என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killedபலி"

    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பரமத்தி அருகே பாம்பு கடித்து வட மாநிலத் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டியைச் சேர்ந்தவர் பொன்னர்.இவரது விவசாய தோட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம்,கொண்டேகாவ் மாவட்டம், கிரோலா பகுதியை சேர்ந்த பஜாருகொர்ரம் என்பவரது மகன் சன்னத்ராம்(20)  கூலி வேலை பார்த்து வந்தார். 

    கடந்த 20-ந் தேதி இரவு சன்னத்ராமை பாம்பு கடித்தது. சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி    உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பரமத்தி வேலூரை அடுத்த ‌‌எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து.‌இவரது மனைவி பாப்பாத்தி (70). இவரை கடந்த 22-ந் தேதி  பாம்பு கடித்தது.

    சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூத்தம்பூண்டி அருகே ஏரியில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியானார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அருகே கூத்தம்பூண்டி அண்ணமார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 50). கூலித ்தொழிலாளி. இவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர். பழனி சற்று மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் மும்பையில் இருந்து கூத்தம் பூண்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணிக்கம்பாளையம் சென்று விட்டு வருவதாகக் கூறிச் சென்ற பழனி திரும்ப வீட்டுக்கு வரவில்லை.
     
    பல இடங்களில் தேடி பார்த்தும் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று  மாணிக்கம்பாளையம் ஏரி பகுதிக்கு சென்றவர்கள் ஒரு ஆண் பிரேதம் இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். 

    இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

    போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர் பழனி என்று தெரியவந்தது. அவர் ஏரியில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 

    இதையடுத்து பழனியின் உடலை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லூரி பஸ்சில் சிக்கி மாணவர் பலி: கைதான டிரைவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    சேலம்:

    சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகன் அப்துல்கலாம் (வயது 20), இவர்  சேலம் சின்ன திருப்பதியில் உள்ள  ஜெயராம்  கல்லூரியில்  பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.  இவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம்  கல்லூரி முடிந்து  வீட்டிற்கு செல்ல கல்லூரி  பஸ்சில் ஏறினார். 

    அப்போது கல்லூரியை  விட்டு சற்று தூரத்தில் வந்ததும் வளைவில் சென்ற போது பஸ்சில் இருந்து அப்துல்கலாம் நிலை தடுமாறி கீேழ விழுந்தார்.  இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து   டிரைவர் மணியை கைது செய்தனர்.

    இந்தநிலையில்   கல்லூரி  மாணவர்கள்  அந்த  கல்லூரிக்கு உள்ளே பஸ்சை  விடாமல்   பஸ்சை சிறைபிடித்து    நேற்று  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை  கல்லூரி  நிர்வாகத்தினர்   மற்றும்போலீசார்  சமாதானப்படுத்தினர்.

    இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட டிரைவர் மணியை  நேற்று   கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார்     அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 
    நெல்லையை அடுத்த வேப்பங்குளத்தில் 9 ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த வேப்பங்குளம் மணி நகரை சேர்ந்தவர் பெருமாள். அதே பகுதியை சேர்ந்தவர் சப்பாணி.

    இவர்களது 9 ஆடுகள் மற்றும் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்த சந்தனராஜ் என்பவருக்கு சொந்தமான 6 மாடுகள் ஆகியவை சத்திரம் புதுக்குளம் பகுதியில் உள்ள கோபால்(65) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.

    இந்நிலையில் அவை அனைத்தும் திடீரென வாயில் நுரை தள்ளி அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. இதில் 9 ஆடுகளும் இறந்துவிட்டன. 6 மாடுகள் மயக்கம் அடைந்தன.

    அதனை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவை விஷம் கலந்த செடிகளை தின்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கால்நடைகளின் உரிமையாளர்கள் தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலிடம் விசாரித்தனர். அதில், வயலில் உளுந்து சாகுபடி செய்திருந்ததை கால்நடைகள் அவ்வப்போது புகுந்து நாசமாக்கியதால் அரிசியுடன் குருனை மருந்தை கலக்கி செடிகளில் தெளித்தது தெரியவந்தது.  

    இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
    • அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
    • இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள சாணத்திகல்மேட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சிவகாமி (50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சிவகாமி இரவு தனது வீட்டின் அருகே ரோட்டை கடந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் எதிர்பாராத விதமாக சிவகாமி மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் சிவகாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
    • இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வையத்தான் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு தர்மலிங்கம் (வயது45).இவர் சோழவந்தான் அருகே நகரி டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தனது விவசாய தோட்டத்தில் மின்மோட்டரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான அன்பு தர்மலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி பலியான டாஸ்மாக் ஊழியருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சசிதரன், ராகவி என்ற குழந்தைகளும் உள்ளனர்.

    • பெருந்துறை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் தலையில் பலத்த அடிபட்டு பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சித்தோடு ராயபாளையம்புதூர் கோர்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). இவர் நேற்று மாலை பெருந்துறை வந்துவிட்டு சித்தோடு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    பவானி ரோடு எருகாட்டுவலசு அருகே சென்று கொண்டிருந்த போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு பேச்சின்றி கிடந்தார்.

    உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • நகைக்காக 2 ெபண்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
    • சுமார் 6 பவுன் நகைகளை காணவில்லை

    அரியலூர்

    நகைக்காக பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஜெயங்கொண்டம் அருகே மலர்விழி, கண்ணகி என 2 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்ட மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் நகைகளை காணவில்லை என்பது தெரியவந்தது. இதனால் நகைகளுக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • கல் குவாரி எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்
    • துண்டு சிக்கியதால் நடந்த சம்பவம்

    கரூர்

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் சிங் (வயது 30) இவர், கரூர் மாவட்டம், தென்னிலையில் தங்கி, அதே பகு தியில் உள்ள, தனியார் கல் குவாரியில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று கல் குவாரியில் உள்ள, இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஜஸ்டின் சிங் போட்டிருந்த துண்டு எந்திரத்தில் சிக்கி, அவரையும் சேர்த்து இழுத்தது. இதில், தலையில் பலத்த காய மடைந்த ஜஸ்டின் சிங், சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென் னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் மோதி பெண் பலியானார்
    • நடந்து சென்றபோது விபரீதம்

    கரூர்

    கரூர் மாவட்டம், முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பேச்சியம்மாள், (வயது50). கூலி தொழி லாளியான இவர், கரூர் உழவர் சந்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர், காத்தப்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவர் ஓட்டி வந்த, பைக், பேச்சியம்மாள் மீது மோதியது.

    இதில், படுகாயமடைந்த பேச்சியம்மாளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பேச்சியம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதி விவசாயி பலியானார்
    • இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து

    அரியலூர்:

    அரியலூர் அருகேயுள்ள காட்டுப்பிரிங்கியம், அய்யா நகரை சேர்ந்தவர் ராஜாங்கம்(65). விவசாயியான இவர், தனது இரண்டாவது மனைவி பச்சையம்மாளை, இரு சக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு , பாலக்கரை அருகேயுள்ள கடலை கொல்லைக்கு சென்றார். அங்கு பணியை முடித்துவிட்டு அன்றிரவு இருவரும் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது பெரியநாகலூர், பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, பின்னால் சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதையறிந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், லாரி கண்ணாடிகளை உடைத்து, தீவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கயர்லாபாத் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முற்பட்டனர். ஆனால் பொதுமக்கள் உடலை கொடுக்காமல் , லாரிகளை இவ்வழியே இயக்கக் கூடாது என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×