என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளிவிழா"
- பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
- விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கொக்கு மேடு வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 25 ம் ஆண்டை முன்னிட்டு வெள்ளி விழாவாக பள்ளியின் முதல்வர் ஹேமாமாலினி தலைமையில் கொண்டாடபட்டது.
சிபிஎஸ்இ மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிபிஎஸ்இ பள்ளியின் சின்னம் வெளியிட்டார். குருநானாக் கல்லூரி முதல்வர் ரகுநாதனன் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி துணை முதல்வர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் துர்கா நன்றியுரை ஆற்றினார். விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்
- உழவர் சந்தைகள் வெள்ளி விழாவை கொண்டாடி வருகின்றன.
- தி.மு.க. அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது.
சேலம்:
உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் நடைபெற்றது.
இந்த வெள்ளி விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சூரமங்கலம் உழவர் சந்தையில் வெள்ளி விழாவை தொடங்கி வைத்து விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறிகளின் தரத்தை நேரடியாக ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் நலன் கருதி கடந்த கலைஞர் ஆட்சியில் 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக 100 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது 9 உழவர் சந்தைகள் சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
இன்று 25-வது ஆண்டு நிறைவடைந்ததை யொட்டி, வெள்ளி விழாவை இந்த உழவர் சந்தைகள் கொண்டாடி வருகின்றன.
அதாவது விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இந்த உழவர் சந்தைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.
சேலத்தில் உள்ள சூரமங்கலம் உழவர் சந்தையில் 170 முதல் 200 வரை கடைகள் உள்ளன. அந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் விற்பனையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த உழவர் சந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.
அவர்களிடம் கேட்ட போது, உழவர் சந்தைகளில் தரமான, புதிய காய்கறிகள் கிடைப்பதாக பெருமை யோடு சொல்லுகிறார்கள்.
அந்த வகையில் உழவர் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உழவர் சந்தைகளை மேம்படுத்த 27.50 கோடி ரூபாய் அளவில் ஒதுக்கீடு செய்து, சீரமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல விவசாயத்திற்கு என தனி நிதிநிலை அறிக்கையை கொண்டு வந்தவர் ஸ்டாலின். அதாவது தனி நிதிநிலை அறிக்கையில் கடந்த 21- 22 ம் ஆண்டில் 32.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதனை தொடர்ந்து 2022 -2023 -ல் 33 ஆயிரம் கோடியும், 2023 -2024- ம் ஆண்டில் ரூ.38 ஆயிரத்து 904 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார்.
அது மட்டுமில்லாமல் நீர் வளத் துறையை உருவாக்கி அதற்காக மூத்த அமைச்சர் துரைமுருகனை நியமித்து, நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது. தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலுவிடம் திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விவசாயிகளுக்கு தமிழக அரசு எதும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளாரே? என்று கேட்டதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
தோழமைக் கட்சிகளைப் பொறுத்தவரை இந்த ஆட்சியை பாராட்டி வருகிறார்கள்.
ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக பா.ம.க. தற்போது மனசாட்சியை மறந்து பேசி வருகிறது. வேளாண்மைக்கு தனியாக நிதி ஒதுக்குகிறோம், அதற்கான செலவு செய்யப்படுகிறது.
ஆனால் காழ்புணர்ச்சி காரணமாக மனசாட்சியை மறந்து பேசுகின்றனர். மனசாட்சியோடு இருப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள் என பா.ம.க.விற்கு காட்டமான பதில் அளித்தார்.
- நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புளியங்குடி:
புளியங்குடி ரோட்டரி கிளப் வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆசிரியர் ஜோசப் அமல்ராஜ் வரவேற்று பேசினார். இந்த ஆண்டிற்கான புளியங்குடி ரோட்டரி கிளப்பின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாரியப்பன், செயலாளராக ஜோசப் அமல்ராஜ், பொருளாளராக முருகையா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஆறுமுகப் பாண்டியன் புதிய பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ரோட்டரி கிளப்பின் நோக்ககத்தினையும் கிளப்பின் மூலம் செய்த சாதனைகளையும் விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற புளியங்குடி எஸ்.டி.ஏ. பள்ளி மாணவன் ஆதித்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற கண்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவி தீக்க்ஷா ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கிளப் சார்பில் பள்ளிகளுக்கு மைக்ரோஸ்கோப், பீரோ, மின் விசிறி, தையல் மிஷின், மாணவ- மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜேம்ஸ் ஆரோக்கிராஜ் நன்றி கூறினார்.






