என் மலர்

  நீங்கள் தேடியது "ரூ.22 கோடி சொத்து முடக்கம்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. #KartiChidambaram #ED
  புதுடெல்லி:

  கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
   
  இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

  இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. #KartiChidambaram #ED
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் பொதுக்கூட்டத்தில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். #MamataBanerjee #Megarally
  கொல்கத்தா:

  பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

  இந்நிலையில், பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  

  இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  நேற்றே பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்து சேர்ந்தனர். அவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இன்று காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

  தலைவர்கள் பேசுவதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #MamataBanerjee  #Megarally
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
  மணிலா:

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
   
  ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில், பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.  நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அதன்பின்னர் சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

  இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பைகால் பகுதியில் 16 பேரும், கிழக்கு விசாயாஸ் பகுதியில் 6 பேரும் என மொத்தம் 22 பேர் பலியாகி உள்ளனர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் 22 பேரும் விடுதலையானது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். #RahulGandhi #SohrabuddinSheikh ##SohrabuddinEncountercase
  புதுடெல்லி:

  பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பிடிபட்ட சொராபுதீன் சேக் குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி கவுசர், உதவியாளர் துல்சி பிரஜாபதி ஆகியோரும் கொல்லப்பட்டனர். இது போலி என்கவுண்ட்டர் என்று புகார் கூறப்பட்டதால் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் மும்பை சி.பி.ஐ. கோர்ட்டு, குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி 22 பேரையும் விடுதலை செய்தது.

  இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில், “யாரும் கொலை செய்யவில்லை... ஹரென் பாண்ட்யா, துல்சி பிரஜாபதி, லோயா, பிரகாஷ் தோம்ப்ரே, ஸ்ரீகாந்த் கண்டல்கர், கவுசர், சொராபுதீன் சேக், அவர்கள் வெறுமனே இறந்துவிட்டார்கள்” என்று கூறியுள்ளார். #RahulGandhi #SohrabuddinSheikh #SohrabuddinEncountercase
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரு குடும்பத்துக்கு அரை கிலோ ஆட்டிறைச்சி எடுத்து சமைப்பதே குதிரைக்கொம்பாக உள்ள நிலையில் உட்கார்ந்த இடத்தில் ஒருவர் 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக தின்று தீர்த்துள்ளார். #22KgMutton #Muttoneatingchallenge
  சென்னை:

  நோய்களுக்கு பயந்து அசைவப் பிரியர்கள் பலர் சைவத்துக்கு மாறிவிட்டாலும், சிலருக்கு உணவில் அசைவம் இல்லாவிட்டால் சாப்பிட இயலாது. என்னதான் அசைவப் பிரியர்களாக இருந்தாலும் அதிகபட்சமாக ஒருவரால் அரை கிலோ இறைச்சிக்கு மேல் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.

  ஆனால், பந்தயத்துக்காக ‘கிரில் மட்டன்’ என்றழைக்கப்படும் வெறும் சுட்ட ஆட்டிறைச்சியை தேனில் துவைத்து, இவர் சப்புக்கொட்டி சாப்பிடும் காட்சி, இவர் நவயுக பகாசுரனாக இருப்பாரோ.., என பார்ப்பவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

  22 கிலோ எடையுள்ள முழு ஆட்டையும் விழுங்கி முடித்த பிறகும் திருப்தி அடையாத இந்நபர் எலும்பு இடுக்கில் ஒட்டிக்கிடக்கும் துணுக்களவு இறைச்சியையும் சோற்றுத்தட்டில் உதறி எடுத்து, ரசித்து சுவைக்கும் சுகமே அலாதியானது. #22KgMutton  #Muttoneatingchallenge

  இதை வீடியோ வடிவில் காண..,  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உள்பட் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Indonesia #Landslide
  ஜகார்த்தா:

  இந்தோனேசியாவில் கடந்த மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர்.

  இந்நிலையில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உள்பட் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டெய்லிங் நடால் மாவட்டத்தில் உள்ள மவுரா சலாதி கிராமத்தில் இஸ்லாமிக் உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.

  இந்த பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அந்த பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. 

  கட்டிட இடிபாடுகளில் சிக்கி 11 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 11 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். இதையடுத்து நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும், 15-க்கு மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் என பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Indonesia #Landslide
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.எஸ்.மங்கலம் அருகே வீட்டில் இருந்த 22 ½ பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  தொண்டி:

  ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பண்ணாகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது42). இவர் தனது தங்கை சாந்தி திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த நகையை தனது தாயார் பாக்கியம் பொறுப்பில் வைத்திருந்தார்.

  இதை அறிந்த மர்ம மனிதர்கள் யாரும் வீட்டில் இல்லாதபோது 22 ½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம்.

  இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை மாவட்டத்தில் 2,225 லிட்டர் சாராயம்- மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 22 பேரை கைது செய்தனர்.
  நாகப்பட்டினம்:

  நாகை மாவட்டத்தில் மது மற்றும் சாராயம் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். இதன்பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல இடங்களில் சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

  மேலும், அவர்களிடம் இருந்து 2,225 லிட்டர் புதுச்சேரி சாராயம், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டத்தில் தொடர் நடவடிக்கையின் பேரில் சாராயம் மற்றும் மது விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami #KuthiraiyarDam
  சென்னை:

  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குதிரையாறு அணையில் இருந்து  பாசனத்துக்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குதிரையாறு அணையில் இருந்து நாளை முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை என மொத்தம் 22 நாள்களுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.  பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரால் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #KuthiraiyarDam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. #US #India #2plus2dialogue
  வாஷிங்டன் :

  பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை அமெரிக்காவுக்கு சென்றபோது இரு நாடுகள் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 6-ம் தேதி இந்தியா - அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

  அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கெல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டது.

  பாதுகாப்புத்துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது, உலகளாவிய மற்றும் பிராந்திய நிலவரம் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த சந்திப்பை அமெரிக்கா ஒத்திவைப்பதாக காரணம் ஏதும் கூறாமல் கடந்த மாதம் அறிவித்தது.

  இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்தியா - அமெரிக்கா இடையிலான 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹீதர் நௌவேர்ட் இன்று அறிவித்துள்ளார். 
  #US #India #2plus2dialogue
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print