போப் தோற்றத்தில் டிரம்ப் - வைரலாகும் AI புகைப்படம்

போப் பிரான்சிசின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நான் அடுத்த போப்பாக இருக்க விரும்புகிறேன் என்று கிண்டலாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
போப் தோற்றத்தில் டிரம்ப் - வைரலாகும் AI புகைப்படம்
Published on: 

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.

வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது அடுத்த போப் ஆக யாரை வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, நானே அடுத்த போப்பாக இருக்க விரும்புகிறேன். அதுவே என்னுடைய முதல் தேர்வாக இருக்கும் என்று கிண்டலாக டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், போப் தோற்றத்தில் டிரம்ப் இருக்கும் இருக்கும் AI புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com