search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழவர்சந்தை"

    • கடைகளுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
    • சந்தை வளாகத்தில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தவில்லை.

    உடுமலை:

    உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள், பழங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இது தவிர மலைப்பகுதியில் விளையக் கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய், உருளை மற்றும் சேனைக்கிழங்கு , நெல்லிக்காய் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.

    இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    அதற்கு தகுந்தவாறு உழவர் சந்தை வளாகத்தில் கடைகளுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாத தால் நடைபாதை முற்றிலும் சேதமாகி உள்ளது. அவற்றை சீரமைப்பதற்கும் அதிகாரிகள் முன் வரவில்லை. இதனால் சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள்- விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் சந்தை வளாகத்தில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தவில்லை.

    இதனால் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்ற விவசாயிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதற்கு உண்டான கோரிக்கையை விடுத்தும் இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது.

    எனவே முதல் கட்டமாக உழவர் சந்தை வளாகத்தில் சேதம் அடைந்த பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.    

    • மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
    • காய்கறிகள், பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது

    உடுமலை :

    உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய்,உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.

    விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். காய்கறிகள் வரத்தும் அதிக அளவில் இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் கழிவுகளும் சேர்ந்து வருகிறது. அதை முறையாக அகற்றாமல் சந்தை வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து உள்ளனர்.இதன் காரணமாக காய்கறிகள்,பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அன்றாட உணவில் காய்கறிகள் கீரைகளின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். தற்போது வெப்பத்தின் தாக்குதல் அதிகமாக உள்ளதால் காய்கறிகள், கீரைகள் விரைவில் வாடி விடுகின்றது. இதனால் நாள்தோறும் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றோம். ஆனால் காய்கறி கழிவுகளை அகற்றாமல் சந்தை வளாகத்தின் நுழைவுப்பகுதியில் குவித்து வைத்து உள்ளனர். அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சந்தையின் ஒரு பகுதியில் விவசாயிகள் கடை அமைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் முழுமையான அளவில் காய்கறிகளை வாங்க முடிவதில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால் சந்தையில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது.

    எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் நாள்தோறும் சந்தையில் சேகரமாகும் கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • விருதுநகர் உழவர்சந்தை கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தற்போது வரை விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் E-NAM செயல்பாடுகள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிட்டங்கியை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 4.2 டன் அளவிலான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட விளை பொருட்களை சுத்தமாகவும், தரமாகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். உழவர் சந்தைக்கு வருகை புரிந்த விவசாயிகளிடம் அவர்கள் விளைவிக்கும் விளைபொருட்கள், விலை விபரங்கள், வருகை நாட்கள் மற்றும் நுகர்வோர்களிடம் உழவர் சந்தை பயன்கள் குறித்து கலந்துரையாடினார்.

    உழவர் சந்தை அலுவலர்களிடம் காய்கறி விலை நிர்ணயம் குறித்து கேட்டறிந்து உழவர் சந்தைக்கு கூடுதலான விவசாயிகள் மற்றும் நுகர்வோர் வருகையை அதிகரிக்க அறிவுறுத்தினார்.

    பின்பு விருதுநகர் விற்பனை குழுவின் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்படுத்தப்படும் E-NAM திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருளீட்டுக்கடன் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடனுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, தற்போது வரை விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் E-NAM திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளான மின்னணு ஏலஅறை, தரப்பகுப்பாய்வு ஆய்வகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிட்டங்கியில் பொருளீட்டுக் கடனுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் விளைபொருள்கள் ஆகியவற்றையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (வேளாண்மை) உத்தண்ட ராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியாரம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • உழவர் சந்தை களில் தினமும் விவசாயிகள் பலர் காய்கறிகளை கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள்
    • ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவை யான காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.

    ஈரோடு, 

    ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தை கள் செயல்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    காய்கறிகள்

    மேலும் உழவர் சந்தை களில் தினமும் விவசாயிகள் பலர் காய்கறிகளை கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். மேலும் இங்கு பயிறு வகைகள், பருப்பு வகைகள், சிறுதானி யங்கள், காளான் மற்றும் பழ வகைகளும் குறைந்த விலையில் கிடக்கிறது.

    இதே போல் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவை யான காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.

    மார்க்கெட்

    இதே போல் ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு விவ சாயிகள் மற்றும் வியா பாரிகள் காய்கறி மற்றும் பழ வகைகள் கொண்டு வந்து விற்பனை செய்ய ப்படுகிறது. இதனால் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து காய்கறி மற்றும் பழ வகைகளை மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரு கிறது. மேலும் பழனி உள்பட முருகன் கோவில்க–ளுக்கு அதிகளவில் பக்தர்கள் மாலை அணிந்து சென்று வருகிறார்கள். இதனால் மார்க்கெட்டு மற்றும் உழவர் சந்தைகளில் காற்கறி மற்றும் பழங்கள் விற்பனை அதி கரித்தது. இதையொட்டி பெரும்பா–லான பொது மக்கள் அதிகளவில் மார்க் கெட்டுக்கு வந்து காய்கறி களை வாங்கி சென்றனர்.

    பல மடங்கு அதிகரிப்பு

    இதனால் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டு களில் வழக்கத்தை விட அதிகளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆயிர க்கணக்கானோர் வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள்.

    இதையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் காய்கறி கள் மற்றும் பழ வகைகள் விற்பனை பல மடங்கு அதிககரித்தது.

    பொங்கல் பண்டிகையை யொட்டி ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 50 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.

    உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறி விலை நிலவரம் கிலோவில் வருமாறு:-

    தக்காளி- ரூ.28, கத்திரி- ரூ.60, வெண்டைக்காய்- ரூ.60, சரக்காய் ஒன்று- ரூ.12, முருங்கய் காய்- ரூ.130, கேரட்-ரூ.42, பீட்ரூட்-ரூ.40.

    • உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    • சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை ெரயில் நிலையம் அருகே அமைந்துள்ள உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்ய உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சுற்றுவட்டராப் பகுதி விவசாயிகள் தினந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதேபோல் உழவர்சந்தையின் வெளிப்புறம் சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவாசாயிகளுக்கு மிகவும் நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்படுகிறது .இதுகுறித்து விவசாயிகள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் பெரிதும் நஷ்டம் அடைவதாகவும் தெரிவித்தனர் .உடனடி நடவடிக்கை இல்லை என்றால் உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்

    • அதிகாலை 4 மணி அளவில் தொடங்கும் வியாபாரம் 8 மணி வரை நடைபெறும்.
    • அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதிகாலை 4 மணி அளவில் தொடங்கும் வியாபாரம் 8 மணி வரை நடைபெறும் . இதில் காய்கறிகளை வாங்க திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தெருவிளக்கு , குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட செய்தித்துறை அமைச்சர் பொதுமக்களிடமும் அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மேலும் தென்னம்பாளையம் உழவர் சந்தை அலுவலகத்தில் ஆய்வு செய்ததுடன் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ஆகியவற்றையும் கேட்டறிந்தார் .

    இந்த ஆய்வின் போது தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் , மாவட்ட கலெக்டர் வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
    • 3 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

    அரவேணு:

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் 60 கடைகளை அகற்றிவிட்டு, புதிய உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோத்தகிரி பேரூராட்சி கூட்டம் நடத்தப்பட்டு, பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை உழவர் சந்தை அமைக்க வேளாண் வணிகத்துறைக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும், அதை கண்டித்து பேரூராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தகவல் பரவியது.

    இதையொட்டி அங்கு முன் எச்சரிக்கையாக ஊட்டி துணை சூப்பிரண்டுகள் செந்தில் குமார், யசோதா ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், மனோகரன், ரமேஷ் உள்பட 50 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

    இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் தலைவர், செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு, வியாபாரிகள் பாதிக்காத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் மன்ற கூட்டம் தொடங்கியது. ஆனால் கூட்டம் முடியும் வரை அலுவலகம் முன்பு வியாபாரிகள் காத்திருந்தனர்.

    தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த உறுப்பினர்கள் கூறும்போது, உழவர் சந்தைக்கு இடம் வழங்கும் தீர்மானம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, வனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அவரது ஆலோசனைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    இதை ஏற்று சுமார் 3 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர். தொடர் போராட்டம் இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புதிய உழவர் சந்தை அமைக்கும் முடிவை கைவிடாவிட்டால் தாலுகா சங்கம், மாவட்ட, மாநில சங்கங்களின் ஆதரவுடன் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    இந்த பகுதியில் உழவர் சந்தை அமைத்தால், அப்பகுதியில் உள்ள தங்களது பூர்வீக கோவிலின் புனித தன்மை கெட்டு விடும் என்பதால், அதை கைவிட வலியுறுத்தி ஏற்கனவே கோத்தர் இன மக்களும் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 150 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுடன் கூடிய மஞ்சப்பைகளை வழங்கப்பட்டது.
    • விசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உத்தரவு ஆகியவற்றையும் அமைச்சா் வழங்கினாா்.

    ஊட்டி:

    கூடலூா் பஸ் நிலையம் அருகே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் புதுப்பொலிவுடன் கூடிய உழவா் சந்தையை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

    பின்னர் அவர் பேசுகையில், உழவா் சந்தை மூலம் இடைத்தரகா் இல்லாமல் விவசாயிகள் தங்களது பண்ணை காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யவும், அதற்கு சரியான விலையையும் பெறலாம். மேலும், நுகா்வோா் தரமான பொருள்களை வெளிசந்தையை விட குறைந்த விலையில் வாங்க முடியும் என்றாா். இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உத்தரவு ஆகியவற்றையும் அமைச்சா் வழங்கினாா்.

    மேலும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலநாடு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு உறுப்பினா்களின் பங்குத் தொகைக்கு, இணை பங்குத் தொகையாக ரூ.5 லட்சம் அரசு மானியத்தையும், முதுமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ.2.01 லட்சம் மானியமும் வழங்கினாா்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக 150 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுடன் கூடிய மஞ்சப்பைகளை வழங்கினாா்.

    தேவாலா பகுதியில் காட்டு யானைகள் தாக்கி வீடுகள் சேதமடைந்த பாதிக்கப்பட்ட நபா்களுக்ககு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா். இதில் கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், கூடலூா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, தோட்டக்கலை உதவி இயக்குநா் விஜியலட்சுமி, நகா்மன்றத் தலைவா் பரிமளா, நகர செயலாளர் இளஞ்செழியன்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • தெற்கு உழவர்சந்தைக்கு 75 முதல் 90 டன் காய்கறிகளும், வடக்கு சந்தைக்கு 12 முதல்16 டன் காய்கறிகளும் தினசரி விற்பனைக்கு வருகிறது.
    • நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் உழவர் சந்தையும், புதிய பஸ் நிலையம் பின்புறம் வடக்கு உழவர் சந்தையும் செயல்படுகிறது.

    ற்கு உழவர்சந் தைக்கு நாள் ஒன்றுக்கு 75 முதல் 90 டன் காய்கறிகளும், வடக்கு சந்தைக்கு தினசரி 12 முதல்16 டன் காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் சந்தைக்கு காய்கறி வாங்க வியாபாரிகள் பலர் திரள்கின்றனர். திருப்பூர் தெற்கு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 350 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வாங்கிச்செல்ல 4,500 பேர் வருகின்றனர்.நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகிறது. இச்சந்தையில் கடந்த ஜூன் மாதத்தில் 2,507 டன் காய்கறி விற்பனையாகியுள்ளது. ரூ.6.98 கோடிக்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது. காய்கறி வாங்க கடந்த மாதத்தில் 1.49 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர்.

    வடக்கு சந்தையில் கடந்த மாதத்தில் 513 டன் காய்கறி ரூ. 1.47 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 63 ஆயிரம் பேர் காய்கறி வாங்க வந்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் இரு சந்தைகளிலும் சேர்த்து ரூ. 8.45 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

    • கடந்த வாரங்களில் தமிழகம் முழுவதும் உள்ள, உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
    • தினமும் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் பகுதியில், உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர்.

    தமிழக அளவில் திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், தினமும் 100 டன் காய்கறிகள் வரை விற்பனைக்கு வருகிறது. தினமும் 370 முதல் 380 விவசாயிகள் காய்கறி விற்கின்றனர்.

    கடந்த வாரங்களில் தமிழகம் முழுவதும் உள்ள, உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காய்கறிகள் விற்கப்படுவதும், வாடிக்கையாளர் பயன்பெறுவதும் தெரிய வந்துள்ளது.

    கடந்த சில வாரங்கள் நடத்தப்பட்ட ஆய்வின்படி ஒரு நாளின் சராசரி வியாபாரம் கண்டறியப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளில்தினமும் 165 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    அதாவது தினமும் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உழவர் சந்தைகளுக்கு தினமும் 645 வியாபாரிகள் வந்து காய்கறி விற்கின்றனர்.

    கடந்த மாத நிலவரப்படி 14 ஆயிரத்து 566 பேர் தினமும் பயனடைந்து வந்துள்ளதாகவேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×