search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers suffer"

    • கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கடந்த 3ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூடி கிடப்பதால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன், நகைக்கடன், சிறு வணிக கடன், மாற்றுத்திற னாளி கடன், மகளிர் குழுவிற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

    இந்த சங்கங்களில் அட மானம் வைத்துள்ளவர்க ளின் கடன்கள் அடிக்கடி அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் அதற்குரிய தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதில்லை. இதனால் பல சங்கங்கள் கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகின்றனர். இதனால் டெபாசிட் தாரர்களுக்கு முதிர்வு தொகையை கூட வழங்க முடியாத நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் ரேசன் கடை ஊழியர்களுக்கான ஊதியம், கடை வாடகை, மின் கட்டணம் போன்றவை கூட்டுறவு சங்கங்கள் மூலமே வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த தொகையை அரசு ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னரே சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. இதனி டையே டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், டிரோன், லாரிகள், சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும்.

    கிட்டங்கிகள் கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்கங்களை அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருகின்ற னர். இதற்கு தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 3ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 198 கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டு ள்ளன. இதனால் பயிர் கடன், நகை கடன் மற்றும் உரம் வினியோகம் ஆகி யவை கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது. விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூடி கிடப்பதால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஐ.சி.டி.பி., ஆர்.ஐ.டி.எப். அக்ரோ சர்வீஸ் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் டிராக்டர் மற்றும் விவசாய உபகரண ங்கள் வாங்கப்பட்டன. கிடங்குகளும் கட்டப்பட்டன. தற்போது அவை பயன்பாட்டில் இல்லாததால் கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    அதேபோல தற்போதும் எந்திரங்கள் வாங்கவும், கிடங்குகள் கட்டவும் வற்புறுத்தி வருகின்றனர். இதற்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை செலவு செய்ய நேரிடும். இதனால் சங்கங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் என்பதால் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

    • நெடுஞ்சாலை பணிக்காக மூடப்பட்ட பாசன கால்வாயால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
    • வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் வந்த சோதனை.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ். மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் இங்குள்ள வாகை கண்மாயில் பருவ மழை காலங்க ளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயி களின் விளைநிலங்கள் குறுக்கே கடந்த 3 ஆண்டுகளாக மதுரை-காரைக்குடி தேசிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் காலங்காலமாக ஏக்கர் கணக்கில் உள்ள விளை நிலங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தி வந்த கால்வாயை அதிகாரிகள் சாலை பணிக்காக மூடி விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சாலையின் ஒரு புறம் சுமார் 20 ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியும், மறுபுறம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பல ஏக்கர் நிலம் தரிசு நிலம் போல் காட்சி அளிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகை யில், சாலை பணி தொடங்கும் போது அதிகாரிகளிடத்தில் காலங்காலமாக விவசாயத்திற்கு நாங்கள் பயன்படுத்தி வந்த தூம்பு வாய்க்காலிலேயே புதி தாக கல்வெட்டு பாலத்தை ஏற்படுத்தி தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தோம்.

    ஆனால் அதிகாரிகள் எங்கள் பேச்சுக்கு செவி சாய்க்காமல் கண்மாயின் இருபுறமும் மேடாக உள்ள பகுதியில் பாலத்தை கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கண் மாயிலில் உள்ள தண்ணீரை பாசனத்திற்கு மடை வழியாக திறக்கும்போது வயலின் ஒரு பகுதியில் கண்மாய் போல் தண்ணீர் தேங்கிய கார ணத்தினால் மறுப்பகுதிக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நிலவி வருகிறது.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் இன்றளவும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என்று கூறி வருகின்றனர். அதிகாரி களின் அலட்சியம் மற்றும் மெத்தனப்போக்கால் ஒரு கிராமமே விவசாயத்தை இழந்து தண்ணீர் இருந்தும் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையிக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 15 நாட்களாக நீர் பாசனம் செய்ய முடியாவில்லை
    • ஆலோசனை செய்த பிறகே நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஓட்டேரி அடுத்த வானியன்குளம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாய நிலங்கள் அதிகம் காணப்படும் இந்த பகுதியில் நெல், சேம்பு, கருணை, மஞ்சள், கடலை, கத்தரி மற்றும் வெண்டை உள்ளிட்ட பயிர் வகைகள் விவசாயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் இறுதி ஊர்வல பூ பல்லக்கு மின் கம்பியின் மீது உரசியது. இதனால் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள், வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு கிடைக்கும்படி மின் மாற்றியை தற்காலிகமாக சரி செய்துள்ளனர்.

    இதனால் விவசாய நீர் பாசன மின் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த 15 நாட்களாக அந்த பகுதியில் உள்ள விவசாயிகளில் நீர் பாசனம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் பயிர்கள் வாடி வதங்கி கருகிப்போக தொடங்கியுள்ளது.

    இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின்மாற்றியில் கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினர்.

    • வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை விற்பனை குழு அலுவலகம் உள்ளது.
    • இங்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை விற்பனை குழு அலுவலகம் உள்ளது. இங்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக வாரந்தோ றும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஏலம் நடைபெறுகிறது.

    செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலமும், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுவது வழக்கம். ஏல முறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வர்த்தகம் செயல்ப டுகிறது. அதில் பொருட்க ளின் தரத்துக்கு ஏற்ப அதிகபட்ச விலை, குறைந்த பட்ச விலை, சராசரி விலையென நிர்ணயித்து பொருட்களைக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு அதற்குரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    தற்போது கடத்த சில வாரங்களாக வியாழக்கி ழமை தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடத்துவதில் குளறுபடி ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேங்காய் பருப்பு ஏலம் மதியம் நடந்து முடிந்தவுடன் மாலையில் தாங்கள் கொண்டு வந்த தேங்காய் பருப்பு என்ன விலைக்கு போனது என விவசாயிக ளுக்கு செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.மூலம் தெரிந்து கொள்வார். வியாழக்கிழமை நடந்த ஏலத்தில் தாங்கள் கொண்டு வந்த பொருட்களின் ஏல விலை தெரியாமல் வெள்ளிக்கிழமை விவசாயி கள் விலையை தெரிந்து கொள்ள காலை 10.30 மணிக்கு நேரில் வந்தனர். விவசாயிகளுக்கு தகுந்த பதில் கூற அங்கு பணியில் ஆட்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக இங்கு உரிய நேரத்தில் பணிக்கு பணி யாளர்கள் வருவதில்லை. இந்த அலுவலகம் பெயருக்கு மட்டுமே செயல்படுகிறது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே ஏலம் நடைபெறு கிறது. இங்கு விவசாயப் பொருட்கள் அழுகி போகா மல் இருக்க குளிர்சா தன வசதி கிடங்கு உள்ளது. விவ சாயிகள் மற்றும் வியாபாரி கள் தாங்கள் தேவைப்படும் நேரத்தில் குளிர்சாதன கிடங்கில் இருந்து பொருட் களை எடுக்க முடியா மல் போன தால் அதை விவசாயிகள் பயன்படுத்த முன் வருவ தில்லை.நேற்று முன்தினம் நடந்த தேங்காய் பருப்பு ஏல நிலவரம் வெள்ளிக்கிழமை வரை ஏல நிலவரம் தெரிய வில்லை. மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    இது குறித்து அங்கு இருந்த ஊழியரிடம் கேட்ட போது, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்சப்ளை அதிக வோல்டேஜ் வந்ததால் மின் இணைப்பில் இருந்த சாத னங்கள் பழுதாகியது. இது குறித்து மின்சார வாரியத்தி டம் புகார் அளிக்கப்பட் டுள்ளது. தேங்காய் பருப்பு ஏலம் நிலவரம் குறித்து விவசாயிகளுக்கு கூடிய விரைவில் ெதரிவிக்கப்படும், என்றார்.

    • வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.
    • இப்பகுதி விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தபோதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இப்பகுதியில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்தனர். தற்போது ஒரு கிலோ ரூ.4-க்கு மட்டுமே மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பயிரிடும் செலவு, பராமரிப்பு, சுத்தப்படுத்துதல் என பல்வேறு பணிகளுக்கு பணத்தை செலவழித்த அவர்களுக்கு போதுமான லாபம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    எனவே இப்பகுதி விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குறிஞ்சிப்பாடியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளன.
    • சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடிக்கு அருகில் உள்ள கல்குணம் பூதம்பாடி ஓணாங்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்ததால் நீரில் மூழ்கி நெல் பயிர்கள் மடிந்தன.

    தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இந்த புகையான் பூச்சிகளை அழிக்க பல கம்பெனிகளின் மருந்துகளை தெளித்தும் பயனில்லை. இது தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்க முன்வரவில்லை.

    எனவே, வேளாண்துறை உயரதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல் குணம்மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதால் தனி கவனம் செலுத்தி விவசாய நிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்கா ச்சோளம் பயிர் செய்துள்ள னர்.
    • மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மருந்து தெளித்தும் பயனில்லை .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே அகரகோட்டாலம் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்கா ச்சோளம் பயிர் செய்துள்ள னர். தொடர்ந்து விவசாயிகள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு பராமரித்து வந்தனர். இந்நிலையில் மக்காச்சோள பயிரில் கடந்த சில வாரங்க ளாக படைப்புழுக்கள் தாக்குதல் காணப்பட்டது. இதை யொட்டி விவசாயிகள் பயிர்களுக்கு மருந்து தெளித்த னர். இருப்பினும் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறையவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அகர கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 44) ஆட்டோ டிரைவர். இவர் தனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் கடந்த 60 நாட்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிட்டு பராமரித்து வருகிறார். இந்நிலையில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மருந்து தெளித்தும் பயனில்லை புழுக்கள் சாகாமல் உயிருடன் இருக்கிறது.

    ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பயிர்களை பராமரித்து வந்த நிலையில் படைப்புழுக்கள் தாக்குதலால் பயிர்கள் நாசமாகி போனது. எனவே சம்மந்தப்பட்ட வேளாண்மை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் மேலும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மருந்து வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    • சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை ெரயில் நிலையம் அருகே அமைந்துள்ள உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்ய உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சுற்றுவட்டராப் பகுதி விவசாயிகள் தினந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதேபோல் உழவர்சந்தையின் வெளிப்புறம் சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவாசாயிகளுக்கு மிகவும் நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்படுகிறது .இதுகுறித்து விவசாயிகள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் பெரிதும் நஷ்டம் அடைவதாகவும் தெரிவித்தனர் .உடனடி நடவடிக்கை இல்லை என்றால் உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்

    • வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் அதனை இருப்பு வைக்க முடியாததால் அழுகி வருகிறது.
    • பருவமழை முடியும் வரை இதே நிலை தொடரும் என்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெ ட்டுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தினசரி சுமார் 3 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    பண்டிகை மற்றும் விசேச நாட்களில் அதிக அளவு காய்கறிகள் வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான காய்கறிகள் தண்ணீரில் மூழ்கியும், பறிக்க முடியாத நிலையில் அழுகியும் வருகிறது. இதனால் காய்கறி செடிகள் பயிரிட்ட விவ சாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் அதனை இருப்பு வைக்க முடியாததால் அழுகி வருகிறது.

    இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெ ட்டில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.95 முதல் விற்பனை யாகிறது. வெளி மார்க்கெ ட்டில் இதைவிட கூடுதலாக விற்கும் என்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர்.

    ஆனால் அதே வேளையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளியை பறிக்காமலும், பறித்த தக்காளியை குப்பையிலும் விவசாயிகள் கொட்டி செல்கின்றனர்.

    இதேபோல முருங்கை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், வெண்டை க்காய் கிலோ ரூ.20 என்ற விலையிலும் விற்பனையா கிறது.

    பெரும்பாலான காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதும், ஒருசில காய்கறிகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதும் விவசாயி களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ெதாடர் மழை பெய்து வருவதால் அங்கிருந்து காய்கறிகள் வரத்து குறைந்ததால் இதுபோன்ற நிலையற்ற விலை உள்ளதாக வியாபாரிகள் தெரி வித்தனர்.

    பருவமழை முடியும் வரை இதே நிைல தொடரும் என்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    • அட்டுவம்பட்டியில் இருந்து வாகனங்கள் மூலம் கொடைக்கானல் நகருக்கு 7 கி.மீ கொண்டு சென்று தான் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • வில்பட்டி கால் நடை ஆஸ்பத்திரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அட்டுவம்பட்டியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. விவசாயம் மேற்கொள்ளும் மக்கள் தங்களது விவசாய பணிகளுக்கென வளர்ப்பு மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர்.கடந்த சில வருடங்களாகவே இந்தப் பகுதியில் இயங்கிவந்த கால்நடை ஆஸ்பத்திரி செயல்படாமல் உள்ளது.

    இதனால் கால் நடைகளுக்கு சிகிக்சை பெற முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அட்டுவம்பட்டியில் இருந்து பிக்கப் வாகனங்கள் மூலம் கொடைக்கானல் நகருக்கு 7 கி.மீ கொண்டு சென்று தான் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் கால் நடை ஆஸ்பத்திரி சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. எனவே இந்த கால் நடை ஆஸ்பத்திரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தமிழக பகுதிகளின் மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • விவசாயி பணிகள் பாதிப்படைந்து வருவதோடு, விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளின் மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திக உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் திருப்பாதிரிப்புலியூர் முதுநகர் செம்மண்டலம், காராமணிக் குப்பம், திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, தொழுதூர், வேப்பூர், கீழச்செருவாய், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ,காட்டுமன்னார்கோயில் அண்ணாமலைநகர், பண்ருட்டி, சிதம்பரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது காண முடிந்தது.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயி பணிகள் பாதிப்படைந்து வருவதோடு, விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு தொழுதூர் - 34.0, வேப்பூர் - 27.0, கீழச்செருவாய் - 25.0, லால்பேட்டை - 18.0, காட்டுமயிலூர் - 15.0,பரங்கிப்பேட்டை - 14.4, புவனகிரி - 13.0, ஸ்ரீமுஷ்ணம் - 11.2, காட்டுமன்னார்கோயில் - 11.0, அண்ணாமலைநகர் - 10.0, பண்ருட்டி - 8.5, சிதம்பரம் - 7.4, கடலூர் - 5.8, கலெக்டர் அலுவலகம் - 5.4, கொத்தவாச்சேரி - 5.0, மீ-மாத்தூர் - 5.0, எஸ்ஆர்சி குடிதாங்கி - 3.75, வானமாதேவி - 3.0,ஆக மொத்தம் 222.45 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது .

    • தை மாத அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்
    • இயந்திரத்தில் நெல் நாற்று நடப்பட்டது

    நெமிலி:

    நெமிலி தாலுகாவில் தை மாத அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள் , கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இயந்தி ரத்தில் நெல் நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர் . இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் , நெமிலி தாலு காவுக்கு உட்பட்ட பகு திகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் , பெரும் பாலான விவசாயிகள் தங் களது விளை நிலங்களில் இயந்திரங்கள் மூலம் நெல் 55 நாற்று நடும் பணியில் ஈடு பட்டுள்ளனர். இதன் மூலம் தை மாத அறுவடைக்கு தயாராகி வருவதாகவும் , அதிக லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரி வித்தனர்.

    இதுகுறித்து விவசாயி கள் கூறியதாவது:-

    ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய் தால் , தை மாதத்தில் அறு வடை செய்யலாம் பயிர் களுக்கு தேவையான சூரிய ஒளியும் , பிராண வாயுவும் , நல்ல மழையும் கிடைத்து , விவசாயிகளுக்கு சிறப் பான கொடுக்கும் . கடுமையான கோடைக்காலங்களைச் சந்தித்த மண் . இறுகி கடின மாக மாறியிருக்கும் .

    ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளக தொடங்கும் . இதனால் ஆடி மாதத் தில் விதைத்த நெல்மணி கள் முளைத்துள்ள நிலை யில் , நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் . ஆனால் 100 நாள் வேலை உட்பட பல்வேறு பணிகளுக்கு பலர் சென்றுவிடுவதால் , விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை .

    இதனால் விவசாயத்தில் இயந் திரபயன்பாடு என்பது மிக அவசியமாகி விட்டது . அதற்கேற்ப நவீன இயந் திரங்கள் வருகையால் வேலையாட்கள் தேவை குறைவதோடு , வேலையை விரைவாக முடிக்கவும் முடிகிறது . இயந்திரங்கள் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பிலான சாகுபடியும் மேற்கொள்ள முடிகிறது .

    இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கிறது . மேலும் அரசு சார்பிலும் மானியம் வழங் கப்படுகிறது . இதனால் இயந்திரங்கள் மூலம் நடவு பணியில் ஈடுபட்டு வருகி றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர் .

    ×