search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024 parliamentary election"

    • மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்துள்ளார் சோனியா காந்தி
    • கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், அவரது மகளும் கட்சியின் பொது செயலாளருமான  பிரியங்கா காந்தியும் சென்னை வந்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள கூட்டணியின் தமிழகத்தின் முக்கிய கட்சியான தி.மு.க.வின் சார்பில் அக்கட்சி எம்.பி. கனிமொழி முன்னிலையில் இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். அங்கு சோனியா மற்றும் பிரியங்கா, தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தனர்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் கட்சி எம்.எல்.ஏ,க்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவருடனும் கட்சி நிலவரம், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கான வழிமுறைகள் மற்றும் தி.மு.க.வுடன் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    முன்னதாக கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுமாறு நிர்வாகிகளுக்கு சோனியா அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

    சுமார் 5 வருடங்கள் கழித்து சோனியா, தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க.-விற்கு எதிராக பல கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்துள்ளன
    • நாடு 140 கோடி இந்தியர்களுக்கும் சொந்தம் என்கிறார் கெஜ்ரிவால்

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.

    இக்கூட்டத்தொடர் குறித்து ஆகஸ்ட் 31-ல் அறிவிக்கும் போது, "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். கூட்டத்தொடரில் என்னென்ன முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படும் என தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து சிறப்புக் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இச்செய்திக்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய தலைநகர் புது டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திற்கான அழைப்பிதழில், அவர் பெயரை குறிப்பிடும் இடத்தில் "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க. (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) எதிராக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து இ.ந்.தி.யா. (I.N.D.I.A.) எனும் கூட்டணியை உருவாக்கின. இதில் ஆம் ஆத்மி கட்சி (AAP) எனப்படும் புது டெல்லியின் ஆளும் கட்சியும் அடக்கம்.

    "இந்தியா" எனும் பெயரை "பாரத்" என மாற்றும் முயற்சி நடைபெற போவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், புது டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    இது சம்பந்தமான அதிகாரபூர்வ தகவல் எனக்கு வரவில்லை. 140 கோடி மக்களுக்கான இந்நாடு ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்கட்சிகள் இ.ந்.தி.யா. என ஒரு கூட்டணி அமைத்து விட்டால், இந்தியாவின் பெயரையே 'பாரத்' என மாற்றுகிறீர்கள். எங்கள் கூட்டணியின் பெயரை 'பாரத்' என மாற்றினால், நாட்டின் பெயரை 'பாரத்' என்பதிலிருந்து 'பா.ஜ.க.' (BJP) என நீங்கள் மாற்றுவீர்களா என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத போதிலும் இந்த சர்ச்சையில் பா.ஜ.க. பிரமுகர்களும், எதிர்கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கடுமையான கருத்துக்களை முன்வைத்து விவாதித்து வருகின்றனர்.

    • கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை அறிவித்தது
    • சமூக வலைதள பணிக்குழு, பிரச்சார கமிட்டி, ஊடக பணிக்குழு, தேர்தல் ஆராய்ச்சி பணிக்குழு அமைக்கப்பட்டது

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.

    இந்த கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்றது.

    கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் வகுத்தல், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவையாக இருப்பதாலும், தலைவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் தோன்றாமல் இருக்கும் வகையிலும், தேர்தலுக்கு கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை இந்த கூட்டணி அறிவித்துள்ளது.

    அதே போன்று கூட்டணியில் உள்ள கட்சிகளில் இருந்து 11-பேர் அடங்கிய சமூக வலைதளங்களுக்கான பணிக்குழுவும், 18-பேர் அடங்கிய பிரச்சார கமிட்டியும், 16-பேர் கொண்ட ஊடக பணிக்குழுவும், 10-பேர் கொண்ட தேர்தல் திட்டங்களுக்கான ஆராய்ச்சி பணிக்குழுவும் அமைத்துள்ளது.

    இவையனைத்திலும், மேலும் ஒருவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் பின்னர் சேர்க்கப்படுவார் என எதிர்கட்சி கூட்டணி தெரிவித்துள்ளது.

    • இக்கூட்டணியின் இரண்டு சந்திப்புகள் பாட்னாவிலும், பெங்களூரூவிலும் நடைபெற்றது
    • கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் மக்களவை தேர்தலை சந்திப்போம்

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.

    இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.

    இந்நிலையில் இக்கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடைபெற்றது.

    கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் வகுத்தல், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவையாக இருப்பதாலும், தலைவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் தோன்றாமலிருக்கும் வகையிலும், தேர்தலுக்கு கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை இக்கூட்டணி அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த சரத் பவார், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர் பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த லல்லன் சிங், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சாடா, ஜனதா முக்தி மோர்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜாதவ் அலி கான், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெஹ்பூபா முப்தி ஆகியோரை உள்ளடக்கிய 13-பேர் கொண்ட குழு ஒருங்கிணைக்கும் பணியை கவனிக்கும்.

    "வேற்றுமைகளை மறந்து மக்களவை தேர்தலுக்காக ஒன்றாக பணியாற்ற உறுதியெடுத்துள்ளோம். நாடு முழுவதும் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் நடத்த உள்ளோம்," என்றும் எதிர்கட்சி கூட்டணி அறிவித்துள்ளது.

    ×