஆழமான வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும். தமிழ்நாட்டில் உள்ள பெண்களை சென்றடைகிறதா? அது பெண்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

    நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். எங்களுடைய பூத், வலிமையான பூத் என்ற முழக்கத்திற்கு உங்களின் கடின உழைப்பே காரணம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.
    • தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.

    மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணக்கையும் ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் நெருங்கி வருவதால் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜகவினருடன் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    'எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    • அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளரை கைது செய்தனர்.
    • சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளரை கைது செய்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மலக்குழி மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சிப்பது நியாயமா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • அவதூறு வழக்கில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளரை கைது செய்தனர்.

    சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையடுத்து, காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் குவிந்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்று மொழியாக வருவதை எதிர்ப்பது ஏன்?
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக கேள்வி

    தமிழக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கியுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஏடுகள் சுட்டி காட்டுவதை கொண்டு முதலமைச்சர் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச்செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. மே

    மேற்கண்ட கல்வி நிலையங்களில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெறவேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக இடம் பெறவேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்று மொழியாக வருவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை.
    • காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு புறக்கணிக்கிறது.

    தமிழக பாஜக மாநில செயற் குழுவின் இரண்டு நாள் கூட்டம் வேலூர், அரப்பாக்கம், ரமணி சங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்பட அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு பாராட்டு, இளையராஜாவிற்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஓட்டி தமிழக அரசு போலி விளம்பரம் தேடுவதாக இந்த கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வழிபாட்டு நெறிமுறைகளில் அரசியல் தலையீடு செய்து பாரம்பரிய முறைகளை அரசு சீரழிப்பதாகவும் பாஜக செயற்குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் தொழில்வளர்ச்சித் திட்டங்களுக்கு திமுக அரசின் ஒத்துழையாமைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய திட்டங்களை தீட்டி இந்தியாவை தொழில் வளர்ச்சியில் முன்னெடுத்துச் செல்லும் நிலையில், தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக புல்லட் ரயில் திட்டம், பாதுகாப்பு தொழில்வழித்தட திட்டம், ஜவுளி தொழிற் பூங்காக்கள் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் திமுக அரசு ஒத்துழைப்பு வழங்காமலும், திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

    மத்திய பாஜக அரசிற்கு தமிழக வாக்காளர்கள் மத்தியில் நற்பெயர் வந்துவிடக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்த திட்டங்களை மாநில திமுக அரசு புறக்கணிக்கிறது என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் திட்டங்களால் மக்களுக்குத்தான் பலன், தங்களுக்கு தனிப்பட்ட பலன் கிடைக்காதே என்பதால் ஒத்துழைப்பு வழங்க திமுக அரசு தயங்குவதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எரிபொருள் விலையை குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியிலிருந்து திமுக பின்வாங்குகிறது.
    • புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட குறைவாக இருக்கிறது.

    தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக்கோரி, தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    எரிபொருள் விலையை குறைப்போம் என்ற தனது தேர்தல் வாக்குறுதியிலிருந்து திமுக பின்வாங்குகிறது. புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட குறைவாக இருக்கிறது.

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஏழு மாதங்களில் இரண்டு முறை எரிபொருள் விலையை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் அளித்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலின்போது விலைவாசியைக் குறைப்பதாக திமுக உறுதியளித்தது, ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

    முடியாததை செய்யுமாறு நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 5 மற்றும் 4 ரூபாய் குறைக்கப்படும் என்ற உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

    தேர்தல் வாக்குறுதியில் எழுத்து பூர்வமாக கொடுத்துள்ளபடி நீங்கள் குறைக்கவில்லை என்றால், உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றுதான் அர்த்தம். அதைக் கேட்கக்கூடிய கடமை எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பாஜகவுக்கு இருக்கிறது.

    கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் வகையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று திமுக உறுதியளித்தது, ஆனால் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியது.

    டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழக அரசுக்கு கெடு கொடுக்கிறோம். உங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற முடியவில்லை என்றால், பாஜகவின் பாதயாத்திரையை ஜனவரி 1-ந் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் ஆரம்பித்து, சென்னை கோபாலபுரத்தில் முடித்து வைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×