என் மலர்tooltip icon

    துபாய்

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
    • இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.

    துபாய்:

    ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    எல்லையில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கும்போது, நாம் எப்படி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட முடியும்?

    இது மிகவும் சாதாரண விஷயம். ஒரு கிரிக்கெட் போட்டியைத் தவிர்ப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது.

    நமது ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது, அதனுடன் ஒப்பிடும்போது கிரிக்கெட் எல்லாம் ஒன்றுமே இல்லை.

    எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும்போதும், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடிக்கும்போதும், நாம் கிரிக்கெட் விளையாடச் செல்வது சரியாக இருக்காது.

    இந்தப் பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை கிரிக்கெட் என்பது மிகவும் சிறிய விஷயம். தேசமே எப்போதும் முதன்மையானது

    ரத்தமும் நீரும் ஒன்றாக ஓடமுடியாது என்பது நமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 4 சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்தார்.
    • இங்கிலாந்தின் சோபியா டன்க்லி ஜூலை மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றுள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. சமீபத்தில் அறிவித்தது.

    இந்தப் பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இந்த விருதை கில் ஏற்கனவே 3 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 4 சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்ததால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்தின் சோபியா டன்க்லி ஜூலை மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றுள்ளார்.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது
    • ஜூலை மாத பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் இடம்பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய தலா 3 வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

    அதன்படி, ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டதை தொடர்ந்து பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்துக்கு முன்னேறினார்.
    • பந்துவீச்சாளருக்கான தரவரிசை பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (829 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 2வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் திலக் வர்மா (804 புள்ளி) 3ம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் (798 புள்ளி) 4வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 5வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி (706 புள்ளி) 3-வது இடத்தில் உள்ளார்.

    டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (252 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார்.

    • ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 10 இடங்கள் முன்னேறினார்.
    • இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சார்பில் பெண்கள் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அதிரடியாக 10 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    33வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா தற்போது 23வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15-வது இடம் பிடித்துள்ளார்.

    தீப்தி சர்மா பந்துவீச்சு தரவரிசையிலும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வருகிறார்.

    • டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 2வது இடத்துக்கு முன்னேறினார்.
    • இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி 11 இடம் முன்னேறி 43-வது இடம் பிடித்தார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சார்பில் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடந்த 6 ஆண்டாக டாப்-10 பட்டியலில் இடம்பெற்று வருகிறார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையில் 3வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா, ஒரு இடம் முன்னேறி, 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தானின் சாடியா (746) விட 8 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி 11 இடம் முன்னேறி 43-வது இடம் பிடித்தார்.

    பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் தொடர்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா 12-வது இடம் பிடித்துள்ளார்.

    • ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டுசெல்ல உதவியதாக குற்றச்சாட்டு.
    • இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மூவரை ஈரான் அரசு தூக்கிலிட்டது.

    துபாய்:

    இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். ஆனாலும் இரு நாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.

    இதற்கிடையே, இஸ்ரேலுடனான மோதலின் போது கடந்த 10 நாட்களில் உளவு பார்த்ததாக ஏற்கனவே 3 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியிருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்நாட்டின் அசர்பைஜான் மாகாணம் உர்மியா சிறைச்சாலையில் அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி, ரசுல் அகமது ரசுல் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மூவரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது என ஈரானிய நீதித்துறை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு உதவியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டம் மந்தனாவின் முதலிடத்தை மீண்டும் பெற உதவியது
    • டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2019-க்குப் பிறகு முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடியது முதலிடத்தை மீண்டும் பெற உதவியது

    தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வார்ட், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் எடுத்த 27 மற்றும் 28 ரன்கள் உட்பட 19 மதிப்பீட்டு புள்ளிகளை இழந்தது ஸ்மிருதி மந்தனா முன்னிலை பெற உதவியது.

    இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர்-பிரண்ட் இரண்டாவது இடமும், தென் ஆப்பிரிக்காவின் வால்வார்ட் 3-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ஒருநாள் தரவரிசை பட்டியலில் மந்தனா தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4-வது இடத்தில் உள்ளார்.

    • தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • புகைமூட்டம் பரவ தொடங்கியதில் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர்.

    தொடங்கியதில் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர்.

    தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    67 மாடிக் கட்டடத்தில் வசித்த 3820 குடியிருப்பு வாசிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதால் உயிர்ச்சேதம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
    • ஐ.சி.சி. மே மாத சிறந்த வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    அதன்படி, மே மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர்ப்பட்டியலை ஐ.சி.சி. அறிவித்தது.

    அதில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் பிரண்டன் மெம்முல்லன் (ஸ்காட்லாந்து), மிலிண்ட் குமார் (அமெரிக்கா) மற்றும் முகமது வாசீம் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை யு.ஏ.இ. அணியின் கேப்டன் முகமது வாசீம் வென்றுள்ளார்.

    இதேபோல், மே மாத சிறந்த வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றுள்ளார்.

    • துபாயில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது.
    • அந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் அமெரிக்கக் கொடி ஒளிபரப்பானது.

    துபாய்:

    சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது.

    சுமார் 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. முழுவதும் கருப்பு நிற சலவைக்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.

    இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

    இதற்கிடையே, துபாயில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் துபாயில் வந்துள்ளதை முன்னிட்டு, புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் அமெரிக்கக் கொடி ஒளிபரப்பானது.

    • ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
    • இந்தத் தாக்குதலில் 74 பேர் பலியாகினர். மேலும் 171 பேர் காயம் அடைந்தனர்.

    துபாய்:

    பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகின்றது. செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகள் உள்ள பகுதிகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.

    இந்நிலையில், ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, ஹவுதிகள் இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணையை ஏவியதாகவும், அதனை இஸ்ரேல் இடைமறித்ததாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

    ×