search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உழவர்சந்தை கடைகளில் கலெக்டர் ஆய்வு
    X

    விருதுநகர் உழவர்சந்தை கடைகளில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    உழவர்சந்தை கடைகளில் கலெக்டர் ஆய்வு

    • விருதுநகர் உழவர்சந்தை கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தற்போது வரை விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் E-NAM செயல்பாடுகள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிட்டங்கியை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 4.2 டன் அளவிலான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட விளை பொருட்களை சுத்தமாகவும், தரமாகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். உழவர் சந்தைக்கு வருகை புரிந்த விவசாயிகளிடம் அவர்கள் விளைவிக்கும் விளைபொருட்கள், விலை விபரங்கள், வருகை நாட்கள் மற்றும் நுகர்வோர்களிடம் உழவர் சந்தை பயன்கள் குறித்து கலந்துரையாடினார்.

    உழவர் சந்தை அலுவலர்களிடம் காய்கறி விலை நிர்ணயம் குறித்து கேட்டறிந்து உழவர் சந்தைக்கு கூடுதலான விவசாயிகள் மற்றும் நுகர்வோர் வருகையை அதிகரிக்க அறிவுறுத்தினார்.

    பின்பு விருதுநகர் விற்பனை குழுவின் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்படுத்தப்படும் E-NAM திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருளீட்டுக்கடன் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடனுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, தற்போது வரை விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் E-NAM திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளான மின்னணு ஏலஅறை, தரப்பகுப்பாய்வு ஆய்வகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிட்டங்கியில் பொருளீட்டுக் கடனுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் விளைபொருள்கள் ஆகியவற்றையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (வேளாண்மை) உத்தண்ட ராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியாரம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×