என் மலர்tooltip icon

    இந்தியா

    காமராஜரின் நேர்மையும், சமூக நீதிக்கான பணிகளும் நம்மை ஊக்குவிக்கின்றன - ராகுல் காந்தி
    X

    காமராஜரின் நேர்மையும், சமூக நீதிக்கான பணிகளும் நம்மை ஊக்குவிக்கின்றன - ராகுல் காந்தி

    • வெறுப்பை எதிர்கொண்டு அமைதி, சகோதரத்துவம், உண்மை மற்றும் மனிதநேயத்தின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
    • நாட்டிற்கு புதிய திசையை வழங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்.

    அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் ஆகும். அதே நேரம் கருப்பு காந்தி என அழைக்கப்படும் கர்ம வீரர் காமராஜரின் நினைவு தினமும் ஆகும்.

    இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காமராஜரை நினைவு கூர்ந்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதவில், பாரத ரத்னா திரு. கே. காமராஜரின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்.

    அவரது பணிவு, நேர்மை மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் சமூக நீதி மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய முன்னோடிப் பணிகள் தலைமுறை தலைமுறையாக ஊக்கமளித்து வருகின்றன." என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல் மகாத்மா காந்தியை நினைவு கூர்ந்து ராகுல் வெளியிட்ட பதிவில், "உண்மை, அகிம்சை மற்றும் நல்லிணக்கக் கொள்கைகள் மூலம் இந்தியாவை ஒன்றிணைத்த பாபுவின் கொள்கைகள், வெறுப்பை எதிர்கொண்டு அமைதி, சகோதரத்துவம், உண்மை மற்றும் மனிதநேயத்தின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.

    தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்." என்று குறிப்பிட்டுளார்.

    மேலும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட பதவில், "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" என்ற முழக்கத்துடன் நாட்டிற்கு புதிய திசையை வழங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்.

    அவரது எளிமை, பணிவு மற்றும் நமது நாட்டு மக்களின் உரிமைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எப்போதும் நம்மை வழிநடத்தும்." என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×