என் மலர்

  நீங்கள் தேடியது "PM MOdiடெல்லி மெட்ரோ ரெயில்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியானாவில் இன்று மேற்கு அதிவிரைவு சாலையை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி விரிவுப்படுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். #DelhiMetro #PMModi
  புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மாநிலம், குருகிராம் நகரில் மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

  அவ்வகையில், மேற்கு புறநகர் அதிவிரைவு சாலையை வாகன போக்குவரத்துக்காக திறந்து வைத்தார். மேலும், எஸ்கார்ட்ஸ் முஜேசார் பகுதியில் இருந்து பலாப்கர் பகுதி வரையிலான டெல்லி  மெட்ரோ ரெயில் சேவையின் விரிவாக்க போக்குவரத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சிகளில் அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் மற்றும் மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்றனர். #EscortsMujesar #Ballabgarhsection #DelhiMetro #PMModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இதுவரை 8.39 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதாக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார். #SwachhBharatMission #HouseholdToilets
  புதுடெல்லி:

  மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதிவரை சர்வதேச சுகாதார மாநாட்டை மத்திய அரசு நடத்த உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

  இந்த மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் பரமேஸ்வரன் ஐயர், கிராமப்புற சுகாதார மேம்பாடு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கினார்.

  ‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 8.39 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுமார் 4.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா கிராமங்களாக அறிவித்துள்ளன. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியதில் இருந்து கிராமப்புற சுகாதார மேம்பாடு அதிகரித்துள்ளது. 2014ல் 550 மில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய நிலை இருந்தது. தற்போது அது 150 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது’ என்றார் பரமேஸ்வர ஐயர். #SwachhBharatMission #HouseholdToilets
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உகாண்டா மக்களுக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். #IndiatogiftUganda #ModiinUganda
  கம்பாலா:

  உகாண்டா மக்களுக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

  அரசுமுறை பயணமாக இன்று உகாண்டா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முப்படையினர் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


  பின்னர் இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக மோடி - யோவேரி முசெவேனி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா - உகாண்டா இடையில் 4 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

  மேலும், ராணுவ ஒத்துழைப்பு, விசா நீட்டிப்பு, கலாசார பரிவர்த்தனை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.

  உகாண்டாவுக்கு நீண்டகால கடனாக 20 கோடி அமெரிக்க டாலர்களும், ராணுவத்தினர் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


  மேலும், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவி அன்பளிப்பாக வழங்கப்படும். இதன் மூலம் கிழக்காப்பிரிக்காவில் உள்ள இதர நாட்டு மக்களும் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
   
  உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் மோடிக்கு எண்ட்டெபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். உகாண்டாவில் இருந்து விடைபெற்று செல்லும் மோடி நாளை ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். #IndiatogiftUganda #ModiinUganda
  ×