search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Village Administrative Officer"

  • பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
  • ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 28 வயது இளம் பெண்ணின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த இளம் பெண் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

  இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை அப்பெண் அணுகியுள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கரராஜ், அப் பெண்ணிடம் இருந்து செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

  பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காதர் பாஷா, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் போலீசார் பெண்களுக்கு பாலியல்எதிரான வன்கொடுமை மற்றும் சாதியை பற்றி பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

  • வீட்டு வாசலில் நின்றிருந்த பெண் சான்றிதழ்கள் எடுத்துவர உள்ளே சென்றுள்ளார்.
  • விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார்.

  கோபி:

  ஈரோடு மாவட்டம் பொலவபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவர் கடம்பூர் மலைப்பகுதி குன்றில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கோபி அருகே உள்ள நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் திருமணமாகி கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார்.

  இந்த நிலையில் முருகேசனை அந்த பெண் சந்தித்து தனக்கு வேலை வழங்குமாறும், இதற்காக உங்கள் வீட்டுக்கு வந்து நான் படித்த சான்றிதழ்களை தருகிறேன் என்றும் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வர வேண்டாம். நானே உங்கள் வீட்டுக்கு வந்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டு்க்கு சென்று சான்றிதழ்கள் கேட்டுள்ளார்.

  வீட்டு வாசலில் நின்றிருந்த அந்த பெண் சான்றிதழ்கள் எடுத்துவர உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரை முருகேசன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சற்றும் எதிர்பாராத வகையில் அவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து அந்த பெண் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி கிராம நிர்வாக அலுவலரை முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

  • பணம் வாங்க எழுதி வைத்திருந்த ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
  • நீதிபதி அவரை வருகிற 12-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார் .

  நாகர்கோவில்:

  பத்துகாணி பகுதியைச் சேர்ந்தவர் புரோன் விவசாயி. இவர் தனது நிலத்தில் உள்ள மரங்களை அகற்றுவதற்காக களியல் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

  கிராம நிர்வாக அதிகாரி முத்து (வயது 49) என்பவர் புரோன் கொடுத்த மனுவிற்கு உரிய பதில் அளிக்கவில்லை. பின்னர் நேரில் சந்தித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் பேசியபோது ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி தருவதாக கூறியுள்ளார். இது குறித்து புரோன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரி முத்துவை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

  இதையடுத்து நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.500 நோட்டுகளை புரோனிடம் கொடுத்து அனுப்பினார்கள். கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த அதிகாரி முத்துவிடம் புரோன் ரூ.500 நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. எக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களையும் போலீசார் சரி பார்த்தனர்.

  அப்போது பணம் வாங்க எழுதி வைத்திருந்த ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். சுமார் 4.30 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் குழித்துறையில் கிராம நிர்வாக அதிகாரி முத்து தங்கி இருந்த வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி முத்துவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி அவரை வருகிற 12-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார் .

  இதை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி முத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி முத்துவின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் ராயகிரி ஆகும். 

  • லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
  • கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்து வருகிறார்கள்.

  நாகர்கோவில்:

  குலசேகரம் அருகே உள்ள களியலில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர், மரங்கள் வெட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக, புரோன் என்பவர் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

  இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார், களியல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர்.

  அப்போது கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுப்பதற்காக ரசாயன பொடி தடவப்பட்ட 4500 ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோனிடம் கொடுத்தனர். அந்த நோட்டுகளை அவர், கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுத்தார். அதனை முத்து வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்து வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் முத்து மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் கொட்டாரம் சார் பதிவாளர் அலுவல கத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

  காஞ்சிபுரம்:

  காஞ்சிபுரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

  இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள உள்ளாவூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

  கடந்த சில நாட்களாக இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜேசிடம் தெரிவித்தார். ஆனால் அவர் நமக்கு ஜாதகம் சரி இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்தார். மேலும் இளம் பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்தார். இதற்கிடையே இளம்பெண்ணை பெற்றோர் சமாதானபடுத்தி அவருக்கு வெறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

  இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருமணம்செய்ய மறுத்த காதலனான கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மீது சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

  காதலியை திருமணம் செய்ய மறுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • பண்ருட்டி அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
  • ஆத்திரம் அடைந்த கிராம மக்கள்,கிராமநிர்வாகஅலுவலர்அலுவலகம்முன்பு திரண்டனர்.

  கடலூர்: 

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி வேகாக் கொல்லை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது இந்த கிராம நிர்வாக அலுவலர்அலுவலகத்தை அதே பகுதியில் உள்ள அழகப்ப சமுத்திரம் ஊராட்சிசிறுதொண்டமாதேவிகிராமத்திற்கு மாற்றப்பட உள்ளதாகதகவல் பரவியது. ஆத்திரம் அடைந்த கிராம மக்கள்,கிராமநிர்வாகஅலுவலர்அலுவலகம்முன்பு திரண்டனர். பின்னர்கொள்ளு காரன் குட்டை- குள்ளஞ்சாவடி சாலையில்காட்டு வேகாகொல்லையில்சாலைமறியல்ஈடுபட்டனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

  இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார்சிவாகார்த்தி கேயன்,பண்ருட்டிபோலீஸ்இன்ஸ்பெக்டர்சந்திரன் மற்றும்காடாம்புலியூர்போலீசார்சம்பவஇடத்துக்குவிரைந்து சென்றனர்.பொதுமக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மாற்று வதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனபொதுமக்களிடம் தாசில்தார் விலக்கிகூறினார். இதனை தொடர்ந்து பொதுமக்கள்போராட்டத்தைவிலக்கிக்கொண்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  கிராம நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Vaiko

  சென்னை:

  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  தமிழகத்தில் பணிபுரியும் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 28-ம் தேதி முதல் போராடி வருகின்றனர். மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் டிசம்பர் 10-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்திலும் இறங்கி உள்ளனர்.

  கிராம நிர்வாக அலுவலர்களாக 50 விழுக்காடு பெண்கள் பணிபுரிவதால், அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் கோரி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகங்களில் மின்வசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் நிறைவேற்ற முடியாதது அல்ல.

  தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை கூடுதலாக கவனிக்க வேண்டி இருப்பதால், கிராம நிர்வாக அலுவலர்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப் படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.

  எனவே தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற முன் வரவேண்டும். பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளர். #Vaiko

  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  தருமபுரி:

  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.சி.பி.எஸ். திட்ட ஊதிய விகிதத்தை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நடைமுறை படுத்த வேண்டும், பயணப்படியை (எப்.டி.ஏ) அடிப்படை ஊதியத்தை 5 சதவீகிதம் வழங்கப்பட வேண்டும், மடிக்கணினி வழங்கப்படாத அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உடனடி மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, முன்னாள், இன்னால், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தீர்த்தகிரி நன்றி கூறினார்.
  கோவை சூலூர் அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த கிராம நிர்வாக அதிகாரியிடம் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்த கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
  சூலூர்:

  கோவை சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் லோகநாயகி.

  சம்பவத்தன்று இவர் அலுவலக பணி காரணமாக பாப்பம்பட்டி பிரிவில் இருந்து கோவைக்கு செல்வதற்காக தாராபுரத்தில் இருந்து கோவைக்கு வந்த தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது லோகநாயகி தன்னிடம் இருந்த 10 ரூபாய் நாணயத்தை கண்டக்டரிடம் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார்.

  நாணயத்தை கண்டக்டர் வாங்க மறுத்து பஸ்சில் இருந்து இறங்குமாறு தகராறு செய்துள்ளார். பஸ் சிங்காநல்லூர் அருகே வந்த போது டிக்கெட் பரிசோதகர் பஸ் சில் ஏறி உள்ளார். அவரும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து விட்டார்.

  இதனையடுத்து லோகநாயகி செல்போன் மூலம் சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சித்தாவை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். அவர் கண்டக்டரை எச்சரிதார். பின்னர் கண்டக்டர் 10 ரூபாய் நாணயத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுத்துள்ளார். இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews