என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்க பங்குச்சந்தை தினமும் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது.
    • அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 4 டிரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    குறிப்பாக வரி விதிப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளார். கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த நாடுகள் பதிலடியாக அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது. மேலும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே தனது வரி விதிப்பு நடவடிக்கையால் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அமெரிக்கப் பொருளாதாரம் மாற்றக் காலத்தில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

    அவரது இந்த கருத்தை தொடர்ந்து உலகளவில் பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    பொருளாதார மந்தநிலை குறித்து முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்திருந்த பங்குகளை விற்பனை செய்வதை அதிகரித்தனர்.

    இதன்மூலம் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் அமெரிக்க பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலருக்கும் மேல் குறைந்தது. அமெரிக்க பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான எஸ்-பி 500, பிப்ரவரி 19-ந்தேதி அடைந்த வரலாற்று உச்சத்தில் இருந்து 8 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆசியாவிலும் பங்குச் சந்தைகள் சரிந்தன.

    சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பால், ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுனிதாவும், வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ -9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள்.
    • ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்-இன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் செல்கிறார்.

    விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா அறிவித்துள்ளது.

    ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

    அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அவர் இருவரும் மார்ச் 16 ஆம் தேதி பூமி திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சுனிதாவும், வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள்.

    ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ -9 மிஷன்:

    நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்-இன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்கலம் வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

    அந்த விண்கலத்தில் இரண்டு இருக்கைகள் சுனிதா மற்றும் வில்மோருக்காக காலியாக விடப்படும். அந்த விண்கலத்தில் அவர்கள் நால்வரும் மீண்டும் பூமிக்கு தியூரம்புவதாக திட்டம். அதன்படி அவர்கள் நான்கு பேரும் மார்ச் 16 அன்று ஒன்றாகத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
    • வாகன நிறுத்துமிடத்தில் இருந்த கார்கள் தீப்பற்றி எரிந்தன.

    அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லம் முன்பிருந்த வாகன நிறுத்துமிடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த சிறுது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

    விபத்தில் சிக்கிய விமானத்தில் ஐந்து பேர் இருந்தனர். அவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விமானம் தீப்பிடித்ததை அடுத்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

    தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அந்தப் பகுதி முழுக்க கரும்புகை எழுந்தது. விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து விரைந்து வந்த தீயனைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சிறிய ரக விமானம் விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில், அதில் பயணித்தோர் படுகாயங்களுடன மீட்கப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரேல் மின்சார கழகத்திலிருந்து காசா பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்துவதற்கான உத்தரவில் நான் கையெழுத்திட்டுள்ளேன்.
    • கடந்த வாரம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததும், காசாவுக்கான மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்களை நிறுத்தியது.

    இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் காசா நகரம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த 13 மாத தாக்குதலில் 56,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்தனர்.

    கடந்த ஜனவரியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் காசாவில் சிதிலமடைந்த தங்கள் இருப்பிடங்களுக்கு லட்சக்கணங்கனோர் திரும்பினர். இருப்பினும் அடிப்படை வசதிகள், சுகாதர மற்றும் மருத்துவ உதவிகளின்றி காசா மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    கடந்த மாதங்களில் பிணை கைதிகள் பரிமாற்றம் நடக்கும் வரை அமைதி காத்த இஸ்ரேல், கடந்த வாரம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததும், காசாவுக்கான உணவு, தண்ணீர், மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்களை அடாவடியாக நிறுத்தியது.

    இந்நிலையில் காசாவுக்காக மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் 20 லட்சதிற்கும் அதிகமான மக்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

    ஏற்கனேவே காசா நகர கட்டமைப்பு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதால் மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்கள் மற்றும் சூரிய பேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்நிலையில் கிடைத்துவந்த சொற்ப மின்சாரமும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இன்றி சிகிச்சை அளிப்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் மின்சார துண்டிப்பு மேலும் ஆழாமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் எலி கோஹன் அளித்த பேட்டியில், இஸ்ரேல் மின்சார கழகத்திலிருந்து காசா பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்துவதற்கான உத்தரவில் நான் கையெழுத்திட்டுள்ளேன். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் இருந்து ஹமாஸை ஒழிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

    இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அமைப்பினரை விட தங்கள் கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இதனால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலை எழுந்துள்ளது.

    • வெள்ளை மாளிகை பகுதியில் ஆயுதம் ஏந்திய, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உலா வந்தார்.
    • அந்த நபரை அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளராக இருந்த டொனால்டு டிரம்ப்பை கொல்ல முயற்சி நடந்தது. மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் டிரம்பின் காதில் காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே, தேர்தலில் வென்ற டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றி வந்துள்ளார். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த நபரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த நபர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தாக்க திட்டமிட்டு அந்த நபர் அங்கு சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துப்பாக்கிச்சூடு நடந்தபோது அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் வென்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பெலாரஸ் வீராங்கனையான அரினா சபலென்கா, அமெரிக்காவின் கெஸ்லர் உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 3-6, 7-6 (7-4) என வென்று ஜப்பான் வீராங்கனை மோயூகாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், முன்னணி வீரரும், செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், நெதர்லாந்தின் போடிக் வான் டே உடன் மோதினர்.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் ஜோகோவிச் 1-6 என இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் இருந்து வருகிறது.
    • பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணங்கள், இந்தியா- பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், பிரான்சில் கரோலின் கார்சியா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 6-3, 6-3 என வென்று, நெதர்லாந்து வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

    ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சீனாவின் யுன்சாவ்கேட் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-2 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலின் தியாகோ செய்போத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரூபியோ பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார்.
    • எலான் மஸ்க்கின் இந்த கருத்துக்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

    அமெரிக்காவில் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் மற்றும் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமெரிக்கா நாட்டில் அரசு ஊழியர்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இவ்வாறு தெரிவிக்காத ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, எலான் மஸ்க் இடையே கடும் வார்த்தை மோதல் எற்பட்டது. ரூபியோ பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். இதற்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

    இதனையடுத்து, டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, "ரூபியோ-எலான் மஸ்க் மோதல் இல்லை. அவர்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
    • வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்தித்து பேசினார்.

    ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.

    மேலும் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்திப்பின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி மறுத்ததால் டிரம்ப் அதிருப்தி அடைந்தார்.

    இதையடுத்து உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஷியா தொடுத்து வருகிறது. இதனால் ரஷியா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் விதிப்பது குறித்து நான் பரிசீலனை செய்து வருகிறேன். அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதி தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் அமலில் இருக்கும். ரஷியாவும், உக்ரைனும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷியா அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்கா 11-ந்தேதி சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×