என் மலர்
அமெரிக்கா
- சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்துவர உள்ளது.
- ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்த ஃபால்கன் 9 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ராக்கெட் தான் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவர உள்ளது.
ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இன்றைய திட்டம் தாமதமாகி உள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நாசா விண்வெளி வீரர்களான ஆனி மெக்லைன், நிகோல் ஏயர்ஸ், ஜப்பான் விண்வெளி துறையை சேர்ந்த தகுயா ஒனிஷி மற்றும் ரோஸ்கோமோஸ் விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி விட்டனர். மேலும், இந்த ராக்கெட்டும் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்றைய திட்டப்படி ஸ்பேக்ஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்வெளிக்கு புறப்பட்டு இருந்தால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19-ம் தேதி பூமிக்கு திரும்பியிருப்பர். தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதமாகி உள்ளது.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் 3வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-3 என கோகோ காப் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிண்டா 6-3, 6-4 என அடுத்த இரு செட்களை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் 3வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் முன்னாள் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியாவின் மிர்ரா அலெக்சாண்ட்ரோ உடன் மோதினார்.
இதில் அலெக்சாண்ட்ரோ 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னாள் சாம்பியனான எலினா ரிபாகினா அதிர்ச்சி தோல்வ் அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
2023-ம் ஆண்டில் இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் 2வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் 2வது போட்டி இன்று நடந்தது.
இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, பிரிட்டனின் ஹென்றி பேட்டன்-பின்லாந்தின் ஹாரி ஹீலியோவரா ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய யூகி பாம்ப்ரி ஜோடி, 2வது செட்டை 7-5 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை யூகி பாம்ப்ரி 10-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
- தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் எச்சரிக்கையாக இருங்கள்.
மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்பவர்களால் மின்சாரம் பாய்ச்சியும், பணயக்கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில், மியான்மர் - தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபட பணியில் அமர்த்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டு நேற்று முன் தினம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 266 இந்தியர்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 266 இந்தியர்களை நேற்று இந்திய விமானப்படை (IAF) விமானம் மூலம் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய அரசு ஏற்பாடு செய்தது. முன்னதாக திங்களன்று, 283 இந்தியர்களும் இதேபோல் திருப்பி அனுப்பப்பட்டனர்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் இந்திய தூதரகங்கள் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன்படி இதுவரை 549 இந்தியர்கள் மீட்டு தாயகம் அழைத்துவரப் பட்டுள்ளனர்.
மேலும் தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
- வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் பேசினார்.
- உலக சமூகம் அமெரிக்காவை பல காலமாக ஏமாற்றி வருகிறது என்றார்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதையடுத்து இந்தியா மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, அதிபர் டிரம்ப் நியாயமான, சமநிலையான வர்த்தக நடைமுறை களை விரும்புகிறார்.
கனடாவில் அமெரிக்க வெண்ணை பொருட்களுக்கு 300 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் அமெரிக்க மதுபானங்களுக்கு 150 சதவீத வரி விதிக்கிறார்கள். ஜப்பானை பொறுத்தவரை அரிசிக்கு 700 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
துரதிருஷ்டவசமாக, கடந்த பல தசாப்தங்களாக கனடா நம்மை மிகவும் நியாயமாக நடத்தவில்லை. உலக சமூகம் அமெரிக்காவை பல காலமாக ஏமாற்றி வருகிறது என்றார்.
- டெஸ்லாவுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள்.
- எலான் மஸ்க்குடன் சேர்நது அந்த காரில் டிரம்ப் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர் தோழனான எலான் மஸ்க் நடத்தும் கார் கம்பெனியான டெஸ்லாவுக்கு அண்மை காலமாக விளம்பரம் செய்து வருகிறார்.
டெஸ்லா காரை அனைவரும் வாங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் தனக்கென சிவப்பு நிற மாடல் S டெஸ்லா காரை டிரம்ப் வாங்கியுள்ளார். எலான் மஸ்க்குடன் சேர்நது அந்த காரில் டிரம்ப் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
டெஸ்லா நிறுவன கார்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்காவில் எழுந்துள்ளன. மேலும் பங்குச்சந்தையில் அந்நிறுவனம் சரிவைச் சந்தித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மஸ்க்கின் கார்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க, டெஸ்லா கார் வாங்குவதாக டிரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்திருந்தார்.


இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகை வளாகத்தில் டெஸ்லா கார்களில் காட்சிப்படுத்தல் நிகழ்ந்தது. அப்போது பல வகை டெஸ்லா மாடல் கார்களை பார்வையிட்ட டிரம்ப், தனக்கு பிடித்தது என கூறி மாடல் S சிவப்பு பெயிண்ட் அடித்த காரை விலைக்கு வாங்கியுள்ளார். எலான் மஸ்க் தள்ளுபடி அளிப்பதாக கூறியும் அதை ஏற்காத டிரம்ப், காரின் ஒரிஜினல் விலையான 76,880 டாலரை (சுமார் ரூ. 67 லட்சம்) கொடுத்து பேரத்தை முடித்துள்ளார்.
இதற்கிடையே டெஸ்லா ஷோரூம்கள், சார்ஜிங் நிலையங்கள் மற்றும் டெஸ்லா வாகனங்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. டெஸ்லா காரை புறக்கணிக்க வேண்டும், எலான் மஸ்க் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷங்கள், பதாகைகளுடன் போராட்டங்கள் நடக்கின்றன.

இதுகுறித்து பேசிய டிரம்ப், டெஸ்லாவுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள். அவர்கள் எங்கள் கையில் சிக்கும்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று கொந்தளித்தார்.
- இந்திய வருகை அவரின் இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணமாக இருக்கும்.
- ஐரோப்பிய அரசாங்கங்களை ஜே.டி. வான்ஸ் கடுமையாக சாடியிருந்தார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை அதிபருடன் அவரது மனைவி உஷா வான்ஸூம் இந்தியா வரவுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் ஊடக நிறுவனமான பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த வகையில், அமெரிக்காவின் துணை அதிபராக அவர் மேற்கொள்ள இருக்கும் இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணமாக அவரது இந்திய வருகை இருக்கும்.
முதல் சர்வதேச பயணத்தின் போது துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். உரையின் போது சட்டவிரோத குடியேற்றம், மத சுதந்திரம் மற்றும் தேர்தல் விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய அரசாங்கங்களை ஜே.டி. வான்ஸ் கடுமையாக சாடியிருந்தார். இவரது உரை உலகளவில் எதிர்வினைகளை ஏற்படுத்தி இருந்தது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை குறித்து அவர் பேசிய கருத்துக்கள் அமெரிக்க அரசுடன் நட்புறவு கொண்ட நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த உஷா வான்ஸ், தான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு முதல் முறையாக அமெரிக்காவின் 'Second Lady'-ஆக வருகை தரவுள்ளார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் 3வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டில் மெத்வதேவ் 2-0 என முன்னிலை வகித்த நிலையில், அலெக்ச் மிச்செல்சன் போட்டியில் இருந்து விலகினார்.
இதனால் மெத்வதேவ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டி நேற்று நடந்தது.
இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, போலந்தின் ஜேன் ஜிலின்ஸ்கி-பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-8 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- நீரில் இருக்கும் ராட்சத முதலை உணவுக்காக வெளியே வருகிறது.
- வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சிங்கம், புலி போன்ற ஆக்ரோஷமான விலங்குகளையும் கூட சில நாடுகளில் அனுமதி பெற்று வீடுகளில் வளர்த்து வருகிறார்கள். என்னதான் செல்லப்பிராணி போல அவற்றை வளர்த்தாலும் திடீரென அவை ஆவேசமாகி விடும். அதுபோல முதலையின் ஆக்ரோஷமும் பயங்கரமாக இருக்கும்.
நீரிலும், நிலத்திலும் வசிக்கும் தன்மை கொண்ட முதலை திடீரென ஆவேசமாகும் காட்சிகள் இணையத்தில் வைரலாவது உண்டு. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராட்சத முதலைக்கு தனது வெறும் கைகளால் பயமின்றி உணவு அளிக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், நீரில் இருக்கும் ராட்சத முதலை உணவுக்காக வெளியே வருகிறது. அப்போது பயிற்சி பெற்ற நிபுணர் ஒருவர் தனது வெறும் கைகளால் அந்த ராட்சத முதலைக்கு உணவு அளிக்கிறார். அவரிடம் முதலை அடக்கமாக நடந்து கொள்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
ஒரு பயனர், முதலைக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டார். அதே நேரம் சில பயனர்கள், நன்கு பயிற்சி பெற்ற காட்டு விலங்குகளின் நடத்தையில் சில நேரங்களில் கணிக்க முடியாது என எச்சரித்தனர். மேலும் சில பயனர்கள், தங்கள் பதிவில் இதுபோன்ற சாகசங்கள் முட்டாள்தனமானது என விமர்சித்தனர்.
- இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும்.
- டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம்
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவரது அரசில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் உள்ளார்.
இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, நான் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும். நான் ஜப்பான், தாய்லாந்து, இந்தியாவுக்குச் செல்வேன்.

அதன்பின் அமெரிக்காவுக்கு திரும்பும்போது பிரான்சுக்கு செல்ல உள்ளேன். அதிபர் டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது அவரை துளசி கப்பார்டை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.







