என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க சிறைகள்"

    • லூசியானா சிறையில் துளை போட்டு 10 கைதிகள் தப்பியோடினர்.
    • உடந்தையாக இருந்த 3 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த சிறைச்சாலையில் எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். ஆனால் அங்குள்ள சில கைதிகள் நள்ளிரவு நேரம் கழிப்பறை சென்றிருந்தனர்.

    அதன்பின் கழிப்பறையின் பின்னால் உள்ள துளை வழியாக 10 கைதிகள் ஏறி குதித்து தப்பினர். இந்தச் சம்பவம் நடந்த 7 மணி நேரத்துக்குப் பிறகே சிறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தப்பிச்சென்ற கைதிகள் சிறையில் இருந்து வெளியேறியதும் சீருடைகளை மாற்றி விட்டு வேறு ஆடைகளை அணிவது தெரிய வந்தது.

    பின்னர் சந்தேகம் வராத வகையில் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    தப்பியோடியவர்களில் ராபர்ட் மூடி (21) என்ற கைதியை மட்டும் போலீசார் பிடித்தனர். அவர் ஏற்கனவே இதேபோல் 2 முறை தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, மற்ற கைதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    விசாரணையில் கைதிகள் நள்ளிரவு நேரம் தங்களது அறையில் இருந்து வெளியேற அதிகாரிகள் சிலர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக செயல்பட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    அமெரிக்காவில் குடியேறும் ஆசையில் சென்று எல்லைப்பகுதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு சட்ட ஆலோசனை கிடைக்க உதவுமாறு ஆரேகான் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Indianimmigrants #USdetentioncentre
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 20-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த சுமார் 2 ஆயிரம் சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த ஒருமாத காலத்தில் தெற்காசியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் ஆசையுடன் சென்ற 123 பேர் அங்குள்ள ஆரேகான் மாநிலத்தில் உள்ள ஷெரிடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரியவந்தது.

    இவர்களில் 52 பேர் இந்தியர்கள் என்றும் பெரும்பாலானவர்கள் இந்தி மற்றும் பஞ்சாபி மொழி பேசுவதாகவும், சிலர் மட்டும் சீனர்கள் எனவும் தெரியவந்தது. இதுதவிர மெக்சிகோ எல்லைப்பகுதியில் சுமார் 50 இந்தியர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    மிகவும் குறுகிய தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை யாரும் சந்தித்து சட்ட உதவிகளை அளிக்கவும் அதிகாரிகள் தடை செய்துள்ளதாக ஆரேகான் இந்தியா பசிபிக் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.  

    இந்த அநியாயத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க பொது உரிமைகள் கழகம் மற்றும் மற்றொரு தொண்டு நிறுவனம் ஆரேகான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி மைக்கேல் சைமன் எல்லைப்பகுதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு சட்ட ஆலோசனை கிடைக்க உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.



    நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலவ வேண்டும் என்பது நமது தலையாய கொள்கைகளில் ஒன்றாகும். சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட மண்ணில் வாழும் நாம், தேவைப்படுபவர்களுக்கு சட்ட உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    எனவே, எல்லைப்பகுதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குடியேறிகளுக்கு உடனடியாக சட்ட ஆலோசனை கிடைக்க உதவ வேண்டியது நமது கடைமையாகும் என குறிப்பிட்ட நீதிபதி, சிறையில் அடைக்கப்பட்டவர்களை வெளிநபர்கள் சந்திக்க கூடாது என குடியுரிமைத்துறை அதிகாரிகள் விதித்திருந்த உத்தரவுக்கு தடை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். #Indianimmigrants #USdetentioncentre

    ×