கிராம நிர்வாக அதிகாரியை அறைந்த கடை உரிமையாளர் கைது

வீட்டின் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். காயம் அடைந்த ராஜ்குமார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கிராம நிர்வாக அதிகாரியை அறைந்த கடை உரிமையாளர் கைது
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் குகன் (வயது 32). இவர் அணைப்பட்டி சாலையில் உள்ள பேரூராட்சி வளாகத்தில் ரப்பர் ஸ்டாம்ப் செய்து தரும் கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிள்ளையார் நத்தம் கிராம நிர்வாக அலுவலராக உள்ள ராஜ்குமார் என்பவரிடம் தனது வீட்டின் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த இடத்திற்கு பட்டா வழங்குவதில் ஆட்சேபனை இருப்பதாக ராஜ்குமார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த குகன் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்து ராஜ்குமாரை கன்னத்தில் அறைந்தார். இதில் காயம் அடைந்த ராஜ்குமார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குகனை கைது செய்தனர். பின்னர் நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com