search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிஞ்சிப்பாடியில் புகையான் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் வேதனை
    X

    சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்திருப்பதை படத்தில் காணலாம்.

    குறிஞ்சிப்பாடியில் புகையான் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் வேதனை

    • குறிஞ்சிப்பாடியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளன.
    • சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடிக்கு அருகில் உள்ள கல்குணம் பூதம்பாடி ஓணாங்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்ததால் நீரில் மூழ்கி நெல் பயிர்கள் மடிந்தன.

    தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இந்த புகையான் பூச்சிகளை அழிக்க பல கம்பெனிகளின் மருந்துகளை தெளித்தும் பயனில்லை. இது தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்க முன்வரவில்லை.

    எனவே, வேளாண்துறை உயரதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல் குணம்மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதால் தனி கவனம் செலுத்தி விவசாய நிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    Next Story
    ×