காதலியை திருமணம் செய்ய மறுத்த கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது

கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
காதலியை திருமணம் செய்ய மறுத்த கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள உள்ளாவூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜேசிடம் தெரிவித்தார். ஆனால் அவர் நமக்கு ஜாதகம் சரி இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்தார். மேலும் இளம் பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்தார். இதற்கிடையே இளம்பெண்ணை பெற்றோர் சமாதானபடுத்தி அவருக்கு வெறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருமணம்செய்ய மறுத்த காதலனான கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மீது சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

காதலியை திருமணம் செய்ய மறுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com