என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்குத்தண்டனை: ஈரான் அரசு
    X

    இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்குத்தண்டனை: ஈரான் அரசு

    • ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டுசெல்ல உதவியதாக குற்றச்சாட்டு.
    • இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மூவரை ஈரான் அரசு தூக்கிலிட்டது.

    துபாய்:

    இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். ஆனாலும் இரு நாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.

    இதற்கிடையே, இஸ்ரேலுடனான மோதலின் போது கடந்த 10 நாட்களில் உளவு பார்த்ததாக ஏற்கனவே 3 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியிருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்நாட்டின் அசர்பைஜான் மாகாணம் உர்மியா சிறைச்சாலையில் அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி, ரசுல் அகமது ரசுல் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மூவரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது என ஈரானிய நீதித்துறை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு உதவியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×